நானோர் இந்தியக் குடிமகன்!

This entry is part [part not set] of 18 in the series 20010211_Issue

எட்வின் பிாிட்டோ


என்றைக்காவது சாப்பிடுவோம் என்ற
இறுமாப்பில் நிமிர்ந்துப் பார்க்கும்
என் நெஞ்செலும்புகள்.

என் முனகல் சத்தத்தை கேட்க முடியாமல்
தூங்கிப் போகும் இரவுகள்.

தோப்புகளாய் வளர்ந்திருக்கும் என்
மயிர்க் கால்களை விடுத்து ஓடிப் போகும்
என் மயிற்றுப் பேண்கள்.

என் எலும்புகளில் இரத்தத்தின் ருசி
தேடி ஏமாந்துப் போகும் என் குடி
நீர்ப் பானைக் கொசுக்கள்.

வறண்டுப் போயிருக்கும் என் தொண்டைக்
குழியை ஈரப் படுத்த என் குடிசைக்குள்
ஓடி வரும் மேல்தட்டு வர்க்கத்தின்
சாக்கடை நீர்.

இவ்வளவும் இருந்தும்…
குடிமகன் நான்…
இந்தியாவில்.

Series Navigation

எட்வின் பிாிட்டோ

எட்வின் பிாிட்டோ