தனக்குத் தானே பேசிக்கொள்ளும்

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

உத்ராடன்


அந்த நண்பரைப் பார்க்கப் போனால்
ஆடிட்
அடுத்த நண்பர்க்கு
பேப்பர் வேல்யூஷன்
இன்னொருவர்
போர்ட் மீட்டிங்கில்
வேறொருவர்
டிஸ்கஷனில்
பிறிதொருவர்
கேம்ப்
மற்றொருவர்
கேஷில்
ஒருத்தர்
க்ளாஸெடுக்கப் புறப்பட்டுக்கொண்டு
வேண்டப்பட்டவரும்
கடன்காரர்களுக்குப் புகல் சொல்லிக்கொண்டு
இவ்வாறாக இயங்கிக்கொண்டே
இருக்கிறது உலகம்
தனக்குத் தானே பேசிக்கொள்ளும்
பைத்தியங்கள் குடிகாரர்கள் பாவப்பட்டவர்கள்
மொழிகடந்து போய் விடுகிறார்கள்
மகான்கள் சித்தபுருஷர்கள் சாதுக்கள்

********************************************

Series Navigation

உத்ராடன்

உத்ராடன்