தன்னாட்சி.. ?

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

ஜடாயு


சிங்கப்பூர் நிறுவனமொன்று
சிந்தாமல் குப்பை அள்ளிப் பெருக்கிய தெருக்களில்
அமெரிக்க கம்பெனிகளின்
ஆர்ப்பாட்டமான அடுக்கு மாடி அலுவலகம் பல கடந்து
கொரியத் தொழில் நுட்பம் சமைத்த
கோலமிகு காரில் சென்ற்ிறங்குறேன் –
சிணுங்கும் செல்போனில் (ஜப்பானிய தயாரிப்பு)
செல்லமாய் உரையாடியபடி
வெளிர்நீல ‘லெவி ‘ ஜீன்ஸ் ‘வேன் ஹுஸென் ‘ சட்டையில்
வெளிச்சமாய்த் தெரிந்த என் உருவம்
கண்ணாடியில் பார்த்தபடி
பிட்சா உணவகம் நோக்கி, பெப்ஸி பருகியபடி –
தன்னாட்சி கோலோச்சும்
தமிழகத்தின்
தலை நகரச் சாலை ஒன்றில்.

(c) ஜடாயு (jataayu@hotmail.com)

Series Navigation

ஜடாயு

ஜடாயு