தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

விஸ்வாமித்திரா


பாரத தேசத்தில் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் விற்கும், காசுக்காக நாட்டையே விலை பேசும் அரசியல்வாதிகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். அது போன்ற கேடு கெட்ட தேசத் துரோக அரசியல்வாதிகள் நமக்குப் புதிததல்ல. காஷ்மீரத்து குலாம் நபி ஆசாத்தில் இருந்து கேரள அச்சுதானந்தன் வரை அரசியல் பிழைப்பிற்காக தீவிரவாதிகளுக்குத் துணை போகும் கேடு கெட்ட மானம் கெட்ட அரசியல்வாதிகள் நமக்குப் புதிதல்ல. நாட்டின் பாராளுமன்றத்தைத்தையே தாக்கி 11 இந்திய வீரர்களைக் கொன்று குவித்த ஒரு கொடிய மிருகத்துக்கு வக்க்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறது தேசத் துரோக காங்கிரஸ¤ம், கம்னியுஸ்டுகளும். சீனப் போரில் சீனாவை ஆதரித்த கம்னியுஸ்டுகளின் இன்றைய முதல்வர் அச்சுதானந்தன் 100 பேரைக் கொன்ற கொடிய மிருகத்துக்கு விடுதலை கோரி சென்னைக்கு காவடி எடுத்த அக்கிரமம் சமீபத்தில் நடந்தேறியது. ஒரு விஸ்கி பாட்டிலுக்காகவும், சிற்றினபங்களுக்காகவும் தேசத்தின் பாதுகாப்பு ரகசியங்களையே விலை பேசிய அதிகாரிகளை நாம் அறிவோம். சுவிஸ் வங்கிகளிலும், செயிண்ட் கிட்ஸ் தீவுகளிலும் குவியப் போகும் பணத்துக்காக சவப்பெட்டியில் கூட ஊழல் செய்த அதிகாரிகள் நமக்குப் புதிதல்ல. ஆனால் இந்தக் கேடுகெட்ட, நாசகார, சதிகார, காசுக்காக தன் வீட்டுப் பெண்களைக் கூட விற்கத் தயங்காத அரக்கக் கும்பலுடன் இன்று இன்னொரு நாசகாரக் கும்பலும் சேர்ந்திருக்கிறது, அந்தக் கும்பல் வேறு எதுவும் அல்ல, தங்கள் எழுத்துக்களால் மக்களை உய்விக்க அவதாரம் எடுத்த ந
து மாண்புமிகு எழுத்தாளர்கள்தாம்.

அருந்ததி ராய் போன்ற தேசத் துரோக எழுத்தாளர்கள் வடக்கில் ஏற்கனவே பிரபலம்தான். பாக்கிஸ்தானில் சென்று கூசாமல் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதும், இந்திய நலன்களுக்கு எதிராகவே எழுதுவதும் பேசுவதுமே தனது தொழிலாகக் கொண்ட அருந்ததி ராய் போன்ற பிறவிகளுக்கு இப்பொழுது தென்னாட்டில் இருந்து ஒரு கும்பல் சேர்ந்து கும்மியடிக்கக் கிளம்பியிருக்கிறது.

தமிழ் நாட்டை தங்கள் எழுத்துக்கள் மூலமாக உய்விக்க அவதாரம் எடுத்த எழுத்தாளர்கள் பலர் சேர்ந்து ஒரு போராட்டம் நடத்துகிறார்கள். கையெழுத்து வேட்டை நடத்துகிறார்கள், அந்த தார்மீக மனித உரிமைப் போராட்டத்தில் குதித்து தங்களது கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். கோரிக்கை என்ன தெரியுமா ?

