This entry is in the series 20050826_Issue

தேவமைந்தன்


எல்லா அப்பன்களுக்கும்
தங்கள் பையன்களுக்கு–
குறிப்பாக எட்டுஒன்பது வயதான
விஜய்கனவும் சிறுவர்களுக்கு,
முடியை ஒட்டத்தட்டிவிட
வேண்டும்என்ற வைராக்கியம்
பிறந்துவிடும் போலிருக்கிறது.
எல்லா அம்மாக்களுக்கும்
தங்கள் பையன்களைக்
கணவன்மாரிடமிருந்து
காத்துவிடவேண்டும் என்ற
லட்சியவெறி தோன்றிவிடும்
போலிருக்கிறது.
எல்லாப் பெண்களுக்கும்
தங்கள் அப்பாமார்தாம்
தங்களைக் காப்பார்களென்ற
நம்பிக்கை, பின்னர்
கணவன்மாருக்கு மாற்றலாகும்
போலத் தெரிகிறது.
எல்லாப் பையன்களுக்கும் அல்ல–
முடி ஒட்ட நறுக்கப்படும் பையன்களுக்கு,
காலம் காலமாய்
தந்தைமார்மேல் வெறுப்பு
ஊன்றிவிடும் என்பது
உணரப் படுகிறது-
என்னுள் இருக்கும்
ஒன்பதுவயதுச் சிறுவனால்.
—-
pasu2tamil@yahoo.com

Series Navigation