This entry is in the series 20040722_Issue

ஜீவன்


கண்ணிண் மணியோ
கருகித் திருவுளமோ
யார் பெற்ற
பெரும் பேறோ
மெய் கருக்கி நாம்
உம்மை
காவு கொடுத்தோமோ

பால் வடிந்ததுன்வாய்
தன் முலை ஈரம்
காயாதுன் தாய்
பள்ளி செல்ல
தன் தோள்
சுமந்த உன் உறவு
ஊரெல்லாம்
கதறியழும் ஓசை
நெஞ்சை பிளிகிறது

தீயே…
நீ உன்
நீண்ட நாக்கிழுத்து
நீயுண்ட பாலகரை
நீண்ட வரிசையிலே
கருக்கிக் கிடத்திடவே
வயதென்ன ஆச்சு அவர்க்கு
கல்வி பயிலவென
வந்த பாலகர்கள்
சீ..
கண்ணில்லையா
உனக்கு

அன்றொரு நாள்
நீயுண்டாய்
ஆயிரமாயிரமாய்
அத்தனை நுால்களையும்
எங்கள் தேசமதில்
நாமறிய முடியாமல்
நள்ளிரவில்
நீயுண்டாய்…
நெஞ்சு கருகி
நெக்குருகி
நம் நெஞ்சில் தீயாக
உன்தன் கரிவாய்க்கு
கொள்ளியிட நின்றிருந்தோம்

என்னும் அடங்கவில்லை
கோரப் பசியுனக்கு
திண்டுவிட்டாய்
பச்;சை பாலகரை
தீயே! நாயே!!
நீ தீபம் ஆகமாட்டாய்

22 ஜூலை-2004
ஜீவன்
நந்தா கந்தசாமி
nandakandasamy@hotmail.com

Series Navigation