ஜிகாத் மார்க்ஸீயத்திலிருந்து வந்ததா?

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

ஆர் ஸ்ரீநிவாசன்


திண்ணையில் அன்பர் ஒருவர் எழுதியிருந்தார், ஜிகாத் (நவீன கால) – இதற்கான உள்ளாற்றல் மார்க்ஸீயம், மாவோயிசத்திடம் இருந்து
பெறப் படுகிறது என்று. மிக்க நன்று.
தங்களுக்குத் தேவைப் படும் போது மார்க்ஸீயத்தையும், கம்யூனிசத்தையும் எடுத்துக் கொள்வார்கள்.
Once the essence of man and of nature, man as a natural being and nature as a human reality, has become evident in practical life, in sense experience, the quest for an alien being, a being above man and nature (a quest which is the avowal of the unreality of man and nature) becomes impossible in practice.
இது மார்க்ஸ் சொன்னதுதான். ஏற்றுக் கொள்வார்களா? நிற்க.
‘புதிய காற்று’ என்ற பத்திரிக்கையில் ஒருவரின் பேட்டியில் படித்ததாக ஞாபகம். கேள்வியின் சுருக்கம் இது. உங்களுக்கு (முஸ்லீம்களுக்கு) கம்யூனிஸ்டுக்கள் எப்போதும் ஆதரவு அளிக்கிறார்களே, அவர்களின் பல கொள்கைகள், உதாரணத்திற்கு கடவுள் மறுப்புக் கொள்கை, உங்களோடு ஒற்றுப்போகவில்லையே? இதையெல்லாம் எவ்வாறு எடுத்துக் கொள்கிறீர்கள்?

அதற்குண்டான பதில், உங்களுக்கு நண்பர் ஒருவர் இருக்கிறார், அவரை வீட்டுக்கு அழைக்கீறீர்கள், அவருக்கு சாப்பாடு போடலாம், ஆனால் அதே சமயம் அவர் உங்களின் தாயையோ, சகோதரியையோ படுக்கைக்கு அழைத்தால் சும்மா விடுவீர்களா? என்ற தொணியில் பதில் போகிறது.

மார்க்ஸியத்தின் படி குழந்தை பெறுவதைத் தடுப்பது (குடும்பக் கட்டுப்பாடு) குற்றமாகாது.
கடவுளைப் பற்றி மார்க்ஸியத்திற்கு கவலை இல்லை. அது தேவையும் இல்லை. கம்யூனிஸம் கொடி கட்டிப் பறந்த ருஷ்யாவில்
அனைவருக்கும் பொதுச் சட்டம் தானே அமலில் இருந்தது. மார்க்ஸியம் அதைத்தானே வேண்டுகிறது.
பொதுச் சட்டம் தேவையா? இல்லையா? நன்மையா? தீமையா? என்றெல்லாம் விவாதிக்க வரவில்லை.
ஜிகாத் சரியா, தவறா என்றும் விவாதிக்க வரவில்லை.
ஜிகாத்தின் உள்ளாற்றல் மார்க்ஸீயம், மாவோயிசத்திடம் இருந்து பெறப் படுகிறது என்று சொல்லி ஏன் ஒரு அறிவு ஜீவித் தனமான
முத்திரையை அதற்கு வழங்க வேண்டும்.
ஏன் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்த வேண்டும்?
அதை வைத்து ஒன்றை சீர் தூக்கிப் பார்த்து விட்டால் எல்லாம் சரியா?
பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் இருந்து ஆரம்பித்து நேற்றைய குஜராத் சம்பவம் வரை அனைத்தையும் ஒருவர் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்தி விட்டால் ஏற்று கொள்வீர்களா?
அல்லது கோவை குண்டு வெடிப்பிலிருந்து ஆரம்பித்து நேற்றைய பம்பாய் சம்பவங்கள் வரை அனைத்தையும் ஒருவர் மார்க்ஸியத்தை வைத்து நியாயப் படுத்தி விட்டால் சரியாகி விடுமா?
நியாயப் படுத்த முடியுமா என்று கேட்காதீர்கள்?
ஏகப்பட்ட அறிவு ஜீவித்தனமான வாதங்களை முன் வைத்து எதையும் எதைக் கொண்டும் நியாயப் படுத்தலாம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


srivasan@synopsys.COM

Series Navigation

ஆர் ஸ்ரீநிவாசன்

ஆர் ஸ்ரீநிவாசன்