சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

நா கோபால்சாமி


விளக்கு அமைப்பு 2002-ம் ஆண்டிற்கான புதுமைப் பித்தன் நினைவுப் பரிசை சி மணிக்கு வழங்குகிறது என்று விளக்கு அமைப்பின் அமைப்பாளர் நா கோபால்சாமி அறிவித்துள்ளார். எஸ் ஆல்பர்ட், பெருமாள் முருகன் , சி மோகன் அடங்கிய நடுவர் குழு இந்தத் தேர்வை அறிவித்துள்ளது. விருதின் மதிப்பு ரூ 25,000 ஆகும்.

சி மணி வாழ்க்கைக் குறிப்பு :

பெயர் : எஸ் பழனிசாமி

பிறப்பு : 3 அக்டோபர் , 1936.

கல்வி : எம் ஏ (ஆங்கிலம்), பி எட்., பி ஜி டி டி சி

பணி : ஆங்கிலப் பேராசிரியர், அரசினர் பயிற்சிக் கல்லூரி, (சென்னை, வேலூர், குமார பாளையம்)

முகவரி : 34 சவுண்டம்ம்மன் கோயில் தெரு, சேலம் 6360003(தொலைபேசி 226-0234)

நூல்கள் : வரும்போகும் (கவிதைகள்), க்ரியா, 1974

யாப்பும் கவிதையும் (விமர்சனம்), சாதனா, 1975

ஒளிச் சேர்க்கை (கவிதைகள்), சாரல், 1976

இதுவரை (கவிதைகள்), க்ரியா, 1996

மொழி பெயர்ப்பு : தோண்டுகிணறும் அமைப்பும் , க்ரியா, 1982

டேனிடா செயல் முறைத் திட்டம் (தமிழ்நாடு அரசு, 1984)

தாவோ தே ஜிங்(ஆன்மிகம்) க்ரியா , 2002

பரிசு / விருது : தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் (இரு முறை 1983,1985)

ஆசான் கவிதை விருது , சென்னை , 1985

கவிஞர் சிற்பி விருது , பொள்ளாச்சி, 1998

பயணம் : பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்புடன் இங்கிலாந்து பயணம் 10 நாட்கள் – 1990

பிற : ‘எழுத்து ‘ (சி சு செல்லப்பா) , பிரக்ஞை, கசடதபற, நடை முதலிய சிற்றேடுகளுடன் நெருங்கிய தொடர்பு.

நடை நிறுவனர்.

புனைப் பெயர் : சி மணி, வே மாலி, சேல்வம்

Series Navigation

நா கோபால்சாமி

நா கோபால்சாமி

சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue


நாள் 28-12-2003.

இடம் சேலம் தமிழ்ச் சங்கம்.

விளக்கு அமைப்பின் 2002-ம் ஆண்டிற்கான விருதை சி மணிக்கு வழங்கு விழா நடைபெறும்

விழாவில் பிரம்மராஜன், சிபிச் செல்வன், நஞ்சுண்டன், வைதீஸ்வரன், மோகனரங்கன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விளக்கு அமைப்பின் இந்தத் தெர்வில் நடுவர்களாக செயல்பட்ட சி மோகன், பெருமாள் முருகன் கலந்து கொள்வார்கள்.

————-

vilakku@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு