நிலா மட்டும்…
பனசை நடராஜன்

ஓடினாலும் கூட வந்து
சோறு ஊட்டும் அம்மா..,
விரல் பிடித்து பள்ளிக்கூடம்
அழைத்துப் போகும் அப்பா..,
துரத்தி வந்து சண்டை போட்டு
அழவைக்கும் அண்ணா..,
ரெண்டுநாள் லீவுக்கு போய்
மாமாவோடு திரும்பினப்போ
துணியெல்லாம் ரத்தத்தோட
தரையில மூணு பேரும்..!
‘குண்டு போட்டுட்டான்’ன்னு
மாமாகிட்டயும்,
‘சாமிகிட்ட போய்ட்டாங்க’ன்னு
என்கிட்டயும் சொன்னாங்க..!
மாமா, அத்தை, மகேசு எல்லாம்
படகுல போய்ட்டாங்க…
இப்பவும்,
ஓடுறேன், நடக்குறேன்..
கூடவருது நிலா மட்டும்..!!!
– பனசை நடராஜன் –
feenix75@yahoo.co.in