தமிழ் நாட்டில் வறுமையில் வாடும் எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவி கேட்டோ,
தமிழ் நாட்டு வியாபார நிறுவனங்களில் கொத்தடிமையாக வேலை செய்யும் இளம் சிறார்களின் விடுதலை கோரியோ
தமிழ் நாட்டில் இருந்து கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கும், பம்பாய்க்கும் கடத்தப் பட்டு விபச்சாரத்தில் சீரழியும் இளம் பெண்களின் நல்வாழ்வு குறித்தோ
தமிழ் நாட்டுச் சிறைகளில் நீதி கிடைக்காமல் போராடும் அப்பாவி ஏழைகளுக்கு விடுதலை கோரியோ
தமிழ் நாட்டில் தலை விரித்தாடும் லஞ்ச லாவண்யங்களுக்கு எதிரான கோரிக்கையோ
தமிழ் நாட்டின் தலைமைக் குடும்பத்தால் நடத்தப்படும் தொலைக்காட்சி மா·பியாக் கும்பலை எதிர்த்தோ
தமிழ் நாட்டில் மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து தங்கள் குடும்ப டி வி கொழிக்க அளிக்கப் படும் இலவச டி வி கொடுமைகளை எதிர்த்தோ
தமிழ் நாட்டு அரசியல்வியாதிகளால் கண்டு கொள்ளாமல் மக்களைக் கொல்லும் சிக்குன் குனியா நோய் குறித்தோ
தமிழ்நாட்டின் அன்றாடம் களவாடப் பட்டு அழிக்கப் படும் இயற்கை வனக்களைக் குறித்தோ, மண் கொள்ளை குறித்தோ, மரக் கொள்ளை குறித்தோ, இவை போக தமிழ் நாட்டு மக்கள அன்றாடம் அலைக்கழிக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகளைக் குறித்தோ அல்ல இந்த கேடுகெட்ட எழுத்தாளர்களின் போராட்டம். இந்தக் கேவலமான பிறவிகள் போராடுவதோ ஒரு தீவிரவாதியின் விடுதலைக்காக. ஆம், அப்துல் நசார் மதானியென்ற மனித உருவில் திரிவும் ஒரு மிருகத்துக்கு ஜாமீன் விடுதலை கேட்டு. யார் இந்த மதானி ?

1998 கேயம்புத்தூரில் குண்டு வைத்து 60 மேற்பட்ட ஏழை இந்துக்களை, நடைபாதைக் கடைக்காரர்களை, ஜவுளிக் கடையில் வேலை பார்க்கும் அப்பாவி ஏழை பெண்களை கோடூரமாகக் கொன்று தீர்த்தது ஒரு அரக்கக் கூட்டம். அந்த அரக்கக் கூட்டத்தை வேறு வழியில்லாததால் காவல் துறை கைது செய்து இன்று அந்த மிருகங்களுக்கு சிறைச்சாலைகளில் ராஜ உபசாரம் அளித்து வருகிறது தமிழ் நாடு அரசு. அந்தக் கொடூரமானக் கோரக் கொலையைத் திட்ட மிட்டு நடத்தியவன் அப்துல் நசார் மதானி என்ற தீவிர மத வெறியன். கேரளாவில் தனது ரவுடித்தனத்தாலும், மிரட்டல்களாலும் , வன்முறையாலும், பண பலத்தாலும், பாக்கிஸ்தான் உதவியினாலும் மதத்தீவீரவாதத்தைப் பரப்பி வந்தக் கயவன் மதானி. கோவை குண்டு வெடிப்பை திட்டமிட்டு அதற்கான வெடி பொருட்களைத் தருவித்துக் கொடுத்து கோடூரமான படுகொலைகளின் காரணக்ர்த்தா. தமிழகப் போலீசாரால் பல்வேறு கொடூரமான குற்றங்களுக்காக கோர்ட்டில் குற்றம் சாட்டப் பட்டவன். இவனது விடுதலை இந்தியாவின் அமைதியையும், மத நல்லிணக்கத்தையும் குலைத்து, ஆயிரக்கணக்கான இந்துக்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. அசுர குணங்களின் மொத்த உருவம்.

இது போன்ற ஒரு கொடிய விலங்குக்கு விடுதலை கேட்கிறார்கள் தமிழகத்தின் மேன்மை தங்கிய எழுத்தாள பெருமக்கள் சிலர். காறி உமிழ வேண்டாம் இந்தக் கயவர்களின் மூஞ்சியில் ? ஒரு தீவீரவாதிக்குக் வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகள் எல்லாம் எழுத்தாளர்கள்!! படித்தவன் சூது செய்தால் அய்யோ என்று போவான் என்று கூறினான் பாரதி. இங்கு ஒன்றல்ல இரண்டல்ல 42 படித்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் சூது செய்துள்ளார்கள். எதற்காக இந்த சூது என்பதை ஊகிப்பது ஒன்று சிரமமான காரியம் அல்ல. அரசியல்வாதிகள் ஓட்டுக்காக தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்றால் இந்த வெட்கம் கெட்ட ஜென்மங்கள் எதுக்காக ஆதரிக்கிறார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த எழுத்தாளர்கள் என்றைக்காவது கோவை குண்டு வெடிப்பில் தன் குடும்பத்து ஒரே சம்பாதிக்கும் நபரை இழந்து அநாதை ஆன குடும்பத்தைப் பற்றி எண்ணியிருப்பார்களா, எழுதி இருப்பார்களா ?

கோவை குண்டு வெடிப்பில் சுக்கல் சுக்கலாகச் சிதறிய ஏழை நடைபாதை வியாபாரியையும் அவனோடு சிதறிய அவனது குடும்பத்தையும் பற்றி ஒரு வரியாவது எங்காவது ஒரு கவிதை ஒரு வரிக் கதையையாவது இதில் ஒருவராவது எழுதியிருப்பார்களா ?

கோவை குண்டு வெடிப்பினால் தன் தந்தையை, தாயை இழந்து அநாதையான குழ்ந்தைகளைப் பற்றி ஒரு நாளாவது இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் நினைத்தாவது பார்த்திருப்பார்களா ?

ஒவ்வொரு சிறைச்சாலையிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளும் ஏழைகளும் உரிய மருத்துவ வசதி இன்றி செத்துக் கொண்டிருப்பார்களே அவர்களுக்கெல்லாம் ஜாமீன் வேண்டி இந்த எழுத்தாளப் பெருமக்கள் என்றைக்காவது கையெழுத்து வேட்டை நடத்தி இருபார்களா?

அதென்ன மதானிக்கு மட்டும் இவ்வளவு அக்கறை, ஒரு வேளை குறைந்த பட்சம் நூறு பேர்களையாவது கொன்ற மத வெறி பிடித்த மிருகங்களுக்கு மட்டும்தான் வக்காலத்து வாங்குவார்களா இந்த அறிவு ஜீவிகள் ? மதானி பெரிய தலைவராம், மதிப்புக்குரியவராம் வெட்கம் இன்றி சொல்லுகிறார்கள் இந்த மனித குல விரோதிகள். இவர்களது கோரமான நிஜ முகம் இன்று வெளீப்பட்டு விட்டது, இவர்கள் யார் பக்கம் என்பது இன்று தெளிவாகி விட்டது. மக்களை குண்டு வைத்துக் கொல்லும் கொடிய தீவீரவாதிகளை விட ஆபத்தானவர்கள் இந்த அறிவுத் தீவீரவாதிகள். மதானியை விடக் கொடுமையான தண்டனை அடைய வேண்டியவர்கள் மக்களுக்கு அன்பையும், மனித நேயத்தையும் போதிக்க வேண்டிய இந்த எழுத்தாளர்களும் கவிஞர்களும். தீவிரவாதிக்கு வக்காலத்து வாங்கும் இந்தப் பிறவிகளை எழுத்தாளர்கள் என்றும் கவிஞர்கள் என்று அழைப்பது உண்மையான எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் நாம் செய்யும் துரோகமாகும்.

