தாவோ வாழ்வியல் (மூலம் : திரேக் லின்)

This entry is part [part not set] of 29 in the series 20060303_Issue

தமிழாக்கம் : அர்த்த சாக்கியன்


வட கடலுக்குள் வசிக்கிறது ஒரு மீன்

அதன் பெயர் ,,,, ‘குன்’

குன்னின் பேரளவு

எத்தனை ஆயிரம் மைல் ?

நமக்குத் தெயாது ?

குன் ஒரு பறவையாய் உருமாறுகிறது

அந்தப் பறவையின் பெயர் ,,,, ‘பெங்’

அந்தப் பறவைச் சிறகின் விப்பளவு

எத்தனை ஆயிரம் மைல் ?

சிறகை வித்து அது

மேலெழும்பும் போது

விண்ணில் மேகத்தை ஒத்திருக்கிறது

அதன் சிறகுகள்,

வடகடல் குமுறிக் கொந்தளிக்கும் போது

தென் கடல் நோக்கிப் பயணிக்கும்

இந்தப் பறவை,

தென் கடல் என்பது வின்னுலகத் தடாகம்! ,

ஷீவாங்ட்சுவின் தலைசிறந்த படைப்பின் கம்பீரமான தொடக்க வகள் இவை, ஒரு புராணகால உயி செயலுக்குத் தாவும் கிளர்ச்சியான சித்தப்பினை வழங்குகின்றன இவ்வகள், அதே சமயம் இவற்றின் பொருள் என்னவாக இருக்கக் கூடும் என்ற மர்மமான ஒரு புதிரையும் நமக்கு விடுக்கின்றன,

இன்றைக்கோ அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரோ பெங் பறவை என்றொரு உயினம் இருந்ததில்லை, எனவே இது ஒரு யதார்த்தமான சித்தப்பு அல்ல. ஒரு உருவகம், எந்த விதமான வெளிப்படையான விளக்கங்களையும் வழங்காமல். நாமே அவரது கருத்தினை ஆராய்ந்து அறியும் வகையில் இந்த உருவகத்தை வரைந்திருக்கிறார் ஷீவாங்ட்சு,

இன்னமும் வெளிப்படாத துவக்க காலத்திய உங்களது ஆன்மாவைக் குறிக்கிறது ‘குன்’. குன்னின் பேரளவு உங்களுக்குள் உறையும் மிகப்பெரும் ஆற்றலை சாத்தியப்பாட்டினைக் குறிக்கிறது, வடகடலில் இருந்துதான் முதலில் நீங்கள் துவங்குகிறீர்கள், அது மிகவும் குளிர்ந்ததும் இருண்டதும் ஆன இடம், அதன் ஆழமான சகதிப் பரப்பில் குழம்பிய நீல் அதிகமாக நீங்கள் எதையும் கண்டுவிட முடியாது, உண்மையில் நீங்கள் இருளில் இருந்துகொண்டு குருட்டுத்தனமாக நீந்திக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு வகையில் வலையிலகப்பட்டதைப் போல நீங்கள் வரையறைக்குள்ளாகி இருக்கிறீர்கள்,

வடகடலில் மற்ற மீன்களும் இருக்கின்றன, அவை மிகவும் சிறியவை, இம்மைக்குய சாமானிய இருப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவை இவை. என்பதோடு தண்ணீருக்கு மேலே இருக்கும் மிகப் பிரம்மாண்டமான உலகினைப் பற்றி அவற்றுக்கு ஒன்றும் தெயாது, ஆகாயம் என்பது பற்றி நீங்கள் உய்த்துணர்ந்த அளவு அவை எதையும் கண்டதில்லை, காலாகாலத்தில் அவற்றில் சில பெயவை ஆக வளரக்கூடும் என்பதோடு கடலுக்கு மேல் உள்ள விந்தையான பரப்பின் மீது ஆர்வம் செலுத்தவும் கூடும், ஆனால். இப்போதைக்கு நீங்கள் மட்டும்தான் அதனை உணர்ந்தவராக இருக்கிறீர்கள்,

