சபா- தீபாவளி ஸ்பெஷல்

This entry is part [part not set] of 29 in the series 20021110_Issue

ஆர்.உஷா ராணி


தலைவரின் அடுத்த பட டிஸ்கஷனுக்கு சொல்லி அனுப்பப்பட்டது.இசை சுறாவளி ஹாலிவுட்டில் பிஸி என்பதால் செல் போனில் டியூன் அனுப்புவதாக சொல்லி விட்டார்.பிரபல டைரக்டர்களான முத்துரத்தினம், இரங்கலஷ்மணன்,பாஸ்கர்,விமல்குமாரும்,புகழ் பெற்ற எழுத்தாளர்களான பாலவேலன்,சுதா[ஆண்தான்],இலக்கியவாதி சாமியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர். தலைவரின் குடும்பத்தினரும்_மாமியார்,மச்சான் உட்பட அங்கு இருந்தனர்.இதை தவிர தலைவரின் எடுபிடிகள்.

அரசியலிலும்சரி,சினிமாவிலும்சரி, ஒரு அளவுக்கு புகழ் பெற்று விட்டால் பெயரை விட்டு விட்டு பட்டபெயர் வந்துவிடும்,மனைவிஉட்பட அந்த பெயரைதான் குறிப்பிடுவார்கள். இது தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்ததே!

தலைவர் மெதுவாய் வந்து உட்காருகிறார். வயதாகிவிட்டது அல்லவா! படத்தின் டைரக்டர் ரமேஷ்ராமன் இரண்டேவரியில் கதையை சொல்கிறார்.எடுபிடிகள்,உங்களுக்கு ஏத்த கதை தலைவரே என்று கரகோஷம் எழுப்புகிறார்கள்.

தலைவர் எல்லோர் முகத்தையும் பார்கிறார்.விமல்குமாருக்கு தனக்கு சான்ஸ் இல்ைஎன்ற எரிச்சலைமறைத்துக்கொண்டு,நல்லாதான் இருக்கு!ஆனா இது இப்படி இருந்தாதான் உங்க ரசிகர்களுக்கு பிடிக்கும் ‘ என்று மெய் கதையில் கை வைக்கப்பார்த்தார்.

ரமேஷ் ராமன் அவரை பார்த்து முறைத்தபடி, ‘கதையே தலைவர் பண்ணினதுதான் ‘ என்றார்.

விமல்குமார் வெலவெலத்துப்போய் அதற்கு பிறகு வாயே திறக்கவில்லை.

டைரக்டர் முத்துரத்தினம் சுவரில் இருக்கும் பல்லியை பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

இரங்கலஷ்மணன் திருதிருவென்று முழிக்கிறார்.

பாஸ்கர் , ‘வெரி நைஸ் ஸ்டோரி ‘ என்கிறார்.

எழுத்தாளர்சுதா,தன் தலைவிதியை நொந்துக்கொண்டு,எதாவது பேசவேண்டுமே என்று, ‘நீங்கள் தானே வசனம் மிஸ்டர்பாலவேலன்! ‘ ‘என்கிறார்.

தன் தாடியை சொறிந்துக்கொண்டிருந்த பாலவேலன்அலறியபடி, ‘நண்பர் சாமிதான் டயலாக்ஸ் ‘ ‘ என்றார்.

சாமிக்கு தன்னுடைய,இலக்கிய சேவை எல்லாம் ஞாபகம் வருகிறது,கூடவே மனைவியின் அறிவுரைகளும் காதில் ஒலித்தது.தொண்டையை சொருமிக்கொண்டு, ‘ஒரே வாரத்தில் கம்யூட்டரில் டைப் பண்ணிக்கொடுத்துவிட்டுகிறேன்,பட், ஐ நிட் எ கம்யூட்டர் பார் தட் ‘ என்று தன் பிழைப்பைப்பார்த்தார். டைரக்டர், ‘ ‘அங்கங்க,இத போட்டுக்கோங்க! ‘என்று இருபது பஞ்சிங் டயலாக்ஸ் தருகிறார்.

பாட்டுக்களுக்கு பெரியவர்தான் சரிப்பட்டு வரும்னு ஏகமனதாக முடிவாகிறது.

பல்லிக்கு பக்கத்தில் ஒரு பூச்சி வந்து அமருகிறது.

‘நெக்ஸ்ட்!கம்யூட்டர் கிராபிக்ஸ்,பாஸ்கர்,ரங்கா உங்க ஐடியாஸ் சொல்லுங்க! ‘ என்கிறார் தலைவர். பாஸ்கர் கமுக்கமாய் இருக்க,இரங்கலஷ்மணன் எங்கே தன்னுடைய பாம்பு, தேள் ,அம்மன்,சூலத்தை பிடிங்கிகொள்வார்களோ என்ற பயத்தில் நடுநடுங்குகிறார்.

‘ டாடி! ‘என்ற செல்ல கொடுக்கு , ‘ ‘கிராபிக்ஸ் நா பண்ணுகிறேன் டாட்,நாதான் கம்யூட்டர் கோர்ஸ் படிச்சேனே ‘ ‘ என்று கொஞ்சுகிறது. பாசத்தில் நெகிழ்ந்த தலைவர் தலையை ஆட்டுகிறார்.

பல்லி மெதுவாய் பூச்சிப்பக்கம் நகருகிறது.

பாலவேலன் தாடி ஏன் இப்படி அரிக்கிறது என்று யோசித்துக்கொண்டு இருக்கிறார்.

சுதாவுக்கு காலையில் மீசைக்கு டை அடிக்காதது ஞாபகம் வருகிறது.

விளம்பரங்கள், மீடியா பப்ளிசிடி என்று ஆரம்பித்தவுடன்,அக்கா! என்று தலைவரின் மச்சானின் குரல் தயக்கமாய் வருகிறது,மாமியாரின் பார்வையும், மனைவியின் உரிமையும் தலைவரை தலை அசைக்க வைக்கிறது.

ஆக அட்வடைஸ்மெண்ட் வேலைகள் மாமியார் வீட்டார்களிடம் கொடுக்கப்பட்டன.

தலைவர், நெக்ஸ்ட் ஹிரோயின் என்று ஆரம்பித்தவுடன்,அவர் மனைவி, ‘நா வேணா! ‘என்று இழுத்தார்.அவர் ஹிரோயினா ! அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போயினர்.

‘ப்சூ ஒரு சஜஷன் சொல்லட