பறவைகளும் துப்பாக்கிரவைகளும்

This entry is part [part not set] of 49 in the series 20050225_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


சாலைப் போக்குவரத்துப் பணியில் வேலை என்றாலும், அழகியநம்பி ராணுவ அவசரங்களுக்கு அழைக்கலாம் என்று விருப்பந் தெரிவித்திருந்தான். வருடம் ஒருமுறை ராணுவ முகாம்களில் பயிற்சி கடுமையாய் இருந்தது அவனுக்கு. கடுங்குளிரையும் உடல்உழைப்பையும் வேண்டியது அது. இந்தியும் பெரிதாய்த் தெரியாது. பிரத்யேக இந்தி வகுப்புகள் வேறு இருந்தன… னால் அதிகாரிகள் நட்புபூர்வமாக நடந்து கொண்டார்கள். கடும் வேலைக்குப் புதியவர்கள் என்று அவர்களைப் புரிந்தவர்களாய் இருந்தார்கள். வேலைநேரத்தில் கண்டிப்பு காட்டியவர்கள் பயிற்சி முடிந்ததும் மழைக்கு வானம் முகம் மாறினாப்போல குளிர்ந்து புன்னகைப் பரிமாறல்களுடன் கைகுலுக்கினார்கள். அலுப்பு தெரியவில்லை அந்தக் கணம்.

ராணுவ உடுப்புகளை அணிந்து கொள்வதில் சிறு பெருமித மிதப்பு. நடையில் தனி எடுப்பு. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பகுதிகளில் பயிற்சிகள். மாறிய தட்பவெப்பச் சூழல். கடும் வெயில். பெரும் மழைக்கொட்டு. மலைப்பகுதி. கடும்பனி. பச்சைப்பசேல் என்ற வளாகப் பகுதி. அடர்காடுகள்… என சுற்றித் திரிய வாய்த்தது. வேறுவேறு இன மக்கள். வரியோடிய வறுமைசுமந்த முகங்கள். திக்குலங்கள். அவர்களின் ஓலையிட்ட அல்லது ஓட்டு வீடுகள்.

புதிதுபுதியாய் விரித்துக் காட்டப்படுகிற உலகங்கள் அழகாய்த்தான் இருந்தன. கர்ச்சீப்-மேஜிக் போல. மண்ணே பகுதிக்குப் பகுதி நிறம் வித்தியாசப் பட்டது. நீரே வாசனைகளே கூட மாறின. தனித்தனி உடைப் பாங்கு. உடல் நிறம். மொழி. சமூக நம்பிக்கைகள். அதுசார்ந்த மாறுபட்ட சடங்குகள். … சங்கீதம்.

எத்தனையோ வேறுபாடுகளுக்கிடையில் பொதுமனிதனின் அடையாளங்கள் கனவுகள் தளங்களை அவன் ஒரு எளிமையுடன் உள்வாங்கிக் கொள்ள வாய்த்தது. மொழி புரியாத நிலையிலும் ஒரு புன்னகையுடன் யாரையும் சட்டென்று அணைத்துக் கொண்டாற்போல உணர வைக்க அவனுக்கு இயல்பாகவே முடிந்தது. ஒரு குழந்தையின் வெளிப்படையான எளிமை. அன்புப் பரிமாற்றங்களுக்கு மொழி தேவையே இல்லை. சில சந்தர்ப்பங்களில் மொழி இடைஞ்சலாகவும்… எதிர்அம்சமாகவுமே கூட அமைந்து விடுகிறது.

பிரயாணம் அலுக்காத சற்று முந்தைய வருடங்கள்… அவனும் பாண்டியராஜும் ஞாயிறு… விடுமுறை… என்றால் அவரவர் வண்டியை முன்தினமே சரிபார்த்துக் கொண்டு – யமகா – எங்காவது மனம்போன போக்கில் கிளம்பி விடுவார்கள். துாரம் ஒரு பொருட்டே அல்ல. வழியே ஒரு வாகனம் சிக்கிக் கொண்டாலும் மற்றதில் போய் அவசர உதவிகளுக்குப் பார்த்துக்கொள்ள முடியும்…

அதிகாலை கிளம்பிவிட்டால் வெயிலோ குளிரோ பொருட்டே அல்ல. மழையில் நனைந்தபடியே கூடப் போயிருக்கிறார்கள். எளிய நீர்-இறங்கல் போல மழை தோன்றும். வண்டியில் போகையில்தான் தண்ணீரின் உக்கிரம் தெரியும். வேகமெடுத்துச் செல்கையில் மழை சாட்டைசாட்டையாய் அறையும். கண்ணெல்லாம் எரியும். முகமெல்லாம் உடம்பெல்லாம் வலிக்கும்.

அப்படியொருநாள்தான் ரோவில் போனது.

ஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ச்சரியப் படுத்தின. ன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது. சுதந்திரப் போராட்ட களவீரராக இறங்கி தனிப்பெருங் கனவுகளில் கிளைபிரிந்து சிந்தனைப் புரட்சியை உலகளாவிய தளத்தில் நிருவிய அரவிந்தர். அவரது அடியொற்றித் தடம் கண்ட அன்னை இனி உலகயுத்தம் வராது… என ஓங்கி முழங்கியது அவனைப் பரவசப் படுத்தியது.

ரோவில். மலர்ச்செடிகளும் கொடிகளும் மரங்களுமான பெரிய அமைதியான வளாகம். நடுவே அமைந்த அமைதியான தியான வளாகம். பறவையொலிகள் தவிர மானுட ஒலிகள் முற்றே தவிர்க்கப்பட்ட… வடிகட்டிய வளாகம். அமைதி அங்கே அன்னையின் கனவாக ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. மன இரைச்சல்கள் சுமுகப்படுத்தப் பட்டிருந்தன. காற்றே மாறினாப்போல… இயற்கையை உணரக் கற்றுத் தந்தன அந்த வெளிகள்… ச்சரியமான பயணம். ச்சரியமான அனுபவம்…

தன்னை உணர்தல் ஒருநிலை. இயற்கையை உணர்தல் ஒருநிலை. தன்னை இயற்கையின் ஒருபகுதியென உணர்தல் ஒருநிலை… அரவிந்தரும் அன்னையும் ட்சிசெய்யும் மெளன வியூக வளாகம் அல்லவா ? அறிவின் மிருகப்பாய்ச்சலை, கட்டுத்தெறித்த திசையடங்காத் தினவை ஒழுங்குபடுத்த வல்லதான அந்தச் சூழல் பிடித்துப் போனது.

பூக்கள் வழியே சேதி பரிமாறிக் கொள்ளும் அன்னையின் பாணி வசீகர அனுபவம். மிக்கவாறும் மக்கள் அறிந்த பூக்களைக் கொண்டே வாழ்வின் நம்பிக்கைகளை வலுவூட்ட அன்னை கண்ட உத்திகள் பரவசப் படுத்தின. பூக்கள் தாவரங்களின் கனவுச் சிற்றுருவங்கள் அல்லவா ? நமது கலாச்சார அளவிலேயே வாழ்க்கையை ஐந்நில அளவில் இலக்கணவசப் படுத்தி இலக்கியம் வளர்த்த நாடல்லவா இது ?

பெண்களுக்குப் பூக்களின் பெயர் வைப்பது எத்தனை அழகான கற்பனை… கமலா, பங்கஜம், பாரிஜாதம், மல்லிகா. முல்லை, சாமந்தி, செம்பகா… சமீபத்தில் இருவாட்சி என்றுகூட பெயர் கேள்விப் பட்டிருந்தான். நல்ல நல்ல தமிழ்ப் பெயர்கள் கேட்கவே இதமாய் குளுமையாய் இருக்கிறது. வீட்டில் அப்பெயர்களில் அவர்கள் அழைக்கப் படுவது இன்னும் சிலாக்கியம்தான்.

