தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !

This entry is part [part not set] of 33 in the series 20080515_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இரக்க மற்று மயக்கி விடுபவளே !
குருதி வெறி கொண்டு
அரக்கியான
கவர்ச்சிப் பெருமாட்டி !
எனது பகற் பொழுதை அபகரித்தாய் !
இராப் பொழுதையும்
என்னிடம் பிடுங்கிக் கொண்டாய்
இப்போது !
தரணியின் வேலிக்குள்
வரம்புடன் நடமாடி வருகிறோம்
ஒவ்வொரு வரும்
இவ்வுலகிலே !
ஏன் இப்போது எல்லை மீறி
என்னுடலை ஊடுருவி
உன் ஆணை பிறக்கிறது ?
பிரபஞ்சத்தை
இருள் போர்த்தி யுள்ளது !
அவ்விருளில்
ஒவ்வொரு வனுக்கும் இருப்பது
ஏகாந்த பீடத்தில்
ஓரிடம் !
எந்த வெற்று வெளியி லிருந்து
ஊடுருவி எழுகிறது
உந்தன் குரல்
திடீர் மின்னல் போல் ?

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 12, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா