பாம்பே குண்டு வெடிப்பை பற்றிய அனுராக் காஷ்யப்பின் ப்ளாக் ·ப்ரைடே – இந்தித் திரைப்படம். ஒரு பார்வை

This entry is part [part not set] of 27 in the series 20070628_Issue

விஸ்வாமித்திரா


2004ல் எடுக்கப் பட்ட இந்தப் படத்தைத் தடை செய்யக் கோரி இஸ்லாமியத் தீவீரவாதிகள் கேஸ் போட்டதால் வழக்குத் தொடர்ந்து நடந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினால் 2007ல் வெளியிடப் பட்டுள்ளது. இதற்கிடையில் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பெரும் வரவேற்பையும் விருதையும் பெற்றுள்ளது.

†¥சைன் சைதி எழுதிய ப்ளாக் ·ப்ரைடே என்ற புத்தகத்தை அப்படியே சினிமாவாக எடுத்துள்ளனர் மிட் டே பத்திரிகைக்காரர்கள். அனுராக் காஷ்யப் என்பவர் இயக்கியிருக்கிறார். எவ்விதமான சூடோ செக்குலார் பஜனைகளும், நியூட்ரல் ஜெல்லிகளும் இல்லாத க்ளீன் டாக்குமெண்டரி.

கருப்பு வெள்ளி, மார்ச் 12 1993 இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்ந்த ஒரு கருப்பு தினம். ஏறக்குறைய 300 இந்தியர்களை இஸ்லாமியத் தீவீரவாதிகளுக்கு பாரத மாத பறிகொடுத்த மற்றொரு கோரப் படுகொலை நடந்த துக்க தினம். இந்த சினிமா அன்று நடந்த குண்டு வெடிப்புகளை அதே தீவீரத்துடன் காண்பிப்பதில் ஆரம்பிக்கிறது. குண்டு வெடிப்பு நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமனின் கையாள் ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொண்டு இன்னும் 3 நாட்களில் பல இடங்களில் குண்டு வெடிப்புகள் நடக்கப் போகிறது என்ற உண்மையைச் சொல்லுகிறான், நமது போலீசார் வழக்கம் போல உதாசீனம் செய்து விடுகிறார்கள்.

குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து துணைக் கமிஷணர் ராகேஷ் மோரியாவின் டீம் தடயங்களைச் சேகரிப்பதில் தொடர்கிறது.டைகர் மேமனின் மேனேஜரை முதலில் கைது செய்கிறார்கள் அவன் மூலமாக மொத்த ஆப்பரேஷனும் திகிலுடன் விவரிக்கப் படுகிறது. எத்தனைக் குழுக்கள் எங்கெங்கே சென்று குண்டு வைத்தனர் என்பதை அந்த மேனேஜர் விவரிக்கக் காட்சிகளாக விரிந்து நம் வயிற்றைப் பிசைகின்றன. மனதில் கோபம், சோகம் , ஆத்திரம் கையாலகாத்த்தனத்தினால்
ஏற்படும் சுய வெறுப்பு என்று பல்வேறு உணர்ச்சிகளில் உள்ளம் கொந்தளிக்கிறது. ஒவ்வொரு குண்டு வெடிப்பும் மீண்டும் அந்தந்தக் குழுக்களால் எப்படி நிகழ்த்தப் பட்டிருக்கும் என்பதை, தத்ரூபமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர். ஸ்டாக் எக்சேஞ் முன் குண்டு வெடிக்கும் முன்னால் காட்சி கனத்த அமைதியாகி விடுகிறது. அந்த அடர்ந்த மொ:ளனமே நடக்க இருக்கும் விபரீதத்தை கூறி மனம் பதற வைக்கிறது. மேனெஜர் கொடுத்த தகவலின் பெயரில் குண்டு வெடிப்பில் பங்கு கொண்ட அனைத்து தீவீரவாதிகளின் பெயர்களும் சேகரிக்கப் படுகின்றன. போலீஸ் இன்·பார்க்மர்கள் மூலமாக ஒவ்வொரு தீவீரவாதியையும் துரத்தி துரத்தி கைது செய்கிறார்கள். அதிலும் பம்பாய் சேரிகளில் போலீசார் மூச்சுத் திணற ஓடி வீடுகளுக்குள் எல்லாம் புகுந்து, புகுந்து ஒரு தீவிரவாதியை மடக்கிப் பிடிக்கும் காட்சி படு பிரமாதமாகப் படப் பிடிக்கப் பட்டுள்ளது.