பெண்ணே உன் பெயரென்ன ?

வள்ளி. அலர்மேல் வள்ளி என்பது முழுப்பெயர் என பிற்பாடு அறிந்தான். அழகான பெயர். அவள் ளும் கொள்ளையழகு. அதிகாலையில் வாசலில் பாதியும் அவன் மனசில் பாதியுமாய் அவள் கோலமிட்டாள். நல்ல நிதானப் பக்குவத்துடன் அந்த விரல்கள் வீதியில் மாயாஜாலம் நிகழ்த்தின. தினமும்…

அதிகாலை வாசல்கோலங்களில் பெண்கள் தன் கனவுகளை சற்று கோழித்தீவனமாட்டம் (சேவல் தீவனம்!) துாவி விடுவதான பிரமை அவனுக்கு ஏற்பட்டது. தட்டுப்படுந் தோறும் தலைநிறையப் பூவுடன் அவளை அவன் கவனித்தான். பூக்களின் மீது இத்தனை சை கொண்டவளா நீ… என கவனம் தன்னைப் போல அவளில் கூர்த்தது.

பிற்பாடு பூக்களை எங்கு பார்த்தாலும் அவள் நினைவு வர ரம்பித்ததே அதைச் சொல்.

ரோவில் பூக்களின் வளாகம். அன்னையின் வளாகம். உலக அமைதிப் பூங்கா அது. உலக அமைதிக்குப் பூக்களால் கட்டிய கோட்டை அது அல்லவா ? வலிமையான யானையை எளிய அங்குசத்தால் கட்டுப் படுத்துவதேபோல அல்லவா இருக்கிறது கதை… அவன் மெல்ல நகைத்துக் கொள்கிறான். தன்னைப் போல மனம் தாவி அலர்மேல் வள்ளிமேல் குவிகிறது…

சற்று சீக்கிரம் கண்விழித்த அதிகாலைகளில் தவறாமல், அவளைச் சந்திக்க முடியுமா என அவன் முயற்சிக்க ரம்பித்தான். பிறகு தன்னைப்போல அவன் அதிகாலைகளில் விழித்துக் கொள்ள ரம்பித்தான். அவள் காட்சிப்பட்ட காலைகளுக்கு என்னவோ பிரத்யேக அர்த்தம் காண்கிற பிரமை. நம்பிக்கை அவனில் வளர ரம்பித்தது. அடடே இதுதான் காதல் போலும் என நினைக்கவே புன்னகை வந்தது அவனுக்கு…

அவளுக்கும் அப்படி இருந்திருக்குமா தெரியாது.

அவளுக்குக் கைநிறையப் பூ வாங்கித் தந்து தலைநிறைய அவள் வைத்துக் கொள்வதைப் பார்க்க அவன் வேகம் கொண்டான்.

‘ ‘பாண்டியா, எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது ? ‘ ‘

‘ ‘நல்வாழ்த்துக்கள் ‘ ‘ என்று கை குலுக்கித் தோள் தட்டிக் கொடுக்கிறான் பாண்டியராஜன்.

காதல் உள்ளவரை உலகத்துக்கு அழிவு இல்லை. காதல்மூலம் அமைதிகாணத் தவிக்கும் மனம் கனவுலக எல்லைகளை விரித்து அடுத்தவீட்டில் தென்னைபோலும் சாய்ந்து நிற்கிறது.

‘ ‘என் பெயர் அழகியநம்பி ‘ ‘

‘ ‘தெரியும் ‘ ‘ என்றாளே பார்க்க வேண்டும். அந்த ஒற்றைத் தருணத்தில் அவனில் இருந்து யிரம் புறாக்கள் கிளம்பி வானமெங்கும் பறந்து திரிகிறாப் போல இருந்தது.

