சிந்து மாநிலத்தில் மொழி பிரச்னை

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

சையது ஏ மதீன்


மொகலாயர் காலத்தில் (1526-1858) உருது மொழி தோன்றியது. மொகலாய குடும்பத்தில் இருந்த சிலர் இசைக்கும் கவிதைக்கும் பெரும் புலவலர்களாக இருந்தார்கள். அங்கு மெதுவாக ‘ஹிந்துஸ்தானி ‘ கவிதை தோன்றியது. இது அரபிய பெர்ஷிய மொழி வார்த்தைகளைக் கொண்டு பெர்ஷிய-அரபிக் எழுத்துவடிவத்தில் எழுதப்பட்டது. இந்த மொழி உருது என்று வழங்கப்பட்டது.

மொகலாய அரசவையில் பெர்ஷிய மொழி வகித்த இடத்தை உருது பிடித்தது. அங்கு இரு வேறு மொழி வடிவங்கள் தோன்றின. இரண்டும் ஒன்றுதான், அதன் மேல்மட்ட வார்த்தைகள் தவிர ஒரே மொழிதான். அரசர்கள் உருது மொழியில் தங்களை ஷா, நவாப், நிஜாம் என்று அழைத்துக்கொண்டார்கள். வட இந்தியாவில் முஸ்லீம்களின் மொழியாக இந்துஸ்தானியின் உருது வடிவம் ஆனது. மற்றவர்களின் மொழியாக ஹிந்தி ஆனது. பதினேழாம் நூற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டில், உருது பல பெர்ஷிய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு தனது அலங்கார வடிவத்தை அடைந்தது.

தெற்காசிய முஸ்லீம்களுக்கு தங்களது பொது அடையாளமாக உருது மொழியை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். படித்த முஸ்லீம்களுக்கு இடையே பொது மொழியாக உருது விளங்கியது. இது பாகிஸ்தான் விடுதலை இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்தது. கிரிஸ்டோபர் ஷாக்கெல் எழுதுகிறார், ‘முஸ்லீம் மேல் வர்க்கத்தின் முக்கிய இலக்கிய ஊர்தியாக உருது விளங்கியது ‘. சுதந்திரத்துக்குப் பிறகு, புதிய பாகிஸ்தானிய தேசிய மொழியாக உருது முன்னிறுத்தப்பட்டது. புதிய நாட்டில் இதனை பேசுபவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே இருந்தும், பாகிஸ்தானிய அரசு உருது மொழியை வளர்த்தது. இருப்பினும், ஆங்கிலம் பெரும்பாலான மேல் வர்க்கத்தினர் பேசும் மொழியாக இருந்ததால், அதுவே நடைமுறையில் தேசிய மொழியாக இருந்தது.

தேவநாகரி என்ற மொழி எழுத்து வடிவம் உருதுக்கு எப்போதும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. உருது எப்போதுமே பெர்ஷிய மொழி எழுத்து வடிவத்திலேயே எழுதப்பட்டது. ஆகவே கொச்சை இந்துஸ்தானி மொழியிலிருந்து உருவான உருது, ஹிந்தி என்ற மொழிகள் பிரிவினைக்கு முன்னர் நவீன இந்தியாவின் மொழிகளாக இருந்தன. பாகிஸ்தானில் பேசப்படும் 20க்கும் மேற்பட்ட மொழிகளில், பெரும்பான்மை பஞ்சாபி, சிந்தி, உருதும் தவிர இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த பஷ்டோ, பலுச்சி போன்றவையும் உண்டு.

ஷினோ மற்றும் வடக்கு பிரதேச மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் டார்டிக் கிளையைச் (Dardic branch) சார்ந்தவையாகவும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவையாகவும் இருக்கின்றன. பிராஹ்வி என்பது ஒரு திராவிட மொழிக்குடும்ப மொழி. இது பலுச்சிஸ்தானில் ஒரு குழுவினரால் பேசப்படுகிறது. பாகிஸ்தானில் சுமார் 48 சதவீதத்தினர் பஞ்சாபி பேசுபவர்களாக இருக்கிறார்கள். அடுத்து சிந்தி 12 சதவீதத்தினரால் பேசப்படுகிறது. பஞ்சாபியின் ஒரு வழக்கான சிரைக்கி 10 சதவீதத்தினரால் பேசப்படுகிறது. பஷ்டோ 8 சதவீதத்தினரால் பேசப்படுகிறது. ஹிந்கோ 2 சதவீதத்தினரால் பேசப்படுகிறது. பிராஹ்வி 1 சதவீதத்தினரால் பேசப்படுகிறது. ஆங்கிலம், புருஷாஸ்கி ஆகிய மற்ற மொழிகள் மீதம் 8 சதவீதத்தினரால் பேசப்படுகின்றன.

பாகிஸ்தானின் தேசிய மொழியாக உருது 1973ஆம் அரசியலமைப்புச் சட்டத்தால் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அது சுமார் 8 சதவீத மக்களுக்கே தாய்மொழியாக இருக்கிறது. உருது மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவர்கள் மொஹாஜிர்கள் (இந்தியாவிலிருந்து வந்தவர்கள்) . படித்த மக்கள் உருது பேசுகிறார்கள். இவர்கள் தங்கள் குழந்தைகளும் உருது மொழியில் புலமை பெற்றவர்களாக ஆக்குகிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் சிறந்த பள்ளிக்கூடங்கள் 1980வரை ஆங்கிலத்திலேயே போதித்தன. ஆங்கிலத்தில் புலமை பெற்றிருப்பது மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கிறது. ஏனெனில் அவ்வாறு ஆங்கிலப்புலமை பெற்றிருப்பது பிரிட்டன், அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் சிறந்த பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்க உதவுகிறது.

தேசிய உணர்வை வளர்ப்பதற்காக, ஜியா உல் ஹக் அரசு உருது மொழியை எல்லா அரசாங்கப்பள்ளிக்கூடங்களிலும் பயிற்றுவிப்பு மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்று அறிவித்தது. தொலைக்காட்சிகளிலும், வானொலி மற்றும் கல்விக்கூடங்களிலும் உருது மொழியே தீவிரமாக பரப்பப்படுகிறது. நகரங்களில் சிறு அளவு உயர்தர பள்ளிக்கூடங்கள் ஆங்கில மொழியில் பயிற்றுவிக்க அனுமதிக்கப்பட்டன. ஆஜாத்-ஜம்மு காஷ்மீர் என வழங்கும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் உருது மொழியே அரசாங்க மொழியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆங்கிலம் தொடர்ந்து பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான தொடர்புகளுக்கும் இதர அமைச்சகங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சுதந்திரம் அடைந்து 57 வருடங்களுக்குப் பிறகே முதலாம் வகுப்பிலிருந்து கடைசி வகுப்பு வரை உருது மொழியில் எல்லா பள்ளிக்கூடங்களிலும் பயிற்றுவிப்பு மொழியாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்தது. தற்போது சிந்து முதலமைச்சர் பதினொன்றாம் வகுப்பில் உருது பேசுபவர்களும் சிந்தி மொழி அறிமுகம் பாடம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறார்.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் சிந்து பிரிவின் தலைவராகவும் இருக்கும் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்தது தவறானது. ஹையர் செகண்டரி படிக்கும் உருது மொழி பேசும் மாணவர்கள் சிந்தி மொழியை ஆரம்பத்திலிருந்து பதினொன்றாம் வகுப்பில் கற்றுக்கொள்வது கடினமானது. ஏனெனில் மொழி தாயாரின் மடியிலிருந்து கற்றுக்கொள்ளப்படுவது. எவ்வாறு மொழியை பதினொன்றாம் வகுப்பில் கற்றுக்கொள்ள முடியும் ? அது அவர்களது தாய் மொழியுமல்ல. சிந்தி மொழி பாகிஸ்தானின் தேசிய மொழியும் அல்ல.

இந்த மொழிப்பிரச்னை தீர ஒரே வழி சிந்து மாநில முதலமைச்சர் தன் முடிவை மாற்றிக்கொள்வதுதான். உருது பேசும் குடும்பங்களின் மாணவர்களுக்கு கட்டாயப்பாடமாக சிந்தி மொழி படிக்க வேண்டுமா என்பதை ஆராய வேண்டும்.

பாகிஸ்தானின் ஜனாதிபதி பெர்வேஸ் முஷாரஃப் அவர்களும் சிந்து கவர்னரான டாக்டர் இஷ்ரத்-உல்-இபாத் கான் அவர்களும் உருது பேசும் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அவர்களால் உருது பேசும் குடும்பத்தில் உள்ள பெற்றோர் குழந்தைகளின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியும். இதை தீவிர பிரச்னையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சிந்து முதலமைச்சர் இந்த மொழிப்பிரச்னையை தீர்க்க முன்வர வேண்டும். இல்லையேல், பரந்த கலவரமும், ரத்த சேதமும் நடக்கும். 1972இல் தேசிய மொழிக்கொள்கையை ஏற்றுக்கொண்டபின்னால் இந்த பிரச்னை தேவையா என்று சிந்திக்க வேண்டும்.

The writer is a political analyst

Email: syedamateen@yahoo.com

http://jang.com.pk/thenews/nov2005-daily/11-11-2005/oped/o2.htm

Series Navigationஎம். கோபாலகிருஷ்ணனின் ‘மணற்கடிகை ‘ – காலத்தின் பரமபத விளையாட்டு >>