சூரியனும் சந்திரனும்

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

ஹெச்.ஜி.ரசூல்


சந்திரன் பெண்ணாக குரானில் குறிக்கப்படுவதாக யூசுப் அலியின் ஆங்கில மொழி பெயர்ப்பை சில அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் 1992 ல் வெளியிடப்பட்ட (Quran The Final Testament)மொழிபெயர்ப்பில் அது இவ்வாறாக உள்ளது. இங்கு சந்திரனை Her எனக் குறிப்பிடவில்லை.
மேலும் எந்த தமிழ் மொழிபெயர்ப்பு வசனத்திலும் அவள் என்று சொல்லப்படவில்லை.
மாதிரிக்கு
சந்திரன் அதற்கு நாம் பல்வேறு நிலைகளை ஏற்படுத்தி உள்ளோம். எதுவரையெனில் அது உலர்ந்து வளைந்துபோன பேரீச்சங்கம்பு போல் மீண்டும் ஆகிவிடுகிறது.(36:39)

எனவேதான் அரபு மொழிமரபில் சந்திரன் எவ்வாறு குறிக்கப்படுகிறது என்பதற்கான தரவுகளை இவ்வாறாக விவாதிக்கலாம்.
O அரபுலக வரலாறு குறித்த அறிஞர்களின் ஆய்வில் சமூகவியல் மற்றும் மானுடவியல்ரீதியாக சூரியன் பெண்பாலாகவும் , சந்திரன் ஆண்பாலாகவுமே குறிப்பிடப்பட்டிருப்பதை நிறுவுகின்றனர்.

1) நவீன கால இஸ்லாமிய அறிஞ்ர்களில் ஒருவரான அஸ்கர் அலி என் ஜினியர் தனது origin and development of islam என்ற நூலின் தமிழ் மொழி பெயர்ப்பில் பக்கம் 33ல் கீழ்கண்டவாறு விளக்குகிறார்.
சந்திரன் ஹ்த்ரமாத்தில் ஸீன் என்றும், மீனியர்களால் வாத் என்றும்,ஸபீயன்களால் அல்மக்கா என்றும் கடபேயனியன்களால் அம்(தந்தையின் சகோதரர்) என்றும் அழைக்கப்பட்டது. உண்மையில் அம் தெய்வங்களில் முதலிடம் பெற்றதாகவும் ஆணாகவும் கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சூரியன் – -ஷ்ம்ஸ் என்ர பெண் தேவதையாகவும், சந்திரனின் மனைவியாகவும் கருதப்பட்டது. அரபு மொழியில் சூரியன் பெண்பாலாக வழங்கப்படுகிறது.அரேபியாவின் பருவகாலங்களின் அமைப்பு இதற்கு முழுமையாக இல்லாவிடினும் ஓரளவு விளக்கம் அளிக்க உதவுகிறது..என்றும் குறிப்பிடுகிறார்.

2) origin of mystical symbol –Meta cognition on line Library homepage கட்டுரையில் வரலாற்றறிஞர் மெசூதியின்(mesudi) விளக்கம் கீழ்கண்டவாறு மொழிமாற்றச் சுருக்கத்தில் தரப்படுகிறது.
புராதன அரேபியாவின் ஹனீப்கள், சாபியீன்கள் உட்பட பல பழங்குடிகள் சந்திர வணக்கத்தையமேற்கொண்டுவந்துள்ளனர்.நபிமுகமதுவின் காலத்தில் இஸ்லாம் வடிவமைக்கப் படுவதற்கு முன்பு (ஏழாம்நூற்றாண்டு)அல் இலாஹ் என்னும்சந்திர வகைப்பட்ட ஆண் கடவுளையும் உயர்ந்த கடவுளாக வணங்கி வந்தனர்
இதன் குறியீட்டு அடையாளமே இன்று முஸ்லிம்களின் அடையாளமாக சந்திரன் (இளம்பிறை – crescent) இருந்து வருகிறது.அதே சமயத்தில் அல் லாத் உயர்ந்த வகை சூரியப் பெண்கடவுளாகவும் பாவிக்கப்பட்டிருந்தது. அரபு இலக்கணப்படி சூரியன் பெண்ணாகவும், சந்திரன் ஆணாகவும் குறிப்பிடப்படுகிறது.

என்கிறார்.

மேலும் இது குறித்த அகழ்வாராய்ச்சிகளும், கட்டிட அமைப்பு குறியீடுகளும் ,மொழியியல் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் .அல்லா பாலினம் கடந்த சொல் என்பது குறித்தும் உயர்மரபு சூரியன் என்பதால் மொழியியல் அடிப்படையில் அல்லா என்ற சொல் ஆண்பாலின அடையாளமாக குறிப்பிடப்படுகிறது என்பது குறித்ததுமான வரையறைகள் இன்னும் புது தெளிவுகளுக்காய் மறுவிவாதத்திற்கு உட்படுகின்றன

Series Navigation