தமிழர்களின் அணு அறிவு

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

புதுவை ஞானம்


Words and the word are

an unsuspected force

They are torment or

soothing breeze. The rain that

devasts or the water that

irrigates.

But to know is nothing

what you know must become

your blood.

There are encounters that

modify the colours of things

that make blazeout what had

been underground.

But who still speaks ?

who does ask the questions

that each carries in himself ?

என எழுதினார் மார்ட்டின் கிரே என்ற அற்புதமான மனிதர் தனது Book Of Life என்ற நூலில்.

D.D.Kosambi writes, ‘I learned from there two great men (Marx and Engels) what questions to ask and then went to field work because materials did not exist in published books(P.112) — Interpreting Early India — By Romila Thaper…

இப்படிப்பட்ட இரவல் வார்த்தைகளில் என் கருதுகோளைச் சொல்லத் தொடங்குவதற்கு எனக்கு வெட்கமேதும் இல்லை. இப்படிப்பட்ட இரவல் வார்த்தைகளில் என்னை அடையாளம் காணும் போதெல்லாம் பூரிப்பும் புன்சிரிப்பும் ஒருவிதமான தத்துவார்த்த அங்கீகாரமும் உண்டாக நாம் நடப்பதும் படிப்பதும் சரிதான் எனத்தோன்றுவது ஒரு தெம்பாக ஊக்குவிக்கிறது. இது தவறான அணுகுமுறை ஆகவும் இருக்கலாம்.

அப்படி சில வார்த்தைகள் வள்ளலாரின் அருட்பாவில், திருமூலரின் திருமந்திரத்தில், யுவான் சுவாங்கின் மேல்நோக்கிய பயணத்தில், ஃபிரிஜாவ் காப்ராவின் TAO OF PHYSICS-ல் எனக்குள் ஒரு தேடுதலைத் தூண்டிவிட்டன. இது ஒரு உள்முகமான தோண்டுதல் தான், தோண்டியதை வெளியே தள்ளித்தானே மேலும் தோண்ட முடியும். புழுதியும் சகதியும் தோண்டுபவன் மேல்மட்டுமல்ல, அருகாமையில் கடந்து செல்பவன் மேலும் விழத்தானே செய்யும். தோண்டி எடுத்தபின் அது எல்லோரும் காணும் வெளிவிவகாரம் தானே. அருள் கூர்ந்து சகித்துக் கொள்ளுங்கள்.

‘எட்டுத்திசைக் கீழ்மேலெங்கும் பெருகிவரும்

வெட்டவெளி விண்ணாற்றின் மெய்

தோய்வதென்னாளோ ‘

— தாயுமானவர்.

அணுவின் அணுவினை ஆதிப்பிரானை

அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை அணுகவல்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலுமாமே

—- திருமந்திரம்

அண்டப்பரப்பின் திறங்கள் அனைத்தும்

அறிய வேண்டியே

ஆசைப்பட்ட தறிந்து தெரிந்தாய்

அறிவைத் தூண்டியே

பிண்டத்துயிர்கள் பொருந்தும் வகையும்

பிண்டம் தன்னையே.

பிரியும் வகையும் பிரியாவகையும்

தெரிந்தாய் பின்னையே

எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம்

என்ன பொருத்தமோ.

— திரு அருட்பா.

இப்படி ஏராளமான பாடல்கள் அணுவைப் பற்றி வெளியைப் பற்றி அண்டம் பற்றி எல்லாம் பேசும்போது ஏதோ பக்திப்பரவசம் மேலிட்டு தழுதழுத்த அன்புப் பிதற்றல் என்றுதான் எனக்குத் தோன்றியது. ஏராளமான அந்நியச் சரக்குகளில் குப்பைக்கூடை அல்லவா நம் அறிவுத்திரள் ?