அவன் அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான். ‘ ‘நீ ஒரு மானுடமலர் ‘ ‘ என்றான் மிக அலங்காரமாய். வாழ்க்கையே அழகாய்த் தோன்றியது அப்போது.

மங்கியதோர் நிலவும் மொட்டைமாடிக் காற்றும் கவிதை பேசிய கணத்தில் அவள் மடிமீது தலைவைத்து அவன் படுத்துக் கிடந்தான். மாடியை ஒட்டி பன்னீர்ப்பூ மரம். இரவென்ன பகலென்ன சதா கனவுகளை வாரியிறைத்து சுற்றுப்புறமே மணக்கச் செய்கிற அந்த மரத்தை யாருக்குதான் பிடிக்காது.

அதைவிட ச்சரியம் அவள் வீட்டில் அவன் பார்த்த அன்னையின் படம்… ‘ ‘அன்னைபற்றி அறிவாயா ? ‘ ‘ என்கிறான் திகட்டலாய்.

‘ ‘இயற்கையை யார்தான் அறிய மாட்டார்கள் ? ‘ ‘ என்கிறாள் அலர்மேல் வள்ளி.

தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.

உலகம் அழியாது. உலகப்போர் மூளாது… என்கிறாள் மனசில் அன்னை புன்சிரிப்புடன்.

அழகியநம்பி அதுவரை காஷ்மீர் போனதில்லை. பனிக்குப் போர்த்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். பனியையே போர்த்திக் கிடந்தது இயற்கை அங்கே. அங்கங்கே ஏரிகளில் படகுகளில் கூட வாழும் மனிதஜாகைகள்… னால் நம்பிக்கை வற்றிக் கிடந்தன. ஊருக்கே வேறு முகம் வந்திருந்தது. அலுப்பாய்ச் சுருண்டு கிடந்தது ஊர்.

அந்தப் பகுதிக்கு வெள்ளிமூக்கு என்பதாகப் பொருள்படும் பெயர் என்று சொல்கிறார்கள். ஒரு காலத்தில் காதல் இளம் ஜோடிகள்… புது மணமக்கள்… வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று இந்த வளாகத்தில் னந்தமாய் உலவித் திரிந்தார்கள்.

அவனுக்கு வருத்தமாய் இருந்தது. சரணாலயமாக இங்கே வந்துபோன பறவைகளைத் துப்பாக்கிச் சத்தம் மிரட்டி விரட்டியடிக்கிறது… எல்லைக்குக் கிட்டத்தில் இதுவரை அவன் வேலை என்று வரவழைக்கப் பட்டதேயில்லை. பகலிலும் கூட ஒளி அங்கே ஊருக்குள் நுழைய அனுமதிகேட்டுத் தயங்கி நிற்பதைக் காண வேடிக்கையாய் இருந்தது. இடுப்பில் நெருப்புக் கணப்புடன் நடமாடும் ஜனங்கள். புதிய தலைகளாக யாரைப் பார்த்தாலும் சிரித்த காலம்தான் சட்டென்று மாறிப் போனது. ப்போது உற்சாகமாய் உணர்ந்தவர்களே கூட இப்போது அவநம்பிக்கையாய் சற்றே பயத்துடன் மேலுங் கீழும் பார்க்கிறார்கள். தயங்குகிறார்கள். ஒரு விரைத்த மெளனம் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.

அழைக்கப் பட்டபடி அவர்கள் எட்டு ஒன்பது கிலோமீட்டர் வரைகூட வளையவர வேண்டியிருந்தது. பனி மூடிக்கிடக்கும் சாலைகளைக் கடந்து போதல் மகா அனுபவம். முன்னே பனியை வெட்டி ஒதுக்கி ஊடுருவச் செய்கிற அளவில் பிள்ளையார் தும்பிக்கைபோலும் மூக்கெடுத்த ராணுவ வாகனங்கள். சில சமயம் நடந்தும், கோவேறு கழுதைகள் மீதும் பிரயாணம். குறி பிறழாமல் சுடும் பயிற்சி ஒத்திகைகள்… மலையேற்றம். வலைப்பின்னல் பற்றி ஏற்றங்கள். மரமேறுதல். உயரக் கட்டடங்களில் இருந்து கயிறு வசம் அமைத்துக் கொண்டு இறங்குதல்… உடல் பயிற்சிகள்.

ங்காங்கே நிறைய வீடுகள் பராமரிப்பு இல்லாமல் பூட்டிக் கிடப்பதைக் கண்டான் அழகியநம்பி. தன்னிச்சையாய் வளர்ந்து கிடக்கும் பூ வளாகங்கள். இந்தப் பூங்காக்கள் ஒருகாலத்தில் எத்தனை அழகாய் மனிதர்களை மகிழ்வித்திருக்கும் என யூகித்தான் அவன். வெறித்துக் கிடந்தன கடைவீதிகள். கிழவியின் ஒழுங்கற்ற பற்கள் வரிசைபோல் பஜார் கடைகளின் வரிசை திகைத்துப் போயிருந்தது. இங்கொரு கடை… அங்கொரு கடை என்று திறந்து கிடந்தன. சில கடைகள் பூட்டிக் கிடந்தன. … சில கடைகள் குண்டு விழுந்தோ எரியுண்டோ சூறையாடப் பட்டிருந்தன.

ஜனங்கள் அடிவயிற்றில் பயநெருப்புடன் நடமாடினார்கள்…

அடாடா, எல்லைக்கப்பாலும் இதே கதைதானே. மனிதர்கள் இப்படியே கவலை சுமந்து தளர்ந்து திரிவார்களே என்றிருந்தது. ஓய்வு நேரங்களில் வீதிகளில் திரிகிற அவனது தினவு இங்கே அடிபட்டாற் போல ஏமாற்றமாய் உணர்ந்தது. பயன்படுத்தா விட்டாலும் பைத்துட்டில் சற்று சுவாசம் காணும் மனித சராசரி மனம். மெளனம் வழிமறிக்கப் படுகிற பதட்டத்துடன் எச்சரிக்கப் பட்டாற் போல நெடிதும் பாய் விரித்துக் கிடந்தது. அசுத்தப் பட்டிருந்தது மெளனம்…

ஏரிகளின் படகு வீடுகள் கிழ தம்பதிகளுடன் தள்ளாடிக் கொண்டிருந்தன. பெரும் தனிமை சூழ்ந்த முதுமை. நீண்ட கயிறில் முடிச்சு விழுந்தாற் போல அவர்கள் நெற்றியில் சிக்கலான வரிகள் ழமாய் வடுக்கள் போல கிடந்தன. காலத்தின் சுவடுகள் அல்ல… சுவடுக்கள். திகைப்பும் பெருமூச்சுமான அன்றாடம்.

படகுகளிலேயே தொட்டிச் செடிநிறைய மலர்கள். கூரைமேலும் கொடிகள் மலர் சுமந்து கொண்டு. அடடா கானகத்துப் பெளர்ணமி போல எல்லாம் வீணாய்க் கிடக்கிறது ரசிக்க ளின்றி. கிராமமே இளமையைத் தொலைத்திருந்தது. இளைஞர்கள் வேலை தேடி வெளியே போயிருக்கலாம். பாதுகாப்பு கருதி பெரியவர்கள் அவர்களை வெளியேஅனுப்பி வைத்திருக்கலாம். அவர்களே பெரியவர்களைப் புறக்கணித்துப் போயிருக்கலாம். அவர்களில் சிலர் அமைதியான வாழ்க்கை என எதிர்காலம் அமையப் போவதில்லை என அதிர்ச்சியுடன் ‘தவறான ‘ வழியிலும் அகப்பட்டுக் கொண்டிருக்கலாம்…

வாழ்க்கை நியதிகள் தப்பி ஜவுளிக் கடையில் கலைத்துப் போட்ட சேலைகள் போல உருக்குலைந்து கிடந்தன. சின்ன்ாபின்னப் பட்டுக் கிடந்தன. மாம்- எல்லைக்கு அப்பாலும் இப்பாலும். எந்தப் பயணத்திலும் இப்படியோர் வருத்தம் அவனைச் சூழ்ந்ததேயில்லை… நள்ளிரவில் பெண் சுதந்திரமாக நடமாட வேண்டும் என காந்தி கனவு கண்டது போக… நண்பகலில் கூட ண்களே நடமாட முடியாத மிரளல். வெறும் மத அளவில் எதிர்ப்பு அலைகள்… குறியற்ற வேசத் தினவு. திசை திருப்பப் பட்ட இளமை முறுக்க மூர்க்கங்கள்.

அவனுக்கு மகிழ்ச்சியான சேதியொன்றை மேலதிகாரி தெரிவித்தார். அந்தப் பகுதியில் சமீபத்திய குண்டுவீச்சு சம்பவத்தில் சிதிலமடைநத பாலம் ஒன்றை மறுசீரமைத்து பயிற்சிக்காலம் முடிவதற்குள் கட்டித் தர முடிவெடுத்திருப்பதாகக் கூறினார். அவர்கள் ஊரைவிட்டுப் போனபின்பும் அடையாளம் மிச்சமிருக்கும் வேலை. காவென்றிருந்தது எல்லாருக்கும்.

இரு எல்லைகளையும் இணைத்துப் பாலங் கட்ட முடிந்தால் எத்தனை நன்றாய் இருக்கும்.

அன்றைய ஓய்வுநேரத்தில் படகு ஒன்றில் உல்லாசப் பயணிபோல் ஏறிக் கொண்டான். ‘ ‘வாருங்கள். எரியின் அழகுப் பகுதிகளைச் சுற்றிக் காட்டுகிறேன் ‘ ‘ என்றார் கிழவர். வாய் பேசியது. அவரிடம் உற்சாகமோ சிரிப்போ இல்லை. அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

சிறு புன்னகையுடன் அவர் கரங்களை வாங்கிக் கொள்கிறான். ‘ ‘படகுப் பூங்காவை அருமையாகப் பராமரித்து வருகிறீர்கள். ‘ ‘

‘ ‘இவைகள் பூச்செடிகள் அல்ல. என் குழந்தைகள் ‘ ‘ என்கிறார் பெரியவர்.

‘ ‘எத்தனை குழந்தைகள் உங்களுக்கு ? ‘ ‘ என சீண்டினான் அவன். ஒரு விநாடி அவனை ழமாய்ப் பார்த்தார். ‘ ‘இனியும் பிறக்கும். எனக்கு வயதாகி விடவில்லை ‘ ‘ என்றார் அவர் சிறு சிரிப்புடன். மேலும் கட்டுகளை இறுக்கந் தளர்த்த அவன் விரும்பினான். ‘ ‘இந்தப் பூக்களை நல்வாழ்த்துப் பொதிவாக என் மனைவிக்கு அனுப்ப விரும்புகிறேன்… உங்கள் சிகளுடன் ‘ ‘ என்றான்.

‘ ‘அச்சா ‘ ‘ என்றார் அவர்.

சீட்டியடித்தபடி ஜாகைக்குத் திரும்பினான். அலர்மேல் வள்ளியின் கடிதம் காத்திருந்தது மேஜையில். உள்ளே அன்னையின் படம். கூடவே பிரசாதமலர். சிறு பொட்டலப் பொதிவில் போகன்வில்லா ஒற்றைப்பூ. பாதுகாப்பு மலர்! ‘ ‘அன்னை உங்கள் அருகிருப்பாள். காப்பாள். நல்வாழ்த்துக்கள் ‘ ‘ – வள்ளி.

—-

from the desk of storysankar@rediffmail.com

17 03 2003

Series Navigation