சாவாத நட்பு
Published November 25, 2001 • By
திலகபாமா
திலகபாமா

புவி கொண்ட நீர்
புறப்பட்டு வான்செல்ல
சூல் கொண்ட கருமேகம்
கண் மறைத்து
சூழ்ச்சி செய்ததாய்
சுட்டும் நிலவு
மெல்லத் தேயும்
தன்னிலிருந்து நீராவியும்
வானிலிருந்து நீரும்
கொடுத்தும் பெற்றும்
சந்திக்காது சந்தித்த நட்பை
சிந்தித்த வானும் பூமியும்
தேய்ந்த நிலவு தெளிந்து
வானத்து இருதயமாய்
வந்து நிற்க
நீள்தவம்கிடக்கும் வானம்
சந்திக்காது போனாலும்
சாவாத நட்புடன்