ஆனால் Golden Lotus என்ற சீனநாவலும், Journey towards west என்ற யுவான் சுவாங்கின் இந்தியப்பயணம் பற்றிய நூலும் Fritjof Capra வின் TAO OF PHYSICS, TURNING POINT , WEB OF LIFE போன்ற நூல்களும் இந்தியர்களுக்கு தன்னைப்பற்றியும், தன்னைச் சூழ உள்ள அகிலாண்டம்(பிரபஞ்சம்) பற்றியும் குறிப்பாக அணு, அணுத்துகள் பற்றியும் நிறைந்த அறிவு இருந்ததாகக் குறிப்பிடுவது பற்றி தேட ஆரம்பித்த பயணம் இது. நியாயமாக பார்த்தால் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆற்றவேண்டிய பணி இது. அவர்களுக்கு ஒரு எளியவனின் வேண்டுகோளாகத்தான் இத்தகவல்கள் தரப்படுகின்றன.

‘In Hinduism the notion of atoms is prominent in the jaina system (which is regarded as unarthodox since it does not accept the authority of vedas.) In Buddhist philosophy atomic theories have been arisen in two schools of Hinayana Buddhism , but are treated as illusony products of a vidya by the more important Mahayana Branch. Thus Ashvagosha states:

‘When we divide some gross (or composite) matter, we can reduce it to atoms, But atom will also be subject to further division, all forms of material existence, whether gross or fine, are nothing but two shadows of particularisation and we cannot ascrible any degree of (absolute or independant) reality to them ‘ – என The Tao of Physics P-322,323 ல் படிக்க நேர்ந்து, மணிமேகலை, சீவகசிந்தாமணி இவற்றில் தேட சில ஆதாரங்கள், அதாவது அணு பற்றிய அறிவு தமிழருக்கு இருந்ததற்கானவை கிடைத்தன. அவ்வாறே திருமந்திரம் திருஅருட்பா தாயுமானவர், குணங்குடி மஸ்தான் என பல குறிப்புகள் கிடைத்திருக்கின்றன.

‘அணு ‘ : (1) நுண்மையானது, (2) சிறுமை (3) ஆன்மா

என்ற 1952ல் வெளியிடப்பட்ட மாக்மில்லனின் தற்காலத் தமிழ்ச்சொல் அகராதி குறிப்பிடுகிறது. எனவே ஏதோ ஆன்மா பற்றியது எனப்பல சுயமரியாதைச் சிந்தனையாளர்கள் ஒதுக்கிவிடலாம், ஆனால் அணுத்துகள் Particles பற்றி மேலும் ஆய்வு செய்கையில் Hardons, Leptons என வகைப்படும், மேலும் துல்லியமாக Baryons, Messons என வகைப்படும் மேலும் துல்லியமாக Prion, Kaon etc, Lambda, Sigma , Omega போன்றவை கூட கிரேக்க அகரவரிசையின் பெயராகத்தான் இருப்பது ஆய்வுக்குரியதாகவே எளியோனுக்குத் தோன்றுகிறது. இவற்றின் அளவீடுகளும் மற்ற விவரங்களும் ஆதாரபூர்வமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே ஆறாம்திணையில் வெளிவந்த ஆண்டிவாத்தியாரின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தமிழர்கள் பயன்படுத்திய நுண்ணிய அளவைகள் அதாவது கீழ்வாயிலக்கம் எனப்படும் கீழ்முந்திரி வாய்ப்பாடு பற்றிய சில கேள்விகளை கிளாடியா ஜெராஸ்வ்கியின் (See Annexure) வாசகத்தால் எழுப்பினோம். கீழ்முந்திரி வாய்ப்பாடு பற்றி தேவநேயப் பாவாணர் 1966ல் ஏற்கெனவே குறிப்பிட்டு 37 ஆண்டுகாலம் கடந்த பின்னரும் (அதற்கு முன் யார் குறிப்பிட்டுள்ளார்கள் என்பது எனக்கு தெரியாது) எத்தனை பேராசிரியர்கள் அக்கறை செலுத்தி இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. [காண்க பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும் – ஞா.தேவநேயன் பக்கம் – 185 To 189]