மனித உரிமை என்பது தீவீரவாதிகளுக்கு மட்டும் கிடையவே கிடையாது. அவர்கள் மனிதர்கள் அல்லர், அரக்கர்கள், மிருகங்கள் அந்த கொடூரமான மிருகங்களுக்கு வக்காலத்து வாங்கக் கிளம்பியிருக்கிறது தமிழ் நாட்டில் இருந்து எழுத்தாளர் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்ட ஓநாய்க் கூட்டம் ஒன்று.

தேச நலனில் அக்கறை கொண்ட, தீவீரவாதிகளை அழிப்பதில் அக்கறை கொண்ட, இந்த தேசத்தின் பாதுகாப்பிலும் இறையாண்மையிலும் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனும் எதிர்க்க வேண்டும் இந்தக் கேடு கெட்டக் கும்பலை. இந்தக் கயவர்களை நாம் அடையாளம் கொள்வதுடன், தீவீரவாதிக்கு ஆதரவு காட்டும் இந்தக் சதிகாரக் கும்பல் அனைவரையும இந்தியாவில் நியாயமான ஒரு அரசாங்கம் நடக்குமானல் குண்டர் சட்டத்திலோ, போட்டா சட்டத்திலோ தேசத்துரோக சட்டத்திலோ உடனடியாக உள்ளே தள்ளி தக்க விசாரணை நடத்தி தயவு தாட்சண்யமின்றி தூக்கில் போட வேண்டும். ஆனால் கேடு கெட்ட இந்த பாரத தேசத்தில் மக்களைக் காக்க வேண்டிய அரசாங்கமே பாராளுமன்றத் தீவீரவாதி அப்சலுக்கு மன்னிப்பு வேண்டி மண்டி போட்டுக் கெஞ்சும் பொழுது, மக்களின் அறிவுக் கண்களைத் திறக்க வைக்க வேண்டிய எழுத்தாளர்கள் அதே தீவீரவாதிகளின் விடுதலைக்காக போராடுவதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான்.

மதானியை விடுவிக்கக் கோரி எழுத்தாளர் என்ற போர்வையில் திரியும் குள்ள நரிக் கும்பல் ஒன்றின் கோரிக்கைகளையும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்திக் கையெழுத்திட்ட தேசத் துரோக, மக்கள் விரோத, தீவீரவாதக் கைக் கூலிகளையும் இங்கு இட்டுள்ளேன். நண்பர்களே நாம் கண்டு கொள்ளுங்கள் இந்தக் கயவர்களை, காறி உமிழுங்கள் இந்த தேசத்துரோகிகளை. மனித குலத்துக்கே எதிரிகளாக எழுத்தாளர்கள் என்ற போர்வையில் உலவும் ஓநாய் கும்பலின், கயவர்களின் அடையாளாங்கள் இதோ:

இந்த எழுத்துத் தீவீரவாதிகளின் கோரிக்கைகளையும் அதுக்கு ஆதரவாகப் கையெழுத்திட்டவர்களின் பட்டியலையும் கீழே படியுங்கள்

*****************************************************************************************************

தமிழக சிறையிலிருக்கும் கேரளாவின் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியை உடனடியாகப் பிணையில் விடுதலை செய்ய, தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமென சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத்தாளர்கள் – மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டறிக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த 1998 மே மாதம் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், மதானியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. கடுமையான நீரிழிவு நோய், மூட்டு வலி, முதுகுத் தண்டு பாதிப்பு எனப் பல்வேறு வகையில் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டபோது 108 கிலோவாக இருந்த அவரது உடல் எடை, தற்போது 54 கிலோவாக குறைந்துள்ளது. அவரது வலது காலுக்கு பொருத்தப்பட்டுள்ள செயற்கை கால் மாற்ற வேண்டி உள்ளதால், அவர் எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில் உள்ளார்.

மதானிக்கு சிகிச்சை அளிக்க சிறையில் போதிய வசதிகள் இல்லை. தற்போது சிகிச்சை அளித்து வரும் கோட்டக்கல் ஆயுர்வேத சிகிச்சை மையமும் கூட, சிறையில் சிகிச்சை அளிக்கப் போதிய வசதியில்லை என சான்று அளித்துள்ளது. இந்நிலையில், அவருக்கு நவீன வசதிகள் கொண்ட சிறைக்கு வெளியே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

மக்கள் ஜனநாயக கட்சி கேரளாவில் மக்கள் செல்வாக்குடன் செயல்படும், தேர்தலில் பங்கேற்கும் கட்சியாகும். இது, வன்முறையை நோக்கமாகக் கொண்ட கட்சி அல்ல. மதானி இதுநாள் வரையிலும் எந்த வழக்கிலும் தண்டனை அடைந்தவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள், கடந்த ஆட்சியின் போது மதானியை பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அண்மையில்கூட கேரள முதல்வர் அச்சுதானந்தன், தமிழக முதல்வரை நேரில் சந்தித்து மதானியை விடுதலை செய்யக் கோரியுள்ளார். கேரளாவிலுள்ள அரசியல் கட்சியில் எதுவும் மதானிக்கு பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, கேரளாவின் மக்கள் செல்வாக்குடைய அரசியல் தலைவரான அப்துல் நாசர் மதானியை அவரது உடல்நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக பிணையில் விடுதலை செய்ய தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்

பா. செயப்பிரகாசம், கவிஞர், சிறுகதை ஆசிரியர் –
அ.மார்க்ஸ், எழுத்தாளர், விமர்சகர் –
கோ.சுகுமாரன், செயலாளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுவை –
டாக்டர் ப.சிவக்குமார், கல்வியாளர், முன்னாள் அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் –
பொ. இரத்தினம், மூத்த வழக்கறிஞர், சமூக நீதி வழக்கறிஞர்கள் மையம்-
சி.நீலகண்டன், ஆசிரியர், ‘அநிச்ச’- இருமாத இதழ் –
சுகிர்தராணி, தலித் கவிஞர், பெண்ணுரிமையாளர் –
வெளி.ரங்கராஜன், எழுத்தாளர், அரங்க விமர்சகர் –
சாரு நிவேதிதா, நாவலாசிரியர், பத்தி எழுத்தாளர் –
சுகுணா திவாகர், எழுத்தாளர், பத்திரிகையாளர் –
ஆ.இரமேசு, தமிழ் ஆய்வு மாணவர் –
வசுமித்ரா, கவிஞர் –
புனிதபாண்டியன், எழுத்தாளர், ஆசிரியர் ‘தலித் முரசு’ –
வீராச்சாமி, எழுத்தாளர் –
கே.எம்.வேணுகோபால், எழுத்தாளர், பத்திரிகையாளர் –
ஜெ. ?¡ஜ?¡ன் கனி, கவிஞர் –
இன்குலாப், கவிஞர் –
கவிக்கோ அப்துல் ரகுமான் –
வ.கீதா, விமர்சகர், வரலாற்றாசிரியர், பெண்ணுரிமையாளர் –
சே.கோச்சடை, தலைவர், தமிழ் மொழிபெயர்ப்பு எழுத்தாளர் சங்கம் –
கோணங்கி, நாவலாசிரியர் –
குட்டி ரேவதி, கவிஞர் –
மதிவண்ணன், கவிஞர் –
ச.பாலமுருகன், நாவலாசிரியர், பொதுச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் (P.U.C.L) –
கடற்கரய், கவிஞர், பத்திரிகையாளர் –
இரத்தின கரிகாலன், கவிஞர் – சு.தமிழ்ச்செல்வி, நாவலாசிரியர் –
அழகிய பெரியவன், தலித் நாவலாசிரியர் –
விடியல் சிவா, பதிப்பாளர் –
லட்சுமி மணிவண்ணன், கவிஞர், நாவலாசிரியர், ஆசிரியர் ‘சிலேட்’ –
தளவாய் சுந்தரம், எழுத்தாளர், பத்திரிகையாளர் –
கவிதா சரண், எழுத்தாளர், ஆசிரியர் ‘கவிதா சரண்’ –
ஜெயந்தன், எழுத்தாளர் –
யூமா வாசுகி, நாவலாசிரியர், ஓவியர் –
சி.மோகன், எழுத்தாளர், விமர்சகர் –
கண்மணி, எழுத்தாளர் –
ஓடை துரை அரசன், விமர்சகர் –
சுதாகர் கத்தக், தலித் எழுத்தாளர் –
கண்ணன். எம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் –
சிவக்குமார், எழுத்தாளர், மொழிப்பெயர்ப்பாளர் –
வெ.கோவிந்தசாமி, மொழிபெயர்ப்பாளர் –
பெரம்பூர் கந்தன், எழுத்தாளர், ஆசிரியர் ‘அறிவுக் கொடி’
**********************************************************************************************

