சுழியங்களின் இட மாற்றம்

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

மனஹரன்


மெலிசாய்
புல் நுனிமேல் வந்தமரும்
அணு பூச்சியாய்
எண்ணத்தில்
சத்திய ஓசை கொண்டாடிடும்

பயணமிழந்தவர்களின்
பாசைகளுக்குள்ளே
குமுறிடும் கோபத்தில்
ஒரு நித்திய நாயகனின்
மெல்லிய கையசைக்கும் நினைவு
மின்னலாய் மொழியும்போது
புன்னகையைக்கக்கிவிட்டு
மெளனிக்கும் உதடு

கோசமிடும் கோபுரக்குரலுக்குள்
நெஞ்சுருகும் ஈரத்துடன்
போர் முரசு கொட்டாமல்
அமைதி மறியல்
அனுமதி காக்கும்

சுயநலக்கோடரி
தூக்கிடும்போது
சூழ்நிலைக்கைதியின்
துயரக் குமுறல்
தொடரும் காலம்
நீண்டுகொண்டாபோகும் ?

யதார்த்தப் பார்வையில்
கசிந்து வடியும்
ஏக்கத்தின்
யாக நோக்கினை
இன்னுமொரு
ஐம்பதாண்டுகளுக்குத்
தூக்கிச்செல்லும் பலு
கல்லுக்குள் நீராய்
ஊற்றெடுக்கும்

அழுகை வர்த்திகளை
அணைக்க நித்தியக்கரங்கள்
நீண்டு கொண்டேயிருக்கும்

***
மனஹரன், Malaysia

Series Navigation

மனஹரன் மலேசியா

மனஹரன் மலேசியா