நமது நாடுதான் நமக்கு!

This entry is part [part not set] of 25 in the series 20061130_Issue

கரு.திருவரசுஎடுப்பு

மேகங்கள் கூடும் வானத்துக்கு – வெண்

நிலவு வந்ததே அழகு

தேசங்கள் தோறும் நான் நடந்தாலும் – என்

நாடு என்றுமே உயர்வு

கண்ணிகள்

மாடங்கள் கொண்ட வீடிருந்தாலும் – சொந்த

மண்குடில் போல வருமா

தேடுங்கள் எங்கள் நாடிதுபோலே

தென்படுமா சமம் பெறுமா – எங்கும்

தென்படுமா சமம் பெறுமா

காகிதப் பூக்கள் கடைமுன்னாலே – ஒரு

காட்டு மல்லிகை சிரித்தால்

ஆயிரம் அழகைக் காகிதம் தரினும்

அன்பு மல்லிகை மலர்க்கே – என்

அன்பு மல்லிகை மலர்க்கே

பாடல்கள் நூறு பாடிடலாம் – ஒன்று

பண்ணோடு சேர்ந்தால் இனிக்கும்

நாடுகள் எல்லாம் நல்லனவெனினும்

நமது நாடுதான் நமக்கு – என்றும்

நமது நாடுதான் நமக்கு


thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு