நீளக்கூந்தல்கா¡¢யின் அழகானச் செருப்பு

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

எஸ். அர்ஷியாசீயக்காயுடன் சேர்த்தரைக்கக் கஸ்தூ¡¢மஞ்சள், பூலாங்கிழங்கு, வெந்தயம், பூந்திக்கொட்டை, காய்ந்த எலுமிச்சம் பழத்தோலுடன் செம்பருத்தி, ரோஜாப் பூவிதழ்களையும் பார்வதியம்மா தனித்தனியாய் எடுத்து வைத்திருந்தாள்.

இதையெல்லாம் காயவைத்து, அவற்றை ஒன்றாகச் சேர்த்தரைத்து, அந்தத்தூளை வடித்தக்கஞ்சியில் பிசைந்து, தலையில் அரக்கித் தேய்த்துக் குளித்தால் தான், குளித்தது போல் இருக்கும் என்று சொல்லிக் கொள்வாள். அவளுக்கு நீளமானக் கூந்தல் இருந்தது.

காலையில், எங்கேயோ புருசனுடன் வெளியில் கிளம்பிய அந்தநேரத்திலும், மறக்காமல் இதையெல்லாம் எடுத்துவந்து கையில்
கொடுத்து, “நல்லா வெயில்வந்ததும் காயவெச்சு எடுத்துவை!” என்றுவிட்டுப் போனாள்.

இப்போது, உச்சிவெயில் கொளுத்தியது.

உள்வேலையிலிருந்த மங்கா, காயவைப்பதற்காக அவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள். முன்வராண்டா சிமெண்ட்தரை
பொசுக்கியது. கால்வைக்க முடியவில்லை.அந்த இடத்தில்தான் பொருட்களைக் காயவைக்கவேண்டுமென்பது, அவளுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளை!

“உஸ்..உஸ்..”என்று பொறுத்துக் கொண்டு, விளக்குமாற்றால் கூட்டிப்பெருக்கி, வெற்றுத்தரையில் அந்தப்பொருட்களைப் பரப்பினாள்.
காலைத்தரையில்பாவி அந்தவேலையைச் செய்ய முடியவில்லை. பொருட்கள், பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்ப வேண்டும்.

சூடு! கால்மாற்றி மாற்றி வைத்துப் பரப்பினாள். முடியவில்லை. அவளிடம் செருப்பு இல்லை. இப்போது சூடு தாங்க முடியவில்லை!

எழுந்து நிழலுக்கு ஓடிவந்துவிட்டாள். நிழலிலும் பாதம் தகித்தது. உட்கா¡ந்து வாயைக்குவித்து பாதங்களில் ஊதினாள். கால் சூடுமெள்ள ஆறியது.

சிலநிமிட ஆசுவாசத்திற்குப்பின், மிச்சப்பொருட்களை பரப்பிக் காயவைக்க கீழே இறங்கும்போது தான், பார்வதியம்மாவின் செருப்பு அவள் கண்ணில் பட்டது. கருப்புநிறப்பின்னணியில், தங்கநிற ஜா¢கை வேலைப்பாடமைந்த அழகான செருப்பு. அந்த அம்மாவிடம் இரண்டு ஜோடி செருப்பு இருக்கிறது. ஒன்று மாற்றி ஒன்றை பயன்படுத்தும்!

சூட்டிலிருந்து தப்பிக்க, “அந்தச்செருப்பை கொஞ்சநேரம் காலில் மாட்டிக்கொண்டால் என்ன” என்று யோசித்தாள்.

மாட்டிக்கொள்ளலாம் தான்!

யாரேனும் பார்த்துவிட்டால்…?

வீட்டில் யாரும் இல்லை. வெளி இரும்புக்கேட்டையும் சாத்திப் பூட்டியிருந்தாள்.

பிறகென்ன?..

ஒரு ஆர்வத்துடன் அந்தச்செருப்பினுள் கால்களை நுழைத்தாள். அவள் காலுக்கு அளவெடுத்து செய்தது போலவே, அந்த ஜோடிச்செருப்பு இருந்தது. உள்ளூர பயமாக இருந்தாலும் செருப்புக்காலுடன் எட்டுஎடுத்து வைத்தபோது, இதற்கு முன்பு கண்டறியாத சுகம். பஞ்சுமெத்தை மீது
நடப்பது போல, “மெத்துமெத்”தென்று இருந்தது.

இதுபோல செருப்பை அணிந்து கொண்டு நடப்பதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும் போல! இப்போது கிடைத்திருப்பது வாய்ப்பு.
திருட்டுத்தனமான வாய்ப்பு? வீட்டிற்கு யாரேனும் வரும்வரைதான், இதைப் போட்டுக்கொள்ள முடியும்!

செருப்பை மாட்டிக்கொண்டு, பொருட்கள் பரவலாகத் தரையில்படும்படி நன்றாகப் பரப்பினாள். காலில் சூடு ஏறவே இல்லை. செருப்புக்காலுடன் இங்கும்அங்குமாய் நடைபோட்டாள்.

வாசலில் கார்வந்து நிற்கும் சத்தமும், அதைத் தொடர்ந்து ஹார்ன்சத்தமும் கேட்டது. மங்கா பரபரப்பானாள். குடுகுடுவென்று உள்ளே ஓடி,
காலில் மாட்டியிருந்த செருப்பை, அது இருந்த இடத்தில் இருந்தது போலவே வைத்துவிட்டு, ஒன்றும் நடக்காதது போல வெளி இரும்புகேட்டை திறந்து விட்டுவிட்டு, உள்ளே போய்விட்டாள்.

தன் நீளக்கூந்தலில் தேய்த்துக் குளிப்பதற்கான பொருட்கள், முன்வராண்டாவில் காய்வதைக்கண்ட பார்வதியம்மா, புன்சி¡¢ப்புடன் அதைக் கடந்து போனாள். காலில் மாட்டியிருந்த செருப்பை, ஏற்கனவே இருக்கும் செருப்புக்குப் பக்கத்தில் கழற்றிப்போட்டாள்.

உள்ளேயிருந்த மங்காவுக்கு, இப்போது இருப்புக்கொள்ளவில்லை. தான் செருப்பைக் கழற்றிய அவசரத்தில், அதைத் துடைத்து, முன்பு இருந்தது போலவே சா¢யாக வைத்தோமா எனும் கவலை அவளை ஆக்கிரமித்தது.


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா