ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

மதுவந்தி


பார்வையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பொய்யாக்கி, அதிரடியாய் எதிர்பாராத வகையிலான கருத்துக்களை பேசுவதில், இலக்கியவாதியும் பேச்சாளருமான ஜெயகாந்தனுக்கு நிகர் அவரேதான். பெரியார் திடலில் தி.க. பொதுச்செயலாளர் கி.வீரமணியின் 72 ஆவது பிறந்தநாள் விழா. அதில் பேச அழைக்கப்பட்டிருந்த கம்யுனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, தமிழருவி மணியன், சேலம் அருள்மொழி- அனைவரும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வண்ணம் சங்கராச்சாரியார் கைதை ஆதரித்து பேசினார்கள்.

இறுதியாக பேச வந்த ஜெயகாந்தன் , ‘ நானும் வீரமணியும் முரண்பட்ட தளங்களில் கருத்துக்களை கொண்டிருந்த போதிலும் நட்பு பாதிக்கப்படவில்லை. ஒரு நம்பிக்கை – ஒரு ஆழமான நம்பிக்கை – வீழ்த்தப்படும்போது – நான் உங்களைப்போல் சந்தோஷப்பட முடியாது ‘ என்றவர் சற்றே நிறுத்தி,

‘இப்போது என்னென்னவோ செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதென்று பொறுத்திருந்து பாருங்கள். இதில் அவசரப்படுவதோ, மகிழ்ச்சியடைவதோ இலக்கிய தர்மமாகாது ‘ என்றார்

துக்ளக் 22-12-2004

மதுவந்தி

madhuvanthi_83@yahoo.co.uk

Series Navigation

மதுவந்தி

மதுவந்தி