தேடலின் நோக்கம் என்ன?

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

செல்வன்


நாம் ஏன் கேள்வி கேட்கிறோம்?கேள்விகளின் மூலம் எதை தேடுகிறோம்?”உண்மையை தேடுகிறோம்” என லாஜிகல் பாஸிடிவிசம் சொன்னது.வாக்கியங்களை விஞ்ஞான ஆய்வின் மூலம் “உண்மை” “பொய்” “பொருளற்றவை” என பிரிக்க முடியும் என லாஜிகல் பாஸிடுவிஸ்டுகள் நம்பினர்.விஞ்ஞான ஆய்வின் மூலம் நிருப்பிக்கபடுபவை “உண்மை”,நிருப்பிகப்படாதவை “பொய்”,ஆய்வுக்கே உட்படுத்த முடியாதவை “பொருளற்றவை-அதாவது மெடா பிஸிக்ஸ்”

உதாரணம்
செவ்வாய் கிரகம் இருக்கிறது – உண்மை
பூமிக்கு இரண்டாம் நிலவு இருக்கிறது – பொய்
கடவுள் இருக்கிறார் – மெடா பிஸிக்ஸ், ஜல்லியடி

“இரண்டாம் நிலவு இருக்கிறது” எனும் வாக்கியத்துக்கும் “கடவுள் இருக்கிறார்” எனும் வாக்கியத்துக்கும் என்ன வித்த்யாசம்?இரண்டாம் நிலவு உண்டா இல்லையா என்பதை பரிசோதனை மூலம் அறிய முடியும்.கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை எந்த பரிசோதனை மூலமும் அறிய முடியாதது.ஆகவே அது ஜல்லியடி.

உலகின் பெரும்பாலான ஆய்வுத்துறைகள் லாஜிகல் பாஸிடிவிசத்தையே தம் ஆய்வுக்கு பயன்படுத்துகின்றன.புள்ளியியல் துறையில் hypothesis testing என்பது லாஜிகல் பாஸிடிவிசத்தை அடிப்படையாக கொண்டதுதான்.இப்படி லாஜிகல் பாசிடிவிசம் விஞ்ஞானத்துறையையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது அதற்கு ஒரு எமன் வந்து சேர்ந்தான்,பிரக்மாடிசம் எனும் வடிவில்.

உண்மை என்றால் என்ன?

இந்த கேள்வியை பிரக்மாடிசம் வேறு கோணத்தில் அணுகுகிறது.உண்மை என்பதையே அது மறுதலிக்கிறது.அரிஸ்டாடிலின் கரஸ்பான்டன்ஸ் தியரி ஆப் ட்ரூத்தை(correspondence theory of truth) மறுப்பதென்பது பிரக்மாடிஸ்டுகளுக்கு மிகவும் குஷியான ஒரு விஷயம்.அப்ஜக்டிவ் ட்ரூத்(objective truth,objective reality) என எதுவுமே கிடையாது என நிறுவும் பிரக்மாடிஸ்டுகள் அதன் பின் ஒரு பெரும் குண்டை தூக்கிப்போடுகின்றனர்.

“எந்த வர்ணணையில் அதிக லாபம் கிடைக்கிறதோ அதுவே உண்மை”

முதல்பார்வையில் இதை தவறாக புரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.உதாரணமாக “திருடுவது சரி” என்ற ஒரு வர்ணனையையும் “திருடுவது தப்பு” என்ற இன்னொரு வர்ணனையும் ஒப்பிட்டால் அதிக லாபம் திருடுவதில் என தெரியவந்தால் பிரக்மாடிசம் “திருடுவது சரி” என்ற வர்ணனையையே தேர்ந்தெடுக்குமா என கேள்வி எழலாம்.ஆனால் பிரக்மாடிஸ்டுகள் லிபெரலிசத்தை ஆராதிப்பவர்கள்.ரிச்சர்ட் ரோர்ட்டி சொல்வது போல் “ஒரு லிபெரல் கொடூரம் என்பது மிகவும் கேவலமான செயல் என நினைப்பவன்”(A liberal is one who believes that cruelty is the worst thing to do) என்று சொல்லிவிட்டதால் பிரக்மாடிஸ்டுகளை பொறுத்தவரை திருடுவது தப்புதான்.மாரல் ரிலேடுவிஸ்டுகளிடமிருந்து பிரக்மாடிஸ்டுகளை பிரிப்பது இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் தான்.

“எது நன்மை பயக்குமோ அதுவே உண்மை.எதில் அதிக பலன் கிடைக்கிறதோ அதுவே உண்மை”

பிரக்மாடிசத்தின் அடிநாதமே இக்கோட்பாடு தான்.ஒரு விதத்தில் தமிழரான நமக்கு இக்கோட்பாடு அன்னியமானதல்ல.ஐயன் சொன்னதுபோல் “புரைதீர்த்த நன்மை பயக்கும் வாக்கியஙளையே பிரக்மாடிஸ்டுகள் மெய்” என உரைத்தனர்.

ஆக விஞ்ஞான உலகில் இரு குழப்பங்கள் ஏற்பட்டன.நாம் அறிவியல் ஆய்வின் மூலம் எதை தேடுகிறோம் எனும் கேள்விக்கு இரு பதில்கள் முன்வைக்கப்பட்டன

“உண்மையை தேடுகிறோம்” – லாஜிகல் பாசிடிவிசம்
“லாபம் தேடுகிறோம்” – பிரக்மாடிசம்

பிரக்மாடிசத்தை பொறுத்தவரை உண்மை என்பது .எந்த கேள்விக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் உண்டு என சொல்லும் பிரக்மாடிசம் அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் வந்தால் அந்த விடைகளில் எது நமக்கு அதிக பலன் தருகிறதோ அதையே உண்மை என ஏற்க வேண்டும் என சொல்கிறது.

ஆனால் ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் இருக்க முடியும் என்பதையே லாஜிகல் பாசிடிவிசம் ஏற்க மறுக்கிறது.”உண்மை,பொய்” என்ற இரட்டை நிலைகளிலேயே அது எந்த வாக்கியத்தையும் அணுகுகிறது.6+6= என்ற கேள்விக்கு ஒரே பதில் தானே இருக்க முடியும்?12 என்பதை தவிர வேறு எந்த விடை வந்தாலும் அது தவறுதானே?

பிரக்மாடிசத்தை பொறுத்தவரை 6+6= என்ன என்பது நம் பார்வை கோணத்தை பொறுத்து அமையும்.6+6= 1(டஜன்) என்பதும் சரியான விடைதானே?

6+6=1 என்ற வர்ணனையயும் 6+6=12 என்ற இந்த இரு வர்ணனைகளுல் எது நமக்கு அதிக பலன் தருகிறதோ அதுவே உண்மை என்பர் பிரக்மாடிஸ்டுகள்.12 மட்டுமே உண்மை என்பர் லாஜிகல் பாஸிடிவிஸ்டுகள்.

இந்த இரு கோட்பாடுகளுல் பிரக்மாடிசமே தத்துவ உலகின் வரவேற்பை பெற்றது.லாஜிகல் பாசிடிவிசத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகிறது.இந்த இரண்டு கோட்பாடுகளின் அடிப்படையில் அறிவியல் உலகம் இரு கூறுகளாக பிரிந்தது.நேசுரல் சயன்ஸ் எனப்படும் துறைகளில் லாஜிகல் பாசிடிவிச முறையில் செய்யப்படும் ஆய்வுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.புள்ளியியல் துறை லாஜிகல் பாசிடிவிச முறையிலேயே வளர்க்கப்படுகிறது.புள்ளியியல் கோட்பாடுகள் உண்மை,பொய் என்ற அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன.(Either null hypothesis is true or false.If null hypothesis is false then alternate hypothesis is true.)

பிரக்மாடிசம் சோஷியல் சயன்ஸ் துறைகளில் மெல்ல மெல்ல காலடி எடுத்து வைக்கிறது.சோஷியாலஜி,ஆந்ரபாலஜி துறைகளில் பிரக்மாடிச ஆய்வு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.சந்தையியல்,மேலான்மையியல்,மனோதத்துவம் ஆகிய துறைகளில் லாஜிகல் பாசிடிவச்த்தின் ஆதிக்கம் மிக அதிகமாக இருப்பினும் பிரக்மாடிச முறை ஆய்வு அங்கேயும் வரத்துவங்கி விட்டது.ஜர்னல் ஆப் கன்ஸ்யூமர் ரிசர்ச்சில் க்வாலிடேடிவ் ஆய்வு முறைகளை ஊக்குவிக்கின்றனர்.க்வாலிடேடிவ் புள்ளியியல் சாப்ட்வேர்களும்(nu*dist) உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

பிரக்மாடிசம் அறிவியல் ஆய்வுத்துறைகளை ஆக்கிரமிக்கும் காலம் வர இன்னும் ஒரு நூற்றாண்டாவது ஆகும் என தோன்றுகிறது.ஆனால் அது அவ்வளவு சுலபமானதாக இருக்காது.பாசிடிவிச ஆய்வுமுறைகள் மிகவும் பிரபலமடைந்து கொண்டே போகின்றன.

பிரக்மாடிச மொழியில் சொல்ல வேண்டுமென்றால் “பாசிடிவிசம் பொய் என்றாலும் பிரக்மாடிசத்தை விட அதிக பயன் தருவதால் அதுவே உண்மை”

Divine irony போல் தோன்றுகிறது…

————————–
holyox@gmail.com

Series Navigation