நில் …. கவனி …. செல் ….

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

வசீகர் நாகராஜன்


பச்சை பளிச்சிடுகையில்
பதறாமல் பயணித்துவிட்டு
மஞ்சள் சிவப்பாகும் போது
மனம் மீறுசீறது சில விதிகளை ….

அனைவருக்கும் ஏதேதோ அவசரங்கள்
அவரவர் பாதையில் பயணங்கள்
அருகிலிருப்போரை கவனிக்க இயலாத
அவசரயுக இயந்திர இயக்கங்கள்

குறுக்சீடும் மின்னும் மஞ்சள்
குறைத்திடும் ஓட்டத்தின் வேகம்
அனுபவம் மட்டுமே அளித்திடும்
அதில் நிற்பதும் தடை மீறிக் கடப்பதும்

சிவப்பு நிறுத்தங்களில் எடுக்க வேண்டும்
சின்னஞ் சிறிய இளைப்பாறல்கள் ..
சிந்தனை மாற்றம் மனதில் தந்திடும்
சில்லென்ற வெண்பனித்தூறல்கள் ….
***
வசீகர் நாகராஜன்
vnagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)