சில கேள்விகள்
Published June 23, 2002 • By
ஸ்ரீனி
ஸ்ரீனி.

மனங்களின் சங்கமம்
திருமணம்
என்னும் விளக்கவுரை
தந்தவன் யார் ?
கயிற்றின் முடிச்சில்
கட்டுப்பட்டு நிற்கும்
அகலிகைகள்
இங்கே ஏராளம்.
நெருப்புக்கும் நீருக்கும்
இல்லாத சக்தி
நிலத்தில் கிழித்த கோட்டிற்கு !
கர்வத்தில் எவனோ எழுதிய
கட்டுக்கதைக்கு
காலப்போக்கில் ‘காவிய ‘ அந்தஸ்து !
தென்றலின் வருடலிலும்
வண்டின் முத்தத்திலும்
இதழ் சிவந்து சிாிக்கும் பூவிற்கு
கொண்டையில் சொருகப்பட்டு
சிறைமுகம் இங்கே !
வண்டுகளையும் பூக்களையும்
பசை கொண்டு ஒட்டும் சமுதாயம் !
சுமப்பதற்காக பூக்களும்
சுவைப்பதற்காக வண்டுகளுமாய்
சுதந்திரம் இழக்கும் காலங்கள் ..
***
Ramachandran_Srinivasan@eFunds.Com