பாதுஷா என்ற ஒரு தீவிரவாதியின் பின்னால் படம் வெகு நேரம் சுற்றி வருகிறது. போலீசால் துரத்தப் படும் தீவிரவாதி உ பி யில் உள்ள ராம்பூர் போகிறான், அங்கிருந்து ஜெய்ப்பூர் போகிறான், அங்கிருந்து மீண்டும் ராம்பூர், அங்கிருந்து கல்கத்தா, மீண்டும் ராம்பூர் என்று துபாய்க்கு தப்பி சென்று விட்ட டைகர் மேமனின் உத்தரவினால் அலைக்கழிக்கப் பட்டு போலீசிடம் கைதாகிறான். அவனிடம் கமிஷனர் மொளரியா பேசும் ஒரு இடத்தில் மட்டும் இயக்குனரின் கருத்தாக இஸ்லாமியத் தீவீரவாதம் சாடப் படுகிறது.

பாதுஷா கொடுத்த தகவலின் பெயரில் ஆர் டி எக்ஸ் எப்படி இந்தியாவுக்குள் வந்தது என்பது காண்பிக்கப் படுகிறது. நாட்டைக் கூசாமல் விலை பேசும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் கேட்கிறார்கள் சரக்கு ஐ எஸ் ஐ அனுப்புகிறதா தாவூத் அனுப்புகிறானா என்று. 68 கிலோ ஆர் டி எக்ஸ் என்பதனால் கூசாமல் அதிக லஞ்சம் வேண்டும் என்று டிமாண்ட் செய்து வாங்கிக் கொள்கிறார்கள் இந்திய அரசு அதிகாரிகள்.

பாதுஷா எப்படி ஆர் டி எக்ஸ் கடத்தப் பட்டது என்பதை விவரிக்கிறான். அது அப்படியே படமாகக் காட்டப் படுகிறது. அவன் மேலும் தாங்கள் அனைவரும் எப்படி துபாய் சென்றோம் என்பதையும் அங்கிருந்து டைகர் மேமோன் எப்படி பாக்கிஸ்தானுக்கு அழைத்துச் சென்றான் என்பததயும் சொல்லச் சொல்ல காட்சிகளாக விரிகின்றன. அனைவருக்கும் பாக்கிஸ்தான் ராணுவம் பயிற்சி அளிக்கிறது. பின்னர் அனைவரும் பம்பாய் திரும்பி காரியத்தத முடிக்கின்றனர். இதை எல்லாம் போலீஸ் விசாரிக்கும் பொழுது தீவீரவாதிகளின் வாக்குமூலங்கள் காட்சிகளாக வருகின்றன.

ஒவ்வொருவரு விசாரணைக் கைதியையும் போலீசார் அடித்து உதைத்து உண்மையைக் கொணர்கின்றனர் விசாரனை அதிகாரி அதீத மன உளைச்சலுக்கு உள்ளாகிறார். ஆர் டி எக்சைப் பதுக்கி வைத்த பில்டரின் மனைவி உட்பட கடுமையான போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். எல்லா விசாரணைகளும் தத்ரூபமான காட்சிகளாக படத்தில் விரிகின்றன. பிடிக்க முடிந்த எல்லா கைதிகளளயும் பிடித்து விடுகின்றனர். டைகர் மேமனின் குடும்பமே தப்பித்து முதலில் துபாயிலும் பின்னர் பாக்கிஸ்தானிலும் அடைக்கலாமாகின்றனர். டைகர் மேமனின் தம்பி இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அவனது பேட்டியும், பாக்கிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே ஒளிபரப்பப் படுகின்றன. டைகர் மேமன் துபாயில் இருந்து கொண்டு தொடர்ந்து உத்தரவுகள் கொடுத்து வருகின்றான்.

பட இறுதியில் ஒரு கைதியின் வாக்குமூலம் மூலமாக தாவூத் இப்ரா†¢மின் சதித் திட்டம் அம்பலமாகிறது,. மும்பையில் பர்தா அணிந்த பெண்கள் ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறார்கள். என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை அவளது வளையல்களை உனக்கு அனுப்புகிறேன் நீ தான் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று ஒரு பார்சல் தாவூதுக்கு வருகிறது. உடனடியாக எல்லா டான்களையும் வைத்து மீட்டிங் போடுகிறான். மீட்டிங்கில் அத்வானியையும், தாக்கரேயையும் கொல்லத் தீர்மானம் போடப் படுகிறது. ஆனால் டைகர் மேமன் வேறு விதமான தீர்வைக் கொடுக்கிறான். பம்பாயை நிர்மூலமாக்க வேண்டும், அதன் மூலம் இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை முறிக்க வேண்டும், லட்சக்கணக்கான இந்து நாய்கள் கொல்லப் பட வேண்டும், உலகத்துக்கு முஸ்லிம் பவர் என்ன என்றால் அப்பொழுதுதான் தெரியும் எனக்கு பணம் கொடுங்கள் நான் அந்தப் பயங்கரத்தத அல்லாவின் ஆணையாக நிகழ்த்தித் தருகிறேன் என்கிறான், அவன் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப் படுகிறது, மற்றவை துயர வரலாறு.

படத்தில் எல்லா பாதிரங்களின் பெயர்களும் உருவ ஒற்றுமையுடன் அப்படியே காண்பிக்கப் படுகிறது தாவூத் உட்பட. இது டாக்குமெண்டரி அல்லது உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு. எடிட்டிங், கலர், காமரா கோணம் எல்லாம் கச்சிதமாக அமைந்துள்ள ஒரு தரமான தொழில்நுட்ப நேர்த்தியும் கூடிய படப்பிடிப்பு .

அநாவசியக் காட்சிகள் உணர்சிகள் இல்லல. நடந்தது நடந்தவையாக காண்பிக்கப் படுகின்றன. அநாவசிய சூடோ செக்குலார் கோஷங்கள் படத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது, பாப்ரி மசூதி இடித்ததனால் தான் நாங்கள் குண்டு வைத்தோம் என்று சொல்லும் பொழுது அயோத்தியாக் காட்சிகள் காண்பிக்கப் படுகின்றன. வேறு எந்த இடத்திலும் யாரையும் படம் சுட்டிக் காட்டுவதில்லை, படம் பார்ப்பவர்களின் தீர்ப்புக்கு விட்டு விடுகிறார்கள், இப்படி இப்படித் திட்டமிட்டு படு பயங்கர குண்டு வெடிப்புகள் நடத்தினார்கள்., அதற்கு இன்ன இன்ன காரணங்களைக் கூறுகிறார்கள் என்று காண்பிக்கிறார்களேயன்றி, யார் சரி , யார் தவறு என்ற நீதிபோதனைகள் இல்லை. படத்தின் இறுதியில் தொடர்ச்சியாக பல நிமிடங்களுக்கு குண்டு வெடிப்பில் இறந்த, உடல் உறுப்புக்களைப் பறி கொடுத்த, நெருப்பில் கருகிய கோரக் காட்சிகளின் புகைப் படங்களாகவும், வீடீயோக் காட்சிகளாகவும் காட்டப் படுகின்றன. அந்தக் காட்சிகள் படம் பார்ப்பவர் மனதில் படத்தில் வெளிப்படையாகச் சொல்லாமல் விட்ட அனனத்துச் செய்திகளையும் சொல்லுகிறது.

படத்தில் கமிஷணர் மொளரியாவாக வரும் கே கே மேனனின் நடிப்பும், பாதுஷாவாக வருபவனின் நடிப்பும் டைகர் மேமனாக வரும் பவன் மல்§†¡த்ராவின் நடிப்பும் குறிப்பிடத்தக்கவை.

மும்பை குண்டு வெடிப்பில் ஈடு பட்ட தீவீரவாதிகளுக்கு தவணை முறையில் தண்டனை அளிக்கப் பட்டு வரும் இந்த நேரத்தில், அனைவரும் கட்டாயம் காண வேண்டிய ஒரு திரைப்படம். இது வெறும் திரைப்படம் மட்டுமல்ல இன்று நிலவும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் ஒரு உண்மையான, தத்ரூபமான வாக்குமூலம். கோர முகம். நாம் எவ்வளவு கொடுமையான அரக்கர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அப்பட்டமாகச் சொல்லும் ஒரு ஆவணம். இந்திய வரலாற்றின் குறிப்பிடத்தக்க ஒரு பயங்கரத்தின் ஆவணம் இந்த சினிமா. அவசியம் பாருங்கள் டி வி டியில் கிடைக்கிறது.

தீர்ப்பு வந்து பல தீவிரவாதிகளும் வெளியில் விடப்பட்டு விடலாம். ஆனால் இந்தப் படம் அழுத்தமாக யார் குற்றவாளிகள் என்பதைக் காண்பிப்பிக்கின்றது. இதே போல ஒரு முழுமையான ஆவணப் படம் கோவை குண்டு வெடிப்பு குறித்தும் எடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான் தமிழக மக்கள் தங்களைச் சூழ்ந்துள்ள அபாயத்தின் பரிமாணத்தை உணர்வார்கள். யார் புத்தகமாக எழுதப் போகிறார்கள், யார் அதைத் துணிந்து படமாக எடுக்கப் போகிறார்கள் ? அப்படியே எடுத்தாலும் அந்தப் படம் வெளி வருமா ?


viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா