சீனாவின் தொழில் வளர்ச்சியும் மிதமிஞ்சிய அமில மழையும்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

செய்தி


சுற்றுச் சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மீறிய வளர்ச்சியினால், சீனாவின் 250 நகரங்களில் அமில மழை பெய்ததாகவும், வருடாந்திர நட்டம் இதனால் 110 பில்லியன் யுவான் (13.3 பில்லியன் டாலர்) என்றும், இந்தத் தொகை வருட உற்பத்தியில் 3 சதவீதம் என்று சீன தினசரி ‘சீனா டெய்லி ‘ கூறுகிறது.

அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகத்தின் அலுவலர் வாங் ஜியான் கூறுகிறார்: ‘ தெற்கு மானில நகரங்களில் அமில மழை மாசு மிக அதிகம். ‘ கரி மிக மலிவாகக் கிடைக்கிற காரணத்தால், வெப்ப மின் நிலையங்கள் அதிகம். சீனாவின் மின் நிலையங்களில் முக்கால் பகுதி கரியை ப் பயன் படுத்தும் நிலையங்களே. இஅவையே புகையும் , கந்தக அமில வாயுவும் வெளியாகக் காரணம். சீனா இந்தவாயுக்களின் வெளியீட்டில் உலகில் முதலிடம் வகிக்கிறது.

2003-ல் 21 டன்களுக்கும் மேல் கந்தக அமில வாயு சூழலில் கலந்தது. இது முந்தைய வருடத்தைக் காட்டிலும் 12 சதவீதம் அதிகம் என்று இந்த ஏடு குறிப்பிடுகிறது.

‘2005-ல் சீனா 1.8 பில்லியன் டன்கள் அளவிற்கு கரியை எரிக்கும் என்பது ஒரு கணக்கீடு. இது ஆறு மில்லியன் கந்தக அமில வாயுவை வெளிப்படுத்தும் ‘ என்று வாங் கூறுகிறார். அரசு கந்தக அமில வாயுவைக் கட்டுப்படுத்த தொழிற்சாலைகளுக்கும், வெப்பமின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கும் எவ்வளவு வாயு வெளியிடலாம் என்று கோட்டா நிர்ணயிக்க உள்ளது. கந்தக அமிலத்தைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளையும் நிறுவவேண்டும் என்று கேட்டுக் கொள்ளவிருக்கிறது. முன்னே நிர்ணயித்த கட்டுப்பாடுகள் போதிய பலனை அளிக்கவில்லை என்று வாங் ஒப்புக் கொள்கிறார்.

கந்தக அமில வாயு மிக அதிகமாக உள்ள இடங்களில் ஏற்கனவே சீனா , கரியைத் தடை செய்துள்ளது. ஆனால் அமில மழைக்கு கந்தகம் மட்டுமே காரணம் அல்ல.

பெட்ரோல் வாகனங்களினாலும், உரங்களை வெகுவாக உபயோகப் படுத்துவதாலும் நைட்ரேட்டுகள் வெகுவாக சூழலில் கலந்து அமில மழைக்குக் காரணம் ஆகின்றன என்று டாங் டகாங் கூறுகிறார். சீன சுற்றுச் சூழல ஆய்வுக்கழகத்தில் அலுவலர் இவர். நைட்ரிக் அமிலத்தைக் கட்டுப் படுத்த இன்னமும் சீனா ஏதும் சட்டங்கள் இயற்றவில்லை என்று அலுவலர்கள் கூறுகின்றனர்.

Series Navigation

செய்தி

செய்தி