தீபாவளி வெடி பற்றி… சொன்னாலும் சொல்வாங்க

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

ரத்னகுமார்


ரஜினிகாந்த்

கண்ணா, நீ பத்த வச்சாத்தான் வெடிக்கும், இந்த பாபா பார்த்தாலே வெடிக்கும். இந்த பாபா வெடி எப்போ வெடிக்கும், எப்படி வெடிக்கும்னு யாருக்குமே தெரியாது. ஆனா, வெடிக்க வேண்டிய நேரத்தில கரெக்டா புஷ்ஷாயிடும். ஆனா ஒன்னு மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்கோ. வெடிக்கறது வெடிக்காம இருக்காது. வெடிக்காம இருக்கறது வெடிக்காது… வரட்டா..

**

விஜயகாந்த்

இந்த வெடி வெடிக்கிறது கஷ்டம் இல்லை. ஆனா அதுல எனக்கு இஷ்டம் இல்லை. எனக்கு மட்டும் ஒரு பாக்கெட் லட்சுமி வெடியும், ஒரு ஊதுபத்தியும் கொடுத்தீங்கன்னா, இந்த நாட்டை துண்டாட நினைக்கிற தீவிரவதிகளை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன். ஆனா அதுக்கு முன்னாடி எனக்கு நீங்க சகல அதிகாரங்களையும் கொடுக்கணும். வாழ்க தமிலு வெல்க தமிலு.

**

பாரதிராஜா

அய்யா, நான் படிக்காதவன், ஆனா நான் சொல்றது என்னான்னா, இப்போ இந்த கர்னாடகா நமக்கு தண்ணி கொடுக்கலையோ, நம்ம மட்டும் எதுக்கு தீவாளி அன்னைக்கி மைசூரு பாக்கு பண்ணனும் ? அதுக்கு பதிலா நெய்வேலி பாக்கு பண்ணலாமே ? அதுக்கு வேண்டிய எல்லா உதவியும் அம்மா செஞ்சி தரதா சொல்லிட்டாங்க. அதுனால, தீவாளி அன்னிக்கி நெய்வேலி பாக்கு செய்றோம்.

**

கலைஞர்

பொதுவாக நமக்கு வீடுகளில் மைசூர் பாக்கு செய்வது அம்மாக்கள்தான். எனவே இப்போது தம்பி பாரதிராஜா மைசூர் பாக்கு பற்றி பேசுவதால் இதுவும் அம்மாவுடைய சதிதான் என்பது என் உடன் பிறப்புக்குத் தெரியும். அதுவும் இல்லாமல் நெய்வேலி பாக்கு செய்வதில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால், என் தம்பிகள் அதில் ஈடுபடமாட்டார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால் து சமயம் தம்பி ரஜினி ஏதாவது பாக்கு செய்ய முன் வந்தால் கழகம் அதற்கு ஆதரவு அளிக்கும்.

**

கமலஹாசன்

தீபாவளி அன்று நெய்வேலிபாக்கு செய்வதாலோ அல்லது மைசூர் பாக்கு செய்வதாலோ எந்த நன்மையும் இல்லை. சொல்லப்போனால், தீமையும் இல்லை. செய்யலாமா என்று என்னைக்கேட்டால், செய்வதனால், எப்படியும் விளைவுகள் போஸ்ட் மாடர்னிஸம் வகை சார்ந்தவை என்று பதில் சொல்லலாம். செய்யாமலே செய்து விட்டேன் என்றும் சொல்லலாம். இது எல்லாம் மன அதிர்வுகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள்

**

நடிகர் விஜய்

போதுவா தீவாளி அன்னிக்கு நான் பாத்ரூம்லே தான் வெடி வெடிப்பேன். அதுவும் எங்க வீட்டு பாத்ரூம் விட பக்கத்து வீட்டு பாத்ரூம்னா ரொம்ப இஷ்டம். சோப் வெடிதான் ரொம்ப புடிச்ச வெடி.

**

சுப்பிரமணியம் சுவாமி

தீவாளி அன்னிக்கி செத்தது நரகாசுரன் இல்லன்னு எனக்கு சிஐஏலேர்ந்து ரகசிய தகவல் வந்து இருக்கு. இந்த தகவலை நான் வர தீவாளிக்குள்ள வோர்ல்ட் பேங்க் உதவியோட டா பார்டி நடத்தி நிரூபிச்சிக் காட்டறேன்

**

டாக்டர் ராமதாஸ்

போன தீவாளியின்போது, என் பேரன் கையில் வெடித்து பெரும் சேதம் உண்டாக்கியதால், குருவி வெடி தமிழருக்கு எதிரான வெடி என்பது நிருபணம் ஆகிறது. அதனால் குருவி வெடி பி எம் கே தொண்டர்கள் யாரும் வெடிக்கக் கூடாது.

**

தகவல்

ஜெயங்கொண்டத்தில் சில பி.எம்.கே தொண்டர்கள் ஒரு பட்டாசு கடையில் இருந்து 2 பாக்கெட் குருவி வெடி எடுத்துக்கொண்டு ஓட்டம். போலீஸ் வலை வீசி தேடுகிறது.

**

ஜெ. ஜெயலலிதா

தஞ்சை பகுதி விவசாயிகள் கர்னாடகா அரசும் கருணாநிதியும் சேர்ந்து செய்த சதியால் வாழ வழி தெரியாமல் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர வழி காணும் பொருட்டு தீவாளி அன்று 2 பாக்கெட் பிஜ்லி வெடியும் 1 பாக்கெட் கம்பி மத்தாப்பும் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

**

கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு

இந்த அரசு கொடுக்கும் பிஜ்லி வெடி பத்தாது. அதற்குப் பதிலாக குறைந்த பட்சம் யானை வெடியாவது கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

Senthil_Rethan@yahoo.com **

Series Navigation

ரத்னகுமார்

ரத்னகுமார்