நடைபாதை செருப்பு

This entry is part [part not set] of 31 in the series 20061123_Issue

புதியமாதவி


——————

ஜனக்கடலில்
எவரும் கண்டு கொள்ளவில்லை
அந்த ஒற்றைச் செருப்பை.
வாலறுந்து
பின் பக்கம் தேய்ந்து
நடைபாதையில் அனாதையாக.

கடந்து செல்லும்
ஒவ்வொரு கால்களையும்
ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு
காத்திருக்கிறது
நம்பிக்கையுடன்.
கால்களை இழந்தவன்
எப்படியும் வருவான்
அவன் பாதச்சுவடுகளைச்
சுமந்து கொண்டிருக்கும்
தன்னைப் பத்திரமாக
எடுத்துச் செல்ல என்று.

—————–

Series Navigation