ஏனிப்படி 1/2, 1/4, 1/8, 1/16, 1/32, 1/320 என எட்டும் எட்டின் மடங்குகளும் பயன்படுத்தப்பட்டன எனத்தேடுகையில் G.N.LEWIS என்பவரும், Kossel என்பவரும் 1916ல் கண்டுபிடித்த ‘மின் அணுக்கள் ஒரு மையத்தைக் கொண்ட பல சுற்றுகளின் உட்கருவைச்சுற்றி உட்கருவை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கின்றன கடைசிச்சுற்றில் உள்ள மின் அணுக்கள் தான் இரசாயன மாற்றங்களுக்குக் காரணமாகும் இவற்றுக்கு வலுவெண் மின் அணுக்கள் (Valency Electrons) என்று பெயர். இந்த வலுவெண் சுற்றில் எட்டு மின் அணுக்களுக்கு மேல் இரா. இந்த எட்டு மின் அணுக்களும் கற்பிதமான கண சதுரத்தின் மூலைகளில் இருக்கும் (Imaginary cube) எட்டு மூலைகளையும் அடைந்தால் தான் அந்த சுற்று முழுமைபெறும் ‘ என்ற தத்துவம் தமிழர்களுக்கு பழங்காலத்திலேயே தெரிந்திருந்து தம் கணக்கை Octogesimic எனப்படும் இவ்வகையில் அமைத்தார்களா ?

1904 ஆம் ஆண்டு ‘ஆபெக மற்றும் போட்லாண்டர் ‘ என்பவர்கள் தமது ‘ எட்டு பற்றிய விதிகள் ‘ என்ற கோட்பாட்டில்

ஒவ்வொரு மூலகமும் [NORMAL VALENCE] இயல்பான அதிர்வெண்களும் [CONTRA VALENCE] எதிர் அதிர்வெண்கள் எனும் கொண்டிருக்கமுடியும் இந்த இயல்பு மற்றும் எதிர் அதிர்வெண்களின் கூட்டுத்தொகை எப்போதுமே எட்டாகத்தான் இருக்கும் எனவும் மென்டலீவின் மூலகம் மற்றும் அவற்றின் அட்டவணையில் உள்ள தொடர்பு பற்றிய கோட்பாட்டினால், கீழ்கண்டவாறு விளக்குகிறார் :

Group 1, 2, 3, 4, 5, 6, 7

—-

Normal Valance +1, +2, +3, +4, -3, -2, -1

Contra Valance -7, -6, -5, -4, +5, +6, +7

—-

அவ்வாறே D.P.அகர்வால் என்ற அறிஞர் இந்தியாவின் உலோக நாகரீகம் மற்றும் உலோக தொழில் நுட்பம் (Indian Bronze Age Culture and their metal Technology P.218) என்ற கட்டுரையில் சிந்துவெளி மக்களுக்கு எடைகளைப் பயன்படுத்துவதில் 12 1/3X8 481632 முதல் 12800 வரை Binary System பயன்படுத்தியதாகவும் அதன் காரணமாகவே 1:16 என்ற விகிதத்தில் ரூபாய்க்கு 16 அணா என்ற வழக்கம் வந்ததாகவும் குறிப்பிடுவதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.

அதுபோலவே QUINQUAI GESIMAL எனப்படும் 5 மற்றும் 20க்களை [ ‘மா ‘அளவை] பயன்படுத்தியது QUINARY – VIGESIMAL எனப்படும் 12 ஐ அடிப்படையாக கொண்ட அளவை பயன்படுத்தப்பட்டதும் கவனத்திற்குரியவை ஆகும்.

மொகஞ்சோதாராவில் கிடைத்த நிறைகளையும் அரப்பாவில் கிடைத்தவற்றையும் செவ்வையாகச் சோதித்த அறிஞர் ஏ.எஸ்.எம்மி என்பவர் ‘சிறிய நிறைகள் இரட்டை எண்களைக் குறிப்பன. பெரியவை தசாம்ச பின்ன அளவை உடையன அவை 1,2,1/3X8,4,8,16,32,64,160,200,320,640,1600,3200,6400,8000,12800 ஆகிய எண்களைக் குறிப்பன ஒன்று என்ற குறிப்பிட்ட ஒருநிலைத்த நிறை – Unit என்பது 0.8565 கிராம் ஆகும். இவை முற்றும் சிந்துவெளிக்கே உரிய நிறைகள் ஆகும் ‘ எனக் குறிப்பிடுவது பற்றி டாக்டர் மா.இராசமாணிக்கம் பிள்ளை எழுதியருப்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.

ஒன்பது என்ற எண் தமிழில் இல்லை பிற்காலத்தில் வந்தது என குவாலலும்பூர் சு.நாராயணன் அவர்கள் ‘எண்ணமும் எழுத்தும் ‘ என்ற நூலிலும், புதுமைப்புலவர் சுந்தர சண்முகனார் தொண்ணூறும் தொள்ளாயிரம் என்ற நூலில் குறிப்பிடுவதும் ஆராய வேண்டியவை அல்லவா ?

எட்டினில் எட்டும் அதில் ஒட்டிரட்டியும்

கட்டியை விட்டுக் கலந்துண்ணமாட்டாமல்

பட்டினி விட்டும் பலவிதம் தேடியும்

எட்டும் இரண்டும் அறியாத மாக்களே

எட்டுத்திசையும் எறிகின்ற காற்றோடு

வட்டத்திரையனல் மாநிலம் ஆகாயம்

ஒட்டி உயிர்நிலை என்னும் இக்காயப்பை

கட்டி அவிழ்ப்பன் கண்ணுதல் காணுமே

என்ற இந்த திருமந்திரப்பாடல்கள் ஒரு சிறிய Sample மாதிரிதான் தமிழர் அகப்புற அறிவுக்கு. இவற்றின் உள்நோக்கம் என்ன ?

‘அணு என்ற வார்த்தையை தமிழகராதியில் தேடுகையில் மூன்று பொருள்கள் குறிப்பிடப்படுகின்றன.

(1) Atom, Minute Particle of the matter – நுண்மையானது

(Source. பிரபுலிங் – கோரக் – 53)

(2) Smallness, subtleness நுண்மை (Source: பிங்கலநிகண்டு)

(3) Soul : உயிர் (Source அன்னையொப்ப வணுக்கட்கு நல்லவர் திருவாலவா 34,19.

(4) Subtle Body (See சூட்சும சரீரம் சி.போ.சிற் 2,3,1)

என்பவை அவை

‘Atom ‘ என்ற ஆங்கில வார்த்தையை Readers Digest Great Illustrated Dictionary ல் தேடியபோது

(1) Anything considered an irreducible constituent of a specified system.

(2) The irreducible, indestructible material unit of anicient attomism.

(3) Physics and Chemistry : A Unit of matter the smallest that of an element consisting of dense central positively charged nucleus (Sec) surrounded by a system of electrons equal in number to the number of suclear positions the entire structure having an approximate diameter of 10^8 centemeter and characterssing reamaining undivided in chemical reactions except for limitted removal, transfer or exchange of electrons.

4. This unit regarded as a source of nuclear energy – எனவும் தெரியவருகிறது.

‘அணு ‘ என்பது கீழ்வாயிலக்கத்தில் ஒன்று என்ற முழு இலக்கத்தின் பின்னம் (Fraction)

ஒன்று / 320 – முந்திரி 1/320

முந்திரி / 320 – கீழ்முந்திரி 1/102400

கீழ்முந்திரி / 21 – இம்மி 1/2150400

இம்மி / 11 – மும்மி 1/23654400

மும்மி / 7 – அணு 1/165580800

இதற்கும் கீழே குணம், பந்தம், பாகம், விந்தம், நாகவிந்தம், சிந்தை, கதிர்முனை, குரல்வலைப்பிடி, வெள்ளம், நுண்மணல், தேர்த்துகள் என 1/23238245 3022720 0000 என தேவநேயப்பாவணரும் இம்மிக்கு பின் நுட்பமுந்திரி, அதிநுட்ப முந்திரி, திடப்ப முந்திரி, அற்பமுந்திரி, அதற்பமுந்திரி என ஒரு முழு எண்ணை 729054343260536832 0000 முப்பத்தொன்று இலக்கங்களால் (31 digits) வகுத்துள்ளனர் தமிழர் (புள்ளிக் கணக்கு என்ற நூலில், வெளியீடு: கீழ்த்திசைச் சுவடி நூலகம், சென்னை) (ஆஸ்தான கோலாகலம்)

தமிழர்கள் இவ்வாறு Octogismic என்னும் எட்டின் மடங்கிலும் கணக்கிட்டார்கள் ‘இருமா ‘ எனப்படும் Decimal முறையையும் பின்பற்றினர். நவீன அறிவியல் Decimal முறையை மட்டும் பின்பற்றுகிறது. நவீன அறிவியல் முறைப்படி பார்த்தால் அணு (Atom) என்பது எலக்ட்ரான் நியூட்ரான்.

