This entry is in the series 20071115_Issue

த. ஆரோக்கிய சேவியர்


நேருக்கு நேர் பார்க்கவில்லை
திருமண தேதி அருகிலில்லை
இடையில் வரவும் லீவு இல்லை
இதை ஏற்க மனமுமில்லை

தினமும் உன்னை அழைக்கிறேன்
அலைபேசியின் அலைவரிசையால்
அலைக் கழிக்கப் படுகிறேன்

சின்ன சின்ன சினுங்கல்கள்
செல்ல செல்ல கோபங்கள்
தூரத்தை துரத்தும் கொஞ்சல்கள்
இடைவெளியை குறைக்கும் சிரிப்புகள்
எனப் பல உணர்ச்சிக் குவியல்கள்

ஒருவரை ஒருவர் புரிந்துக்கொள்ள
போட்டி போட்டு முயல்கிறோம்
ஆண்டவ்ன் மேல் பாரத்தைப் போட்டு
வாழ்க்கை கனவை வாழத் துடிக்கிறோம்

காதல் மனைவி கிடைக்காவிட்டாலும்
என் கனவு காதலியைக் கண்டறிந்த
என் அம்மாவுக்கு நன்றி
—————————————
த. ஆரோக்கிய சேவியர்.
சிங்கப்பூர்.


saxsun@gmail.com

Series Navigation