பார்த்துப் போ…

This entry is part [part not set] of 14 in the series 20010415_Issue

கோகுல கிருஷ்ணன்


பார்வையிலே
பூ வெச்சவுக
பாதையில முள் வெப்பாக,
பார்த்துப் போ பால்மகனே!

உசிரு தேய
உழைச்சி வந்து
ஒரு நிமிஷம்
ஓய்வெடுத்தா – உன்
வேர்வையையும் வித்திருவாக
வாசமுள்ள சந்தனமே!

சத்தமாச் சொல்றதுதான்
இங்க
சத்தியமா ஆகிப்போகும்.
சட்டம் நீதியெல்லாம்
பணத்துக்கு
சட்டையாகும்.

வீதிக்கொண்ணா
சாதி வெச்சு
ரத்தத்தைக் கேப்பாக;
வெளக்கு வெக்குமுன்னே
வீடு வந்து சேரு ராசா.

மனசை மதிக்கவே
மனுசன் யாருமில்ல;
ஓரறிவு குறைஞ்சாலும்
அந்த
மிருகமொன்னும்
குறைஞ்சதில்லை.

Series Navigation

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.