சுஜாதா – தமிழ் சூரியன்

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

கோவிந்த்


சுஜாதாவிற்கு தமிழை நேசிக்கவும் , அதே சமயம் அதனிடம் அடிமையாகமல், கைகோர்த்து தோழமையுடன் இருக்கவும் தெரிந்திருந்தது.
அதனால், தமிழின் கடந்த கால வசந்தங்களில் மெய்மறந்து போதை வண்டினைப் போல் அல்லாமல், அதற்கு புதிதாக பல கொண்டு வந்து சேர்க்க முடிந்தது.

தமிழின் அனைத்து வீச்சுகளிலும், பயணித்து , புதிய ஒரு வீச்சிற்கு பிதாமகானாய் இருக்க முடிந்தது.
புதிய வீச்சு >> விஞ்ஞானத் தமிழ்.
கம்ப்யூட்டரை எப்படி அழைக்கலாம், கணணி என்றா கணிப்பொறி என்றா என்பன போன்ற நிலையன்றி அவரால், தமிழ் தெரிந்தவர்களிடம் கம்யூட்டர் நேசத்தை எடுத்துச் செல்ல முடிந்தது.
அதுவும், கதை, கற்பனை மற்றும் யதார்த்தம் என்ற பல நிலைகளில் அவர் செயல்பட்டது பன்முக நிலையே…

**** மிண்ணணு ஓட்டுப் பதிவு எந்திரத்திற்கு அவரது பங்களிப்பு முக்கியமானது.
அவரை கௌரவிக்கும் வண்ணம், மிண்ணணு எந்திரத்தில் வரும் தேர்தலின் போது அவரின் பட ஸ்டிக்கரை ஒட்டு அவருக்கு ஒரு கௌரவம் தரலாம்.
தமிழக அரசு இதற்கு ஆவண செய்ய வேண்டும்
———–
வெகுஜன பத்திரிக்கையில் அவர்து பிரவேசத்தால் ஒரு வசீகரம் வந்தது. அவரும் , ஜெ… யும் இணைந்து வாசகர்களைக் கட்டிப்போட்ட வசீகரம் .. பிரமிக்க வைத்த ஒன்று.

திரைத்துறையில் அவரால், பல பிரமாண்ட மற்றும் ஆழமான சிந்தனைகளை தர முடிந்தது.

இந்தியன், முதல்வன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற சிகரங்களுக்கு அவரின் பங்களிப்பு அதிகம்.

கமலஹாசனின் ஒரு பங்களிப்பாகவே அவர் இருந்தார்.

பெண்டா மீடியா -வின் முயற்சிக்கு ஒரு தூண் அவர், நமக்கு பாரதி போன்ற படங்கள் கிடைத்தன.

கற்றதும் பெற்றதும் பல விஷயங்களை சாராக தந்தார்.

இதில் மேலாக, காழ்ப்புணர்ச்சியற்றவராக பழகினார். சென்னையில் ஏதாவது ஒரு ரோட்டோர டீக் கடையில் சுஜாதா போல் இருக்கிறதே என்ற நீங்கள் நினைத்திருந்தால், அது அவர் தான்…அதனால் தான் அவரால் யதார்த்தத்தைத் தொட்டு எழுத முடிந்தது.

கல்லூரியில் படிக்கும் போதே , அவர் மற்றும் அப்துல்கலாம் , கட்டுரைகள் ஒன்றாக வரவேற்பு பெற்றன…
ஒருவர் ராக்கெட்டை வானில் ஏவினார்
பிறிதொருவர் தமிழில் ஏவினார்…

முதுமையில் , பெரியாரின் சீடர்கள் பலரும் (என் குடும்ப உறுப்பினர் உட்பட.) மூடநம்பிக்கையுடன் கைகோர்க்க , அவரோ தனது வீட்டின் வரவேற்பரைத் தரையில் பல ஆமை சிலைகளை வைத்திருந்தார்.
ஆமை புகுந்த வீடு.. உருப்படாது என்பது போன்ற மூடநம்பிக்கை கொண்ட நமது சமுதாயத்தில் இறை நம்பிக்கைக்கும், மூடநம்பிக்கைக்கும் வேறுபாடு அவருக்கு தெரிந்திருந்தது…
சரியான பகுத்தறிவின் உச்சம் அவர்.
—-
அவரின் வீட்டிற்கு ஒரு முறை அவரை அழைக்கச் சென்ற போது ( விழாவிற்கு ), அவரது மனைவியின் உபசரிப்பில் விருந்தோம்பலின் உச்சம் இருந்தது…

தமிழ்ச் சமுதாயத்திற்கு கிருஷ்ணன் போல் பல உரைகள் தந்த அவருக்குத் தேரோட்டவிடினும் காரோட்டியது இன்று வரை மகிழ்ச்சி..
—–

அவர் மேலோட்டமாக எழுதினார், விரிவாக எழுதவில்லை.. என்று சிலர் சொல்கிறார்கள்…

நல்ல வேளை திருவள்ளுவர் என்றோ மறைந்து விட்டார்…
இல்லாவிடில், என்னாடது எவ்வளவு விவரமாக பல நூறு பக்கங்கள் எழுத வேண்டியதை மேலோட்டமாக இந்த பெரிசு 11/2 வரி தான் எழுதுகிறார்… என்றிருப்பர்.

ஆம், சுஜாதா, திருவள்ளுவர் வகை…
அவரது எழுத்து ஜன்னல் வழி வரும் சிறு சூரிய ஒளிக் கீற்று..
அது தொடர்ந்து நமது பார்வை விசாலமானால் சூரியனையே தரிசிக்கலாம்…

சுரியனில் கலந்த தமிழன்னையின் விஷேச புத்திரனுக்கு
நன்றி கலந்த வணக்கம்…

கோவிந்த்


Series Navigation

கோவிந்த்

கோவிந்த்