நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

செய்தி


செப்டம்பர் 23, 2006 சனி காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்ஸி நகராட்சி அரங்கத்தில் நடைபெற்றது. ஏற்கனவே 2004-ல் முழுநாள் திரைப்பட விழாவைச் சிந்தனை வட்டம் நடத்தியது. எனவே, இது சிந்தனை வட்டம் நடத்துகிற இரண்டாவது திரைப்பட விழாவாகும். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், தலைவர்கள் ஆகியோரைப் பற்றிய விவரணப் படங்களும் ஊருக்கு நூறு பேர் என்ற முழுநீளப் படமும் இவ்விழாவில் திரையிடப்பட்டது. சி.வி. ராமன், எம்.எஸ். சுவாமிநாதன், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய விவரணப் படங்கள் திரையிடப்பட்டன.

இந்த விழாவில் நியூ ஜெர்ஸி, பாஸ்டன், வர்ஜீனியா, பென்சில்வேனியா, கனெக்டிகட், நியூ யார்க் ஆகிய இடங்களிலிருந்து ஏறக்குறைய 80 பேர் கலந்து கொண்டனர். சி.வி. ராமன், எம்.எஸ். சுவாமிநாதன், அப்துல் கலாம் ஆகியோரை பற்றிய படங்கள் காலையில் திரையிடப்பட்டன. ஒவ்வொரு படத்திற்கும் முன்பு, சிந்தனை வட்டப் பொறுப்பாளர் ஒருவர் படத்தைப் பற்றியும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். இத்தகவல்கள் அடங்கிய குறுமலர் ஒன்றும் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த மூன்று படங்களும் முடிந்ததும், கலந்து கொண்டவர்களுக்கு ஒரு கேள்வித்தாள் வழங்கப்பட்டது. தங்கள் எண்ணங்களை அவர்கள் அதில் பதித்தனர். அதன்பிறகு, பார்வையாளர்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன. பார்வையாளர்கள் தங்கள் கருத்துகளை அவையில் பகிர்ந்து கொண்டார்கள். அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய திரைப்படத்திற்குக் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் நிறைய வரவேற்பு இருந்தது.

பிறகு மதிய உணவு.

அதன் பிறகு, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், ஜெயகாந்தன் ஆகியோரைப் பற்றிய படங்களும் காலையில் பின்பற்றிய முறையின்படி திரையிடப்பட்டன. முடிவில் கேள்வித்தாள்கள், கருத்துப் பரிமாற்றம் ஆகியவையும் நிகழ்ந்தன.

பிறகு மாலைச் சிற்றுண்டி.

அதன் பிறகு, ஊருக்கு நூறு பேர் முழுநீளத் திரைப்படத்தைப் பற்றிய அறிமுகம், படம் திரையிடலும் நிகழ்ந்தது.

கடைசியில், பார்வையாளர்களின் ஒட்டுமொத்தக் கருத்துகளை கேட்கும் கேள்வித்தாள்களுக்கான விடைகளைப் பார்வையாளர்கள் எழுத்தில் தந்தனர். அதன் பின்னர் படம் குறித்த கருத்துப் பரிமாற்றமும், ஒட்டுமொத்த நிகழ்ச்சி குறித்த கருத்துப் பரிமாற்றமும் நிகழ்ந்தது.

திருமதி சாரதா முருகானந்தம் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது. வந்திருந்தவர்களில் ஒரு சிலர் சொந்த வேலை காரணமாகப் பிற்பகல் நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை.

சிந்தனை வட்டம் பொறுப்பாளர் ஆனந்த் முருகானந்தம் தலைமையிலும் வழிகாட்டுதலிலும் இந்நிகழ்வைச் சிறப்பாக நடத்த சிந்தனை வட்ட ஆர்வலர்களான கோபால் ராஜாராம், டாக்டர் சுந்தரம், டாக்டர் கே.எம். சுந்தரம், டாக்டர் சோமசுந்தரம், ஆனந்தி வெங்கட், பி.கே. சிவகுமார், தயாநிதி, பாரி பூபாலன், சந்திரா ராஜாராம், சாரதா முருகானந்தம் , ஓ பி ராவணன், துகாராம்ஆகியோர் உதவினர்.

அனைத்துப் படங்களும் ஆர்வமாகப் பார்க்கப்பட்டன. ஊருக்கு நூறுபேர் திரைப்படத்தில் பார்வையாளர்கள் ஆழ்ந்து போனார்கள். 300 மைல்கள் காரிலும், 70 மைல்கள் ரயில் மற்றும் டாக்ஸியிலும் வந்து பார்வையாளர்கள் கலந்து கொண்டார்கள். சில மருத்துவர்கள் தங்கள் சனிக்கிழமை வேலைக்கு விடுப்பு எடுத்து வந்திருந்தார்கள். சிந்தனை வட்டம் இத்தகைய நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்த வேண்டுமென்று முடிவில் பார்வையாளர்கள் கேட்டுக் கொண்டார்கள்.

பார்வையாளர்களின் கருத்துகளின் மற்றும் எழுத்துவடிவிலான பின்னூட்டங்களின் தொகுப்பு விரைவில் நிழல் பத்திரிகையில் பிரசுரமாகும்.
—————–

சாரதா முருகானந்தம், சந்திரா, சஜிதா (வரவேற்பு)


சாரதா முருகானந்தம், சஜிதா (வரவேற்பு)

முருகானந்தம் வரவேற்புரை


முருகானந்தம் வரவேற்புரை

தயாநிதி சர் சி வி ராமன் விவரணப்படம் பற்றி அறிமுகவுரை


எம் எஸ் சுவாமிநாதன் விவரணப் படம் பற்றி டாக்டர் சுந்தரம் அறிமுகவுரை


அப்துல் கலாம் விவரணப் படம் பற்றி கோ ராஜாராம் அறிமுகவுரை


ஜெயகாந்தன் படத்தை அருண் வைத்தியநாதன் அறிமுகம் செய்விக்கிறார்.


சிட்டி கருத்துத் தெரிவிக்கிறார்.


பிரக்ஞை ரவிஷங்கர் கருத்துத் தெரிவிக்கிறார்.


பாஸ்டன் பாலாஜி கருத்துத் தெரிவிக்கிறார்.


பார்வையாளர்களில் ஒரு பகுதி


அசோகமித்திரன் படத்தில் ஒரு காட்சி


சி வி ராமன் படத்தில் ஒரு காட்சி


சி வி ராமன் படத்தில் ஒரு காட்சி


எம் எஸ் சுவாமிநாதன் படத்தில் ஒரு காட்சி


அப்துல் கலாம் படத்தில் ஒரு காட்சி


அப்துல் கலாம் படத்தில் ஒரு காட்சி


பார்வையாளர்களில் ஒரு பகுதி


பார்வையாளர்களில் ஒரு பகுதி

கே எம் சுந்தரம் கருத்துத் தெரிவிக்கிறார்.


சோமசுந்தரம், சாரதா முருகானந்தம்





சாரதா முருகானந்தம் நன்றி தெரிவிக்கிறார்.

Series Navigation