தமிழகச் சிறைகளில் இதை விடக் கடுமையான கொடிய நோய்களில் தவிக்கும் ஆயிரக்கணக்கான சிறைக் கைதிகள் இருப்பார்களே, அவர்களில் பலரும் சாதாரண குற்றவாளிகளாகக் கூட இருப்பார்களே, அவர்களுக்கெல்லாம் என்றைக்காவது வக்காலத்து வாங்கியுள்ளார்களா இந்த எழுத்தாளர்கள் ? ஒரு கைதிக்கு உரிய மருத்துவ உதவி அளிக்கப் படவில்லையென்றால் அரசாங்கம் தனது மருத்துவமனைகளில் மட்டுமே உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க இயலும். அதைத்தான் பிற சாதாரண கைதிகள் பெற்று வருகிறார்கள். இவருக்கு மட்டும் சிறப்புச் சலுகை கேட்க இந்த அறிவு ஜீவிகளுக்கு ஏன் தீடீர் அக்கறை ? ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் மதானியின் விடுதலையை கேட்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எலி ஏன் எள்ளூருண்டைக்குக் காய்கிறது என்பது புரிகிறது. ஆனால் இந்த எலிப் புளுக்கைகள் எதற்காகக் காய்கின்றன ? யாருக்காகக் காய்கின்றன ? கிடப்பது கிடக்க கிழவியைத் தூக்கி மனையில் வை என்று தீடீரென்று ஏன் மதானியின் விடுதலைக்குக் கோரிக்கை. படிப்பவர்கள் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்வார்கள். எழுத்தாளன் என்பவன் ஒரு சமுதாயத்தின் அறிவீனத்தைக் களைந்து, மக்களின் அறியாமையைப் போக்கி அவர்களை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் இந்த எழுத்தாளர்களோ ஒரு கொடிய தீவீரவாதியை விடுதலை செய்ய பாடு படுகிறார்கள் என்றால் யார் இவர்கள்? இவர்களின் நோக்கம் என்ன ? கொள்கை என்ன ? எதற்காகச் செய்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் சிந்தித்து, இவர்களை அடையாளம் காண வேண்டியது
வசியமாகிறது.

மத வெறி பிடித்த , ரத்த வெறி பிடித்த ஒரு மிருகத்துக்கு விடுதலை கோரும் இந்த மனித குல விரோதிகளையும் நாம் தீவீரவாதிகளாகவும், தீவீரவாதத்திற்கு தூபம் போடுபவர்களாகவும் தீவீரவாதிகளின் கைக்கூலிகளாகவும் அடையாளம் காண வேண்டும். நமது கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்பதுடன் இவர்களைப் புறக்கணிப்பது தேசப் பற்றுள்ள ஒவ்வொரு இந்தியரின் கடமையும் ஆகும்.

Series Navigation