இந்த வார்த்தைகளை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்ற உண்மையின் காரணத்தாலேயே. மேற்சொன்ன உருவகத்தை உங்களுக்குப் பொருத்திப் பார்க்கும் தேவை எழுகிறது, இம்மைக்குய தாவோ தத்துவம் கடந்து இந்த விந்தை உலகில் அக்கறை காட்டத் தொடங்கி இருக்கிறீர்கள், தினம் தினம் எதிர்கொள்ளும் எவர் ஒருவரையும் விட நீங்கள் வித்தியாசமானவர்கள், அவர்கள் இம்மைக்குய சாமானிய வாழ்வில் திருப்தி அடைந்துள்ளனர், நீங்களோ மேலதிகமாக வேறு எதையோ விரும்புகின்றீர்கள், நீங்கள் மட்டுமே தனிச் சிறப்பு கொண்டவர்கள்,

பிறகு ஒரு நாள் ஏதோ நிகழ்கிறது, கரை உடைத்துக் கொண்டு ஒரு பாய்ச்சல் பிரவகிக்கின்றது, வியப்புக்குயதோர் மாற்றத்துக்கு உள்ளாகிறது ‘குன்’. திருப்புமுனை ஏற்படுத்தும் திரட்சியாகி. சங்கிலித்தொடர் போன்ற ஆன்மீக மறு விளைவினைத் தூண்டிவிடுகிறது, திறவுகோலை ஒத்ததொரு வினை இது, எல்லாமும் இந்த சிறப்பினைச் சார்ந்தே இருப்புக் கொள்கின்றன,

இந்த மாற்றம் என்பது அடிப்படையானது, ஏற்கனவே நிகழ்ந்த அளவில் மட்டும் அதிகமாகும். வெறும் திரட்சி அல்ல, செதில்கள் சிறகுகள் ஆகின்றன, செவிள்கள் இறக்கைகள் ஆகின்றன, அதற்கென விதிக்கப்பட்டதோர் கதியில் ஆன்மா மாற்றம் அடைகிறது,

விளைவு என்பதோ மாற்றியமைக்க இயலாதது, குன் எனும் மீன். பெங் எனும் பறவையாய் மாற முடியுமே ஒழிய; பெங் எனும் பறவை மீண்டும் குன் எனும் மீனாக உருமாற முடியாது, ஆன்மா முதிர்நிலை (பக்குவம்) அடைந்த பின்னர் தனது குழந்தைப் பருவத்துக்குத் தாழ முடியாது, மாற்றியமைக்க வொண்ணாதவொரு புதல் உங்கள் மீது பிரவகித்துப் பரவி இருக்கிறது, எதுவும் பழைய நிலைக்குத் திரும்ப இயலாது என்பது உங்களுக்குத் தெயும்,

இந்த மாபெரும் வளர்சிதை மாற்றம் ஒரு காரணம் கருதியே செயற்படுகிறது, அதாவது நீண்டதொரு மகத்தானதொரு பயணத்துக்கு பெங் பறவையை ஆயத்தம் செய்கிறது, வெளிச்சமும் வெப்பமும் (கதகதப்பும்) நிலவும் தென் கடல் நோக்கிப் பறக்கப் போகிறீர்கள், இந்தப் பயணம் உங்களின் புனிதக்கடமையை நினைவூட்டுகிறது, இது உயர்நிலை நோக்கிய ஆன்மீகத் தாகமாய் அமையவும் கூடும், அன்பின் ஆழ்நிலை நோக்கிய தனிப்பட்டதொரு சொந்தத் திட்டமாகவும் அமையலாம், ஒருவருக்கொருவர் இடையினில் இருக்கும் ஆழ்ந்த பிளவுகளைத் தூர்த்து அனைவரையும் இணைக்கும் பாலம் அமைக்கும் பணியாகவும் ஆகலாம், எதுவான போதிலும் சுவர்க்கத் தடாகத்தை நோக்கிய உங்கள் பயனம். உங்களுக்கும் அப்பால் தன்னிலை கடந்தும் தனக்கு மேலானதும் ஆன பொறுப்பினை (கடமை) வழங்குகின்றது இக்கட்டம், இந்தக் கட்டுப்பாடுதான் ஒழுக்கத்தின் உண்மையான அடையாளம் என்பதோடு சுய நிறைவின் (எல்லையற்ற) வற்றாத ஊற்றுக் கண் எனவும் ஆகிறது,

