செண்டுகட்டு

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

வைத்தீஸ்வரன் .சி


முகுர்த்த நேரத்திற்கு முந்திக்கெண்டு மண்டபுத்துள் வந்துவிட்டென். வருகிற பேகிறவர்களுக்கு நல்லதிக்கான பாலில் கலந்த அண்ணா கோப்பி.கேவில்மண்டபத்துள் நுளைந்ததுமே அதன் வாடைதான் வரவேற்கிறது. கூடவே மைசூர்ப்பாகு , காரப்புந்தி, முறுக்கு லட்டு என்று ஏகப்பட்ட தட்டுக்கள்-கனகாம்பரமும் மல்லிகையும் கூந்தலில் கலந்துதெங்கும் பட்டுத்தாவணிச்சிட்டுக்கள் -ஒவ்வொருவருக்கும் கெடுத்துக் கெண்டு வருகிறார்கள்.

வாசலில் ஒரு செற்றுத்தாவணிகள் பன்னீர் தெழித்து சந்தனம் வளங்கிக் கெண்டு இருக்கிறார்கள்.

தவில் நாதஸ்வர வித்வான்கள் ஆரஅமர உட்கார்து நிகள்ச்சி தொடங்கிவிட்டதன் அறிகுறியாய் ‘வாதாபிகணபதி…. ‘ வாசித்துக் கொண்டு இருக்கிரார்கள். எல்லாமெ செல்லிவைத்தாற்போல் ஒரு இயக்கமுறையில் நடைபெறுகிறது. ஒரு சிறிய ஹொமகுண்டம் அதர்குப்பக்கத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் மணவறை முத்தும் மணியும் கண்ணாடியும ;வைத்துருவாக்கப்பட்டது. தாத்தாவின் கறுப்பு வெள்ளை கல்யாணப் படத்திலும் அதுமாதிரி ஒண்றுதான் பளிச்சென்டு இருக்கிறது.

வாழை இலையில் அரிசிபரப்பி அதன்மேல் குத்திநிக்கும் கும்பங்கள். இன்னும் நிநைவிருக்கிறது கம்பராமாயனத்து அயோத்பதியா காண்டத்தில் கும்பங்களைப்பற்றிய வருணனை. தொிந்தவர்களுக்குப் புரியும் உவமான உவமேயம்.

ஹொமகுண்டத்திற்கு வடக்கில் அம்மி அதன்மேல் ஒரு குளவி .அரிசிமாவும் மஞ்சள் பொடியும் கொண்டு பேடப்பட்ட கோலம். எல்லா அமைப்புக்களையும் பார்த்தால் ஒரு கல்யாணத்திற்கான ஏற்பாடு போல் இருக்கிறது. அப்படியானால் இருவர் பேரும் பேட்டிருப்பார்களே! எதற்கும் அழைப்பிதழை மீண்டும் ஒருதடவை கைப்பையில் இருந்து எடுத்துப் பார்கிரேன்.பெண்ணின் பெயரோ அல்லது பெண்வீட்டார் விபரமோ எதுவுமில்லை ‘சிரஞ்சீவி ராகவசர்மா ‘ என்று மட்டும் உள்ளதே…! ‘ ‘ அதுதான் கொட்ட எழுத்தில் பேட்டிருக்கிரார்களே ‘உபநயன அளைப்பிதள் ‘ என்று., பிறகேன் ஐயா பெண்பித்தன் மாதிரி அதுகளத் தேடியலைகிறீர். நானும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டுதான்வாறன் உம்முடய நோட்டம் எல்லாம் பெண்கள் பக்கமாதான் ‘ ‘. யாரோ என்னை எச்சரிப்பது போலிருக்கே! என்னதான் சென்னாலும் இந்தமாதிரியான வைபவங்கள்ளதானே பெண்களக் காணமுடியிது.

