தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


தொடங்கியது நான்தான் !
உன்னைத்
தொட்டுவிட நீட்டினேன்
கரங்களை !
“கனவா இதுவென” என்றெனை
வினாவினேன் !
உன் பாதங்களை
என் இதயத்தில் பின்னி
இறுகப் பற்றிக் கொள்ள
இயலுமா ?
என்னிடம் விடை பெறாமல்
எனை விட்டு
நீங்காதே
என்னருங் காதலியே !

உலகே ! உன் மலரை நான்
பறித்து விட்டேன் !
என் நெஞ்சில் அதை
இறுகப் பிணைத்த பிறகு
நெருஞ்சி முள்ளாய்க்
குத்தியது !
பகற் பொழுது மங்கி
இருட்டியதும்
வாடிப் போனது மலர் !
ஆயினும்
வலி தங்கி விட்டது !

பெருமை யோடும்
வாச மோடும்
நெருங்கும் உன்னை மலர்கள்
நிதந் தோறும் !
என் மலர் தேடல் பணி
ஆயினும் இன்றுடன் நின்று
போயிற்று ! உலகே !
இருண்ட இரவிலே
என் ரோஜா
மலர் இழந்தேன் ! எஞ்சியது
வலி மட்டும்
எனக்கு !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 15, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா