பாரதியாக முயன்று….

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

சித்தார்த் வெங்கட்


என்னால் பாரதியாக முடியாது.

நேற்றும் நாளையும்
என் முதுகில் அமர்ந்திருக்க,
நான் எப்படி அடைவது அந்த உயரத்தை ?

முயற்சியில் தவறில்லை.
ஆனால் திரிசங்காய்
மாறும் அபாயம் அதிகம்.

காலங்களை வெல்வது ஒன்றும்
கற்கும் கலை அல்லவே.

கனவுப்பகர்தலுக்கே நேரமற்றுப்போன
எனது வாழ்வில்,
கனவிலேயே வாழ்வது எங்கனம் சாத்தியம் ?

பணத்திற்கு அப்பாலும்
என் பார்வையை செலுத்த
நான் இன்னும் குழந்தை அல்லவே.

என்னால் பாரதியாக முடியாது.

பாரதியாய் பிறந்தாலன்றி
யார்கும் அது கடினமென்றே தோன்றுகிறது.

siddhu_venkat@yahoo.com

Series Navigation