சரி சரி வந்த இடத்தில ஏன்வம்பு. அன்பாய் அழைத்திருக்கிறார்கள் இருந்து நடக்கிறதப் பாத்துட்டு கடசியக வடபாயசத்தேட சாப்பாடு அதிலும் மாங்கெட்டமாமா கைபட்டது பந்தியில இருக்கிறவனுக்கு எழுந்திருக்க மனம்வராது. நல்ல ஒரு பிடி பிடிச்சுட்டுப் போவெண்டியதுதான். திடீரென ‘பிறேக் ‘பேட்டமாதிரி வித்துவான்கள் ராகத்தை குத்தி நிறுத்த- மணிச்சத்தம். அதற்குத்தேதாய் வெண்கலக்குரலில் நாராயணசாஸ்த்திரிகளின் மந்திரம் ‘சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி…. ‘ என்ன இது அவர்கள் ‘வாதாபி கணபதி…. ‘ என்று ஊதுகிறார்கள். இவரோ ‘சுக்லாம்….சர்வவிக்னேப சந்தயே ‘

கடைக்கணக் கெழுதப் போனால் ‘ ‘முதல்ல பிள்யார்சுழி போடப்பா…. ‘ ‘என்று முரண்டுபிடிக்கிறார் முதலாளி சைவப்பிள்ள. எல்லாம் ஒரே பிரமையாக இருக்கு

உபன்னியாசம் கேட்கப்போனால் அங்கயும் அதுதான் .ஒருத்தர் சிவன் முழுமுதற் கடவுள் என்கிறார் இன்னொருவர் விஷ்ணு என்கிறார். ஆனால் இருவரும் ஆரம்பிக்கும்பேது ‘ ‘கைதல நிறைகனி அப்பம் உடவல் பொரி…. ‘ ‘ என்று பொரிந்து தள்ளுகிறார்கள். ‘ ‘ உனக்கேன் இந்த வம்புக்கேள்வியெல்லாம் தோன்றுது ?பேசாமல் வாயமுடிக்கொள் யாருக்கும் தெரிந்தால் சீர்திருத்தம்.திராவிடம். என்றெல்லாம் முத்திரைகுத்திவிடுவார்கள் ‘ ‘. .கடவுள்சிலையெல்லாம் இல்லையென்றவர்கள் இப்பொகடவுளாகிவிட்டார்கள் . அவர்கள் நினைவுநாளில் வழிபாடும்நடக்கிறது.அதுபேகட்டும் என்றால் குழந்தைகளுக்கு ‘கார்ல் மாக்ஸ்.லெனின்…., என்றெல்லாம் சாமிப்பெயர்மாதிரி இல்ல! இப்டியாவது அவர்கள மறக்காமல் இருக்கமுயற்சியோ என்னவே. ஏன் இந்த ‘மா வோ ‘வை மட்டும் குளந்தைகழுக்கு யாரும் சூட்டுவதில்லை! அவர் சீனன் பாம்பு தின்னுகிறவராக இருக்கலாம் என்பதாலோ அல்லது அயல் நாடுகளில் படைஎடுத்தவர் என்கிற கோபமோ. எப்படியே அவர், பெயர்வைக்க ஒத்துவரவில்லை.

. விட்டஇடத்தில் இருந்து ராகத்தை ஒட்டவைத்து தெடர்ந்து கெண்டிருந்தார்கள் தவில் நாதஸ்வரகாரர்கள்.

ஹொமாக்கினி கொழுந்துவிட்டு எரிந்து கெண்டிருக்கிறது. தந்தைக்கும் தாக்கும் இடையில் மைந்தன் ராகவன் .ஒன்பது வயதாவது இருக்க வேண்டும். ஒவ்வொரு சமித்துக்களாய் நெய்யிலேதொட்டு நெருப்பிலே ஆகுதி பண்ணிக்கொண்டிருக்கிறான். சாம்பமூர்த்திமாமாவின்மற்றய இரண்டு பையன்களும் கனடாவில்,கொழும்பில் என்றால் கண்டிப்பாய் வந்திருப்பார்களாம். இங்குவரத் தாண்டிக்குளம்,பூனகரிக் கடலேரிப்பயணம்-எல்லாம் நிநைத்துப்பார்க்க சரிப்பட்டு வராதென்று அங்கிருந்தபடியெ ஆசிர்வாதமும் வளங்கியிருக்கிறார்களாம். அந்த ஆசியினால்தான் செக்கட்டான் பந்தலேடு,அளவெட்டி முதல் அரியாலைவரையிலுமான அத்தனை தவில் நாதஸ்வரங்களையும் கூட்டிவைத்துக் கெண்டு முழக்கி எடுக்கிறாகள். வடபகுதிப் பொருளாதாரத் தடையையும் மீறி எங்கிருந்தே மூட்டை மூட்டையாக இறக்கியிருக்கிறார்கள். ‘அட நீ திருந்தவேமாட்டியா ? வருமானவரி அதிகாரிமாதிரி அடுத்தவன் வீட்டில உழவுபாக்கிறா…. ‘

