This entry is in the series 20040527_Issue


தேவையான பொருட்கள்

1/2 கிலோ கொத்து ஆட்டுக்கறி

1 கோப்பை சமையல் எண்ணெய்

2 முட்டைகள்

2 இஞ்ச் இஞ்சி

3 வெங்காயங்கள்

1 கோப்பை தயிர்

2 தேக்கரண்டி வினிகர்

10 முழு கறுப்பு மிளகுகள்

ஒரு சிட்டிகை குங்குமப்பூ தண்ணீரில் கரைத்தது

உப்பு ருசிக்கேற்ப

செய்முறை

வெங்காயத்தை வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும். இஞ்சி மிளகுகள் இரண்டையும் தனித்தனியே அரைத்து வைத்துக்கொள்ளவும். இதனை கொத்துக்கறியுடன் சேர்த்து எண்ணெய் வினிகர் மற்றும் உப்பு சேர்த்து பிசையவும் இதனை தனியே மெதுவான தீயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் வேகவைக்கவும். இதன் பின்னர் வெங்காயம், தயிர் முட்டைகள் குங்குமப்பூ ஆகியவற்றை இத்துடன் சேர்த்து இந்த கலவையை நைய கொத்தி எடுக்கவும். இதனை சிறிதளவு உருண்டைகளாக கபாப் வடிவத்தில் ஆக்கி ஆழ எண்ணெயில் வறுத்து பறிமாறவும்.

***

Series Navigation