Electron . 9.31096 X 10 ^31

Netrino

electron

MUON – 201 times of Electron (Mass)

PION – 2.5 X 10 ^ 8

KAON

ETA

PROTON 1836 Times of Electron

NEUTRON

LAMBDA 2183 Times of Electron

SIGMA

CASCADE

OMEGA 3276 Times of Electron

என்றெல்லாம் பகுத்து குறிப்பிடப்படுகின்றது – இப்படி உள்ள அளவைகளையும் மேலே சொன்ன கீழ்முந்திரி வாய்ப்பாட்டையும் ஒன்றுக்கொன்று ஒப்பிட்டு ஆய்வு செய்ய வேண்டாமா ?

அண்மையில் சரஸ்வதி மகால் வெளியிட்டுள்ள ‘ஆனந்த கந்தம் ‘ என்ற ரசவாதம் பற்றிய நூலில் அணுவைப் பிளக்க நவீன அறிவியல் வெளியிலிருந்து மின்சாரம் செலுத்துகிறது, மனிதனின் உடலில் உள்ள மின்சக்தியால் அணுவைப்பிளக்கும் போது ஆபத்து விளைவிக்கும் கதிர் வீச்சுகள் தன்வயப்படுத்தப்படுகின்றன எனக்கூறுகிறாரே ? வாசுதேவ சாஸ்திரியார்.

‘Alchnemy has in most cases proved a dangerous speculation resulting in the ruinning many rich men. The reason is to be found in the neglect of the subjective process for storing electricity which is uniformly prescribed in the books. It is just possible that if either discipline is undergone as a preliminary to the performance of the experiments resulting in the vedha state or if electricity is supplied by some other means for helping to start the reactions that we may succeed in getting at the vedha state of the neutrons capable of boring througth metals and cells of the human body in an orderly matter so as to produce the transmittation in the one case and energisation in the other.

It must be remembered that the various energetic products that start out as a result of atomic fission are capable of absorbtion by suitable means and it may be fairly surmised that in the method used for loha vedhas and deha vedhas the destructive rays are absrobed while the constructive ones are allowed to have free play. The success in both the vedhas open out possiblities for protection of human life even from the effects of explosion of atom bomb and the accumulation of precious metals to enrich the state treasury at will.

தொடரும்….

Annexure :

—-

கணக்கிடுவது எப்படி ?

—-

(கிளாடியா ஜஸ்லாவ்ஸ்க்கி)