இப்போது சாஸ்த்திரிகள் சுருதியைக்கூட்டி மந்திரத்தை உயர்த்துகிறார். அதுதான் எப்பவும் போல ‘ ‘ யக்ேஞுாபவீதம் பரமம் பவித்ரம்….பலமஸ்து தேஜக ‘ ‘

யாரோ கெட்டி மேளம்! கெட்டி மேளம்!! என்று கத்துகிறார்கள். எல்லாத்தவிலுதம் நாதஸ்வரமும் ஒன்றாய் திரண்டு அந்த மண்டபத்தை ஒலி அலைகளால் ஆக்கிரமித்து நிக்கிறது. மஞ்சள் அரிசி நாலுதிசையிலும் இருந்து தெறிக்கிறது நானும் என்பங்கிற்கு கொடுத்ததை விசுக்குகிறேன். பதினாறு திக்கில் இருந்தும் ‘பளிச் பளிச் ‘ என்று மின்னலடிக்கிறது. இத்தியாதி காரியங்களிற் கெல்லாம் முக்கியத்துவமான அந்த முப்புரிநுல் சிறுவனின் தேளில் சென்று படர்கிறது.

சாஸ்த்திரிகள் வேக வேகமாய் ஹேமத்தில் ஆகுதிகளை இறைத்தகையேடு பூர்ணாகுதியை பேட்டுவிட்டு சிறுவன் கையில் அணிந்திருக்கும் பெளத்ரத்தை கழற்றி தட்சினையும் பெற்றுக்கெள்கிறார். அவசர அவசரமாக ஆசிர்வாத்தை பண்ணிவிட்டு கிளம்பிவிட்டார் போகும் போது அங்கிருந்த ஒருவரிடம் ‘ ‘இன்னொரு காரியத்துக்கு பேறன் நீ கெஞ்சம் பாத்துக்க. ஒண்ணுக்கும் யேசியாத மூர்த்திகிட்ட எல்லாம் செல்லியிருக்கன் ‘ ‘

‘ ‘ சரி மாமா நா செண்டுகட்றவரக்கும் எல்லாத்தேம் பாத்துக்றன் போதுமா ‘ ‘

‘ ‘பின்னிப்புட்ட! அவ்ளம் போதும்டா, நா மூடிஞ்ச சாயங்காலம் வார்றன் ‘ ‘

இதென்றும் அவருக்கு புதுதில்லை. எல்லேருக்கும் தெரியும் அவர் கடசிவரைக்கும் எந்தவீட்டுக்கிரிகையிலும் இருப்பதில்லை யென்று. அதேபோல் அவருக்கென்று பல சீடர்கள், அரிடம் படிக்காமல் அவர்விட்ட மிகுதிக்காரியங்களைச் செய்து அரைவாத்தியார் என்று பெயர்வாங்கியவர்கள். இதையெல்லாம் நன்றாக தெரிந்துவைத்திருக்கும் சாஸ்திரிகள் எங்கெல்லாம் அவர்களை உபயோகிக்க வேண்டுமோ அங்கெல்லாம் அவர்களை தடசணையில்லாப் புரோகிதரகள் ஆக்கிவிடுவார்.

‘ ‘ இஞ்ச ஒருத்தரும் அவசரப்பட்டு போப்படாது! வடிவாயிருந்து சாப்பிட்டு கையேட செண்டுகட்டவும் வரவேணும்கண்டியளோ ‘ ‘ என்று முன்னெச்சரிக்கையாக ஒரு கண்டிசன் போட்டார் சாம்பமூர்த்திமாமா. துார இடங்களில் இருந்து இரண்டு பேரூந்து பிடித்துவந்தபலர் பந்திமுடிந்ததும் கிளம்பிவிட்டனர். நானோ மற்றும் சிலர்போல் அல்லாது அவரின் பேச்சிற்கு கட்டுப்பட வேண்டியதாயிற்று.

மாலை வெய்யில் மேற்கில் சாய்ந்தது. உபநயனமான ராகவன் மஞ்சளிலான காஞ்சிபுரம் பட்டுவேட்டி முப்புரினுாலுடன் தங்கத்திலான இன்னெரு பூணுால், பவுண்குப்பிகள் வைத்திளைத்த உருத்திராக்க மாலை ,கைச்சங்கிலியுடன் விரல்களில் நவரத்தின மோதிரம் என்று நானாவித அலங்கார கோலத்தில் பலாசதண்டம் தரித்து பாலசங்கராச்சாரியார் போல் தேன்றினான் .

