தலைகளே….

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

நெப்போலியன்,சிங்கப்பூர்


தலையீட்டால்
தலைவெட்டா ?
தலைவெட்டி
தலையீடா ?

தலை களைந்தும்
தலையிடுமா…
தலைக்கனத்தால்
தலைக்களமா !

யார் தலை ?
ஏன் உலை ?
என்ன விலை ?

தீவிரவாதம்
திமிர்வாதம்
இரண்டின் வித்தியாசம்
ஒன்றுமில்லை
ஒரு தலை.

உன்
தலை நிமிர
ஊர்த்தலை இழக்க
இன்னமும்
அலை அலையாய்த்
தலை விழுமோ ?

வறட்டுப்பிடிவாதமும்
வன்முறையும்
அப்பாவித் தலைகளாய்
சீவப்படும் வரை…

அராஜகமும்
அத்து மீறலும்
அப்பாவி முண்டங்களாய்
வீழும் வரை…

தலைகளே,
உங்கள்
தலைகளை
அறுத்தெறிபவர்கள்
உங்கள்
அருகில்
ஆயுதங்களோடு
நிற்பவர்கள் மட்டுமல்ல….
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation

நெப்போலியன்

நெப்போலியன்