ஒரு மக்கள்திறள் (இனம்) எண்ணிக்கை மற்றும் அளவுகள் பற்றி எந்த அளவு அதிகமான வார்த்தைகளைப் பயன் படுத்துகிறார்கள் என்பதை ஆராய்ந்து பார்த்தால் அவர்களது நாகரிகத்தின் வளர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களது பொருளாதாரம் நிலையான பயிர்த்தொழிலைச் சார்ந்து இருந்ததா ? அல்லது மந்தைகளைச் சார்ந்து (கால்நடை) இருந்ததா ? அல்லது அவர்கள் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு அடிக்கடி இடம் பெயரும் கூட்டமாக இருந்தார்களா ? என்பதும் தெரியவரும். அந்த சமுதாயம் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தாமே உற்பத்தி செய்து தங்களுக்குள்ளே பரிமாறிக்கொண்டார்களா ? அப்படியானால் வெகு சில வார்த்தைகள் மட்டும் அவர்களுக்கு போதுமானதாக இருந்ததா ? அல்லது மிகவும் நுட்பமாகவும் உயர் அளவிலும் பிணைக்கப்பட்ட குடிமக்களாக வாழ்ந்து தங்கள் பொருளாதாரத்தை வளர்க்கவும் பரந்த அளவில் வாணிபம் செய்யவும் ஏராளமான வார்த்தைகளை பயன்படுத்தினார்களா ? அந்த இனக்குழுவின் எண் வரிசையில் அயல் மொழிப்பெயர்கள் கலந்தனவா ? அப்படியானால் அதன் முக்கியத்துவமும் காரணமும் என்ன ? அவர்கள் அன்னிய மக்களோடு நட்பு முறையில் உறவு கொண்டு இருந்தனரா ? வாணிபம் செய்தனரா ? அல்லது அந்நிய மக்கள் மீது படை எடுத்து வெற்றிகண்டு ஆக்கிரமிப்பு செய்தார்களா ? எண்ணுவதற்கு அவர்கள் எத்தகைய சைகைகளையும் சாதனங்களையும் பயன்படுத்தினர் ? பண்டமாற்று அல்லது செலாவணி முறை எவ்வாறு இருந்தது ? எத்தகைய எடைகளையும் அளவைகளையும் பயன்படுத்தினர் ? அவர்கள் பயன்படுத்திய எண்களுக்கும் பின்பற்றிய மதத்துக்கும் ஏதாவது முக்கிய தொடர்புகள் இருந்தனவா ? (BLACK AFRICAN MATHEMATICS – MANCALAWARI SUNCAPANDI)

காண்க : ஆறாம்திணை (5.5.2000)

Source : The Language of Science – Page – 175

இந்த மேற்கோளும் தமிழர்கள் பயன்படுத்திய எண் வடிவம் அதன் பன்னாட்டு தொடர்புகள் ஏற்படுத்திய மாற்றங்கள், தமிழர்கள் கையாண்ட அளவைகள் பற்றி எல்லாம் ஆறாம்திணை என்ற இணைய தளத்தில் ஏற்கெனவே என்னால் விளக்கமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் தமிழர்கள் பயன்படுத்திய நுண்ணிய அளவைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தேன். அந்த முயற்சியின் தொடர்ச்சிதான் இந்த கட்டுரை. இது இன்றும் தொடரும்….

தமிழைச் செம்மொழி என அறிவித்திருக்கும் இந்த காலகட்டத்திலாவது தமிழ் தனது பாராம்பரிய எண் வடிவத்தை (NUMERAL) தாரைவார்த்துவிட்டு INDOARAB எண் வடிவத்தை பின்பற்றும் அவல நிலையையும் மற்ற இந்திய மொழிகள் தமது எண் வடிவத்தை இன்னமும் காப்பாற்றி வருவதையும் எண்ணிப்பார்த்தால் நான் ‘முன்னைப் பழம்பொருள் வெஃகும் சிறுமையில் ‘ ஆதங்கப்பட்டு கதறியிருப்பதன் ஆழ அகலங்கள் விளங்கும்.

எழுத்து, சொல், பொருள், இலக்கியம், இலக்கணம் இதிகாசப்புராணம் மட்டும்தான் மொழியா ? மொழி ஆராய்ச்சியா ? எண்கள், எண்ணிக்கைகள், அளவைகள், அறிவைப்பற்றிய அறிவு நூல்கள், மொழியின் மற்றொரு ‘கண் ‘ அல்லவா ? இந்திய அராபிய எண் வடிவம் எவ்வாறு உருமாறி வந்துள்ளது என்பதையும் ஆறாம்திணை இணையதளத்தின் திண்ணைப்பள்ளிக்கூடம் பகுதியில் எழுதியிருக்கிறேன். மீண்டும் நமது எண் வடிவம் புழக்கத்து வரவேண்டும் இது ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுக்க வேண்டும் எண் வடிவத்தை இழந்து விட்டு மொழி தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி என மதிக்கப்படுமா ?

சொல் என்பதே ஏதோ ஒரு செயலுக்கான முன்னோடிதான். எண் என்பதுவோ விரல் விட்டு எண்ணுவது மட்டும் அல்ல மனதால் அறிவால் சிந்திப்பதும் தான்.

—-

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்