சுனாமிக்கு (அமெரிக்கா) IRS காட்டும் பரிவு:

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

கோவிந்த்


சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் வருமான மற்றும் நிதித் துறை என்ன சிறப்பு வரிச் சலுகைகளை மக்களுக்கு அளிக்கிறது எனத் தெரியாத போதிலும்,

பாதிப்புக்கு உள்ளாகாத அமெரிக்கா செயல்படும் விதம் பாராட்டப்பட வேண்டியதே.

அமெரிக்காவில் நிதி ஆண்டு டிசம்பர் இறுதியுடன் முடிகிறது. அதானல், சுனாமிக்கு நிதி தருபவர்களுக்கான வரிச் சலுகையை புதுவருட ஜனவரி மாதம் இறுதி வரை நீட்டித்திருக்கிறது IRS.

அப்படி ஜனவரியில் தரப்படும் நிதியானது , டிசம்பருக்கு முன் தேதியில் கணக்கு கொள்ளப்பட்டு முடிந்த வருட வரி விலக்கிற்கு உள்ளாகிறது.

இதன் விவரம், www.IRS.gov -வில் விவரமாகக் காணலாம்.

அதனால், இன்னும் நிதி தர விரும்பும் அமெரிக்கர்களுக்கு இந்தத் தகவல் ஒரு உற்சாகம் ஊட்டும் விஷயம்.

மேலும், விரும்பினால் இந்த சலுகையை அவர்கள் அடுத்த ஆண்டு கணக்கில் கூடப் பெறலாம். அதாவது, ஜனவரி இறுதி வரை தரும் தொகையை முடிந்த ஆண்டிலோ அல்லது நடப்பு ஆண்டிற்கோ என ஏதாவது ஒன்றிற்கு கணக்கில் கொள்ளலாம்.

இந்தச் சந்ஷ சமாச்சாரத்தை முஞ்சும் வகையில் இருந்தது, சுனாமிப் பகுதியில் விஜயம் செய்த ரஜனி ராம்கியின் கடிதங்கள்.

போதும் போதும் எனும் அளவிற்கு உதவிகள் குவிந்தபடியால், இனி நிதி உதவி புதிதாய் தேவையில்லை என்று அவர் சொல்கிறார்.

அவரின் இந்தச் செய்தி நிம்மதி தருகிறது. அவருக்கு நன்றி.

அதனால், நமது உதவி பற்றிய அணுகுமுறையை மாற்றிக் கொள்வது சுனாமிப் பாதுகாப்பிற்கு உள்ளானவர்களுக்கு நாம் செய்யும் ஒரு சரியான உதவி.

இனி, நிதியை பரவலாக தொண்டாற்றும் நிறுவனங்களுக்கு தருவது நிறுத்தி, குறிப்பிட்ட ஒரு திட்ட வடிவுடன் செயல்படுத்தப்படும் தொண்டுகளுக்குத் தரலாம்.

ஒரு கிராமத்தை தத்து எடுத்தவர்களுக்கு அவர்களின் தேவைகளை அறிந்தோ, இல்லை அப்படி வேலை நடைபெறும் பகுதியில் பள்ளிக்கூடங்களை மறுகட்டுமானம் செய்தோ தரலாம்.

அமெரிக்கத் தமிழர்கள் கோவில்களில் தரும் நிதி நம்பிக்கைத் தருவதாக இருக்கிறது. டென்னிஸி, நிஸ்வெலி சேர்ந்த கணேஷா கோவில் (Sri Ganesha Temple, Nashville, TN ) தாங்கள் கோவிலில் வசூலித்த US $50,000 த்தை ஏதாவது ஒரு சீரிய திட்ட வடிவுடனான தொண்டாற்று நிறுவனத்திற்கு தர விரும்பும் மின்னஞ்சலும்,

கலிபோர்னியா, சான் ஹோசே பகுதி அருகாமையில் உள்ள, சன்னிவேல் பகுதி இந்து கோவில் தங்கள் நிதி திரட்டலில் கிடைத்த US$50,000 த்தை ஒரே தொண்டு நிறுவனத்திற்கு கொடுக்க விரும்பும் செய்தியும் சந்தோஷம் தரும் செய்திகளே.

ஒரு சுனாமி நிகழ்வு அறிவிப்புடன் முடிக்கிறேன்,

நிகழ்வு: வளைகுடா தமிழ்மன்றம், சுனாமி நிதி திரட்டலுக்காக வழங்கும்

‘ பொங்கல் தொடர்பு இசை, நாட்டிய நிகழ்ச்சி ‘

இடம்: சன்னிவேல் ஹிந்து கோவில்

நாள்: 23 சனவரி 2005

மேலும் விவரங்களுக்கு, http://www.bayareatamilmanram.org/ வலையின் விட்டத்து சன்னலில் தட்டுங்கள்.

—-

gocha2004@yahoo.com

—-

Series Navigation

கோவிந்த்

கோவிந்த்