புன்னகையின் பயணம்…

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

த.அகிலன்


சூரியன்
தன் ரகசியங்களோடு
நுழைகின்றான் எங்கும்
விசாரணைகள் ஏதுமின்றி
எங்கும் நிரம்பிவழிகிறது
சூரியனின் ரகசியங்கள்
காற்றுக்குக்
கேள்விகளுமில்லை
வேலிகளுமில்லை….

என்னுடையதும்
உன்னுடையதும்
கனவுகளுக்கும் கூட
ரகசியம் கிடையா

எனது
முற்றத்தில் விழுகிறது
பச்சை வேட்டைக்காரர்களின்
நிழல்…..

துப்பாக்கியின்
கண்களிடம்
காதல் இல்லை
கோபமும் கிடையாது

ஒரு
பெருநதியின்
ஆழத்தில் தொலைக்கப்பட்டு விட்ட சாவி

என்னிடம்
நம்பிக்கைகள் இல்லை
முதலைகளால்
அதை மீட்டுவிட முடியுமென்று…..

சூரியனின்
தடங்களற்ற தொலைவிற்கும்
காற்றால்
காவுகொள்ளப்பட முடியாத
சுவடுகளைக் கைவிட்ட படியும்
குயிலின் குரல்வழியே
பயணிக்கும்
என்புன்னகை
யாரும் அறியாதபடிக்கு….

த.அகிலன்
agiilan@yahoo.co.uk

Series Navigation

த.அகிலன்

த.அகிலன்