பரிச்சய முகமூடிகள்…
ராம்ப்ரசாத்

கடந்தகால நிகழ்வுகளை
பரிச்சய முகமூடியிட்டு
மறைத்து விடுகிறான்
சுயநலக்காரன்…
முகமூடிகளுக்குப் பின்னால்
அந்த நரிகள்
வேட்கையோடு காத்திருக்கின்றன
சந்தர்ப்பங்களுக்கென…
பரிச்சயங்கள் தோறும்
உணர்வுத்திரைகளை மென்மையாய்
கையாளும் பொருட்டு
முகமூடிகள்
அங்கீகரிக்கப்படவே செய்கின்றன…
முகமூடிகளுடன் பதுங்கிவரும்
நரிகள் சரியான நேரத்தில்
பாய்ந்து குதற
தவறுவதில்லைதான்…
முகமூடிகளை விலக்கிப்
பார்த்தல் மிக மிக
அவசியமென்பது
அறிவின் எல்லைக்குட்பட்டதுதான்…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)