சூடானின் டார்ஃபர் குழந்தைகள் பசியால் இறக்கிறார்கள்

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue


ஐக்கியநாடுகள் சபை ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கால்மா நகரத்துக்கு வெளியே இருக்கும் அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உணவின்றி இறப்பதைக் கண்டு உதவிக்கு அறைகூவல் எழுப்பியிருக்கிறார்கள்.

சென்றவாரம், ஒரு மூத்த சமூகசேவகர் டார்பார் பகுதியில் சுமார் 300,000 மக்கள் பட்டினியால் இறக்கலாம் என்றும் உதவி உடனே வந்தால் கூட பட்டினிச் சாவுகளை தவிர்க்க இயலாது என்றும் கூறியிருக்கிறார்.

சென்ற வருடம் டார்ஃபார் பகுதியில் நடந்த போராட்டங்களால் ஏறத்தாழ 10000 பேர்கள் இறந்திருக்கிறார்கள். ஏறத்தாழ ஒரு மில்லியன் மக்கள் தங்குமிடங்களை விட்டு ஓடிவிட்டார்கள்.

ஏறத்தாழ பிரான்ஸ் அளவு இடம் கொண்ட டார்ஃபார் பகுதியில் மழை ஏற்கெனவே விழ ஆரம்பித்திருக்கிறது. அதனால் அதனுள் நுழைவதும் பயணம் செய்வதும் ஏறத்தாழ முடியாத விஷயம் என்று பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்

உலக உதவி முன்னேற்றத்துக்கான இங்கிலாந்து மந்திரி ஹில்லாரி பென் அவர்கள் இந்த டார்ஃபார் பிரச்னையே உலகத்தின் மிகவும் பெரிய மனிதநேயப் பிரச்னை என்றும் ஏராளமான உதவி அங்கு தேவைப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார்.

உலக நாடுகளின் உதவி இந்த இடத்துக்கு வரவே இல்லை என்றும் வந்தாலும் அது தாமதமாக மிகவும் குறைவாகவே வருகிறது என்றும் அவர் குறை கூறினார்

ஐக்கிய நாடுகள் சபை இங்கு மிகவும் தாமதமாகவும் குறைவாகவும் வந்து வேலை செய்கிறது இது மாறவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

ஏராளமான குழந்தைகளும் பெற்றோர்களும் உணவே இல்லாமல் பத்து நாட்கள் நடந்து பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து 10 நாட்கள் உணவே இல்லாமல் நடந்து வந்து இந்த முகாம்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் அதனால் ஏராளமான குழந்தைகள் பசியால் இறந்துவிட்டன. உயிருடன் இருக்கும் குழந்தைகளும் உணவு உண்ண தெம்பின்றி இறந்து கொண்டிருக்கின்றன.

அரசாங்க ராணுவ கும்பல்கள் எங்கள் வீடுகளை எரித்துவிட்டன. அவர்கள் எங்கள் குழந்தைகளையும் எரித்துகொண்டிருந்தார்கள் ‘ என்று பெற்றோர் கதறுகின்றனர்.

டார்ஃபார் பகுதியில் கிராமம் கிராமமாக ராணுவம் கொளுத்திக்கொண்டிருக்கிறது. ஏராளமான அகதிகள் வருவதால் இந்த முகாம்களிலும் உணவு வெகு வேகமாகத் தீர்ந்து வருகிறது.

‘உடனே உணவு வந்தால் சுமார் 3 லட்சம் மக்கள் இறப்பார்கள். உணவு வரவில்லை என்றால் ஒரு மில்லியன் (10 லட்சம்) மக்கள் இறப்பார்கள் ‘ என்று உலக முன்னேற்றத்துக்கான அமெரிக்க உதவி நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்ரூ நடோஸிஸ் சென்ற வாரம் கூறினார்.

இந்த புள்ளிவிவரங்கள் தற்போது முகாம்களில் இருக்கும் இறப்பு விகிதத்தையும் உணவின்மையையும் கணக்கில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டவை.

அரசாங்கமும் டார்ஃபார் எதிர்ப்புக்குழுக்களும் சென்றவாரம் போர் நிறுத்த ஒப்பந்தம் எழுதின. இருப்பினும் எதிர்ப்புக்குழுக்கள் சாட் நாட்டின் எல்லையோரத்தில் அரசாங்க ராணுவம் தங்களை தாக்கியதாக புகார் கூறியிருக்கின்றன.

http://news.bbc.co.uk/1/hi/world/africa/3790559.stm

உதவி அளிக்க

http://www.unicefusa.org/site/pp.asp ?c=duLRI8O0H&b=50755

***

டார்ஃபார் இன மக்களுக்கு உதவி செய்ய ஐக்கிய நாடுகள் உதவி அமைப்புக்கு பணம் அனுப்ப:

http://www.unicefusa.org/site/pp.asp ?c=duLRI8O0H&b=50755

***

சூடான் – டார்ஃபார் பற்றிய இதர திண்ணை கட்டுரைகள்

மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்
நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் (தமிழில்: ஆசாரகீனன்)

சூடானில் கறுப்பினத்தவருக்கு எதிரான தொடரும் இனப்படுகொலை
ஆஃப்ரோ நியூஸ்

சூடான் ஒரு சிறு வரலாற்றுக் குறிப்பு

Series Navigation

செய்தி

செய்தி