This entry is in the series 20021221_Issue

புஷ்பா கிறிஸ்ரி


மார்கழி மாதத்து

மாபனிக் குளிரில்

மாமரி அன்னை

மரியின் மடியில்

பார்புகழ் மன்னன்

பாலகன் யேசு

தாய் மடியில்

தானாய்த் தவழ்ந்தான்

பாடிடும் ஆயரும்

பாராளும் வேந்தரும்

நாயகன் யேசுவை

நயமாய் வாழ்த்தினர்

விண்ணக வேந்தன்

மண்ணில் தவழ்ந்திட்ட

நந்நாள் மார்கழி

நாமும் வாழ்த்துவோம்

அன்பு உள்ளங்கள்

அனைவரும் மகிழ்ந்து

ஆனந்தம் கொண்டாடி

ஆடிப் பாடி

கொண்டாடி மகிழ்ந்திடும்

நத்தார் பண்டிகை

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation