பயணமுகவர்கள்

This entry is part [part not set] of 24 in the series 20070412_Issue

மா.சித்திவினாயகம்கொடுமையணிந்து
தினம்….தினம்…
வருகிறது பெரியவெள்ளி !!!!!

சிலுவையின்றிச்
சாகடிக்கப் படுகிறார்கள்
புதுப் புது யேசுக்கள் !!!!

ஓளிபாய்ச்சி
உயிர்த்தெழுந்தது
பேர்லின் பெருந்தெரு.

புரியாத மொழி……
புரியாத ஊர்……….
புரியாத மனிதர்கள்……

ஈஸ்டர் தினத்திற்கு
முன்னிரவொன்றில்–நான்
அவனுடன் அந்த
அறையினுள் நுழைந்தேன்.

‘பொலிஸ் வந்தால்
புருஸன் என்று
ஏன்னையே சொல்”
மீசை மயிர்கள்
முகத்தில் உரச
நெருங்கி அமர்ந்தான்

அவன் முடிவெடுத்து விட்டான்
மூடிய கதவுக்குள்-எது
நடந்தாலும் வெளியே வராதென….

இனிச் சட்டையைக் கிழிக்கலாம்….
வாரினால் அடிக்கலாம்………
எச்சிலால் துப்பலாம்……….
புரிகாசப்படுத்தலாம்………..
இயேசுவைப் போலவே
பாடுகள் படுத்திக்
கொன்றும் போடலாம்

இது பயணமுகவர்கள் காலம்

அதிஸ்டம் தேடி
அதிஸ்டமாய் வந்து
அதிஸ்டம் தொலைக்கிற
சீதைகள்!!!!!!!

முகவர்கள் வெட்டும்
இடுகாட்டுக் குழிகளில்…….


மா.சித்திவினாயகம்

elamraji@yahoo.ca

Series Navigation

மா.சித்திவினாயகம்

மா.சித்திவினாயகம்