முகுர்த்த நேரத்தில் வாசித்த வித்துவான்கள் எல்லாம் போக மிகுதியாக இரண்டு தவிலும் இரண்டு நாதஸ்வரமுமான ஒரு குழுவினர், கீர்த்தனை ஒன்றில் ஆரம்பித்து திரைஇசை பாடலாகி தேசப்பாடல்களில் மிதந்து-மெல்ல மெல்ல ஊர்வலம் அரச மரத்தடிக்கு வந்துசேர்ந்தது. சாம்பமூர்திமாமா மரத்திற்கு பூசைசெய்து ‘ ‘ இது எங்கட பரம்பர மரம்மாதிரி இஞ்சதான் எங்கட பீட்டன், முப்பாட்டன் எல்லாம் செண்டுகட்டிக்கொண்டுவாரவ. எனக்கும் இஞ்சதான் கட்டினது, அவங்கள் இரண்டு பேருக்கும் இதிலதான் கட்டினது. இவன்ரயும் இஞ்சகட்டவேணும் எண்டுதான் இவ்வளவு கஷ்டத்திற்கயும் இதை இஞ்ச செய்யநினச்சனான் அதுக்கு இப்பதான் விமேசனம் வந்திருக்கு ‘ ‘ என்று செல்லிக் கொண்டு மகன்கையில் இருந்த பலாசத்தண்டையும் அவன் இடுப்பில் அணிந்திருக்கும் தர்ப்பைக்கயிறையும் எடுத்து மரத்தின் மேல் தயாராக நிற்பவனிடம் கெடுத்தார்.

அரசமரக்கிளையுடன் தண்டத்தவைத்து தர்ப்பைக்கயிற்றால் சுற்றி முடிச்சுப் பேடுகையில் ‘ர்ச்வீக் டும்! ர்ச்வீக் டும்! ‘ ‘ ‘ஐயோ துலைவார் செல்லடிக்றாங்கள் ‘ ‘ என்று கத்திக் கொண்டு சனங்கள் சிதறி ஓடினர் .மின்னல் ஒளியில் கண்கெட்டது போல்இருந்தது . ‘கவர் ‘ எடுக்கவும் இடமில்லாப் பிரதேசம், தலை தப்பினது தம்பிரான் புண்ணியம் என்றெண்ணி லேசாக நிமிர்ந்து பார்த்தேன் இரத்தப் பெருக்கில் குற்றுயிரும் குடல் சரிந்த உடல்களும் . விசயம் அறிந்து சைக்கிளிலும் வாகனத்திலும் வந்தவர்கள் எல்லா உடல்களையும் அள்ளி ‘பிக்கப்பில் ‘ போட்டுக்கெண்டு பெரிய மருத்துவமனையில் சேர்த்தோம் . பிளைத்தவர் மாண்டவர் என்று எதுமறிமுடியாது எல்லா வீட்டிலும் ஒப்பாரி.

செக்கட்டான் பந்தல் குலைக்கப்கட்டு தட்டிப்பந்தலாக்கப் பட்டது. நாராயணசஸ்த்திரிகள் வளமைபேல் கம்பீரமாகத்தன் ‘ஹொண்டாவில் வந்திறங்கினார். நீராட்டி அலங்கரித்து பச்சைபன்னாங்கில் கிடத்தியிருக்கும் உடலை உற்றுப்பார்த்தார் குண்டுத் தாக்குதலுக்கு தப்பித்துக்கெண்ட அந்த ஒற்றைப் பூணலை எடுத்து ஒரமாகப்பேட்டார். ‘ ‘வாத்திய…ா…ர் ‘ ‘ என்று நா தழுதழுக்க சாஸ்த்திரிகளை கட்டிப்பிடித்தார் சாம்பமூர்த்திமாமா. சலனமற்ற சஸ்த்திரிகள் மாமாவின் முதுகைவருடிவிட்டு பக்கத்தில் ஒருவரை அழைத்து காதேடு ஏதே சென்னார் பின்கம்பீரமாகச்சென்று தனது வாகனத்தில் ஏறிப்பறந்துவிட்டார். அவர் பேனபின்பு சங்கு சேமக்கலம் ஒலிக்க மீண்டும் ஒரு ஊர்வலம் அமைதியாகக் கிளம்பியது.

—-

vsivasubramaniyaiyer@yahoo.com.au

Series Navigation