அதன் பின்னர் ஒரு வாய்ப்பு வருகிறது, சூறைக்காற்று சுழன்றடித்து ஆழிப் பேரலைகளை உருவாக்கும் போது கடல் கொந்தளிக்கின்றது, இந்தப் பெருங்காற்றின் வலிய சக்தி பெங் பறவை விண்ணோக்கி எழும்பும் வாய்ப்பினை வழங்குகிறது, நீங்கள் சிறகுகளை விக்கிறீர்கள், பெருஞ்சிறகுகள் படபடக்கையில் மூன்றாயிரம் மைல் உயரம் கடல் நீர் தெறிக்கிறது, சிறகுகள் படபடக்க புயலின் வல்லமையை வரவழைக்கிறீர்கள், வானம் நோக்கி சீறிப்பாய்ந்து தொன்னூறாயிரம் மைலுக்கு மேலெழும்புகின்றீர்கள்,

ஏற்கனவே வகுக்கப்பட்ட எல்லைகளை கட்டுப்பாடுகளை. ஆன்மா கடக்கும் புறப்பாடு தான் இது, கடலுக்கு மேலாக உயர உயர எழும்புகிறது பெங் பறவை, கடல் நீரால் கட்டுப்படுத்தப்படாத ஒரு சுதந்திர உணர்வையும் ஆற்றல் பெருக்கினையும் அனுபவிக்கின்றீர்கள், நீங்கள் உங்கள் தடைகளை உடைத்தெறிந்து விட்டார்கள், பெட்டகத்திலிருந்து வெளி வந்து விட்டார்கள், இந்த ஆற்றல் மிகு பெருங்காற்று தான் அறிய அந்த வாய்ப்பு, கண்டும் காணாமலும் நம் வாழ்வைப் பாதிக்கும் உலகளாவிய பெரும் போக்குகளாக இது ஆகின்றது, கிழக்கையும் மேற்கையும் தினம் தினம் மேலும் நெருக்கமாய் இணைக்கும் முன்னேறிய தகவல் தொடர்பும் போக்குவரத்தும் வழங்கிய வரலாற்றுப் பின்னணியில் வாழ்கிறோம் நாம், இது வரை நாம் பார்த்ததில் இருந்து இவ்விரண்டின் இணைப்பு பெதொரு ஆற்றலின் கூட்டினை உருவாக்கி உள்ளதை நம்மால் காணமுடியும், தூண்டுதல் பெற்ற. உலகெங்கும் உள்ள ஆன்மாக்கள் இந்தப் புதிய நூறாயிரம் ஆண்டுகளின் புதிய (பாதை) தாவோ உருவாகும் வாய்ப்புக்கு மொட்டவிழ்கின்றன, காற்று பெரு வேகம் பெற்று மொத்த உலகின் மீதும் பிரவகிக்கின்றது, பயணத்துக்கான நேரம் நெருங்கி வருகின்றது,

பெங் பறவையின் பறத்தல். வியப்பினை-பயபக்தியினைத் தூண்டும் காட்சியாய் மலர்கிறது, அதன் வேகத்தினை அதன் உயரத்துடன்தான் ஒப்பிடமுடியும், அதற்கும் மேலாக அங்கிருந்து பார்க்கையில் உலகம் வெறும் நீலப்பரப்பாய் மறைந்து விடுகிறது, புபடாத தொலைவில் அனைத்தும் கரைகின்றன,

அந்த சாகரபட்சி மேலே பறப்பதைப் பார்த்து ஒரு சிள் வண்டும் சின்னப்பறவையும் சிக்கின்றன, சிறு பறவை சொல்கின்றது. “என்னைப்பார். நான் எங்கெங்கும் பறக்கிறேன், எனினும் ஒரு மரத்தைப் பார்த்ததும் பறப்பதை நிறுத்திவிட்டு உட்கார்ந்து கொள்கிறேன், என்னால் சில நேரம் அவ்வளவு உயரம் பறக்க முடியாது, தரையை நோக்கி இறங்கிவிடுகிறேன், தொன்னூறாயிரம் மைல் உயரம் ஏன் செல்ல வேண்டும் ? பிறகு தென் கடல் நோக்கி ஏன் பறக்க வேண்டும் ?”

பயணத்தை தொடர்கையில் உங்களது இலட்சியங்களையோ அல்லது உத்வேகத்தையோ புந்து கொள்ளாத பலரை. ஐயத்துக்கிடமின்றி. நீங்கள் எதிர்கொள்ள நேடும், அதைக் கண்டு நீங்கள் வியப்படையக் கூடாது, ஏனெனில். அவர்கள் இன்னும் இந்தப் பொருளாயத உலகச் சேற்றில் அமுங்கிக் கிடக்கிறார்கள, அவர்களது அக்கறை அற்பமானதும் உடனடியானதும் ஆகும், வாய்க்கும் கைக்குமாய் அன்றாடம் போராடி அடுத்த வேளைச் சோற்றுக்காய் ஆளாய்ப் பறந்து உண்டுண்டு உறங்கும் கூட்டத்தினர் அவர்கள்,

சிள் வண்டும் சிறு பறவையும் போல அவர்களது கண்ணோட்டம் குறுகலானது, ஆன்மீக விஷயங்களில் அவர்களுக்குப் போதுமான ஈடுபாடு இல்லை, அப்படியே யாராவது அது பற்றிப் பேசினாலும் விதண்டாவாதமாய் பயனற்ற சொற்களால் பதில் அளிப்பார்கள், சொல்லப்போனால் அத்தனை உயரம் தான் அவர்களால் பறக்கமுடியும், அதிகம் கேள்வி கேட்டால் நெடுஞ்சான் கிடையாக விழுந்து விடுவார்கள், எப்போதாவது உங்கள் கண்ணோட்டத்தை எட்ட முடிந்தால் உங்களைப் போலவே பார்க்கத் தெந்தால். நீங்கள் என்ன செய்கிறீர்கள் ஏன் செய்கிறீர்கள் என்பது புயவரும் அவர்களுக்கு, அதுவரை ஏடாகூடாமான கேள்விகளையும் ஏளனத்தையும் நீங்கள் எதிர்கொள்ள நேடும்,

நீங்கள் இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது இங்குள்ள அனைத்தும் உங்களுக்குப் பொருந்தும் என்பதை மறந்து விடாதிர்கள், சோம்பேறித்தனமான கண்ணுக்கு புலப்படாத வெற்று உருவகம் அல்ல ஷீவாங்ட்சு சொல்வது, இந்த மாபெரும் நீண்ட பயணத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதனைச் சுட்டிக் காட்டும் ஆட்காட்டி விரல் அது, உங்களில் சிலர் ஏற்கனவே பறக்கத் தொடங்கி தென்கடல் நோக்கி பயணித்திருக்கலாம், இன்னும் சிலர் உயரே எழும்பச் சயான தருணம் நோக்கிக் காத்து இருக்கலாம், மீதி உள்ளவர்கள் உங்களில் பெரும்பாலோர் வடகடல் நீல் நீந்திக் கொண்டிருக்கலாம்-உங்களின் மிகப்பெரும் ஆற்றலை இன்னும் கண்டு கொள்ளாமல்,

பயணம் அழைக்கிறது, பெரும் குன் மீனேம்

மாற்றம் அடைவதற்கு நீ தயாரா ?

மூலம் : திரேக் லின்

தமிழாக்கம் : அர்த்த சாக்கியன்

artha_sakian@sify.com

Series Navigation

author

அர்த்த சாக்கியன்

அர்த்த சாக்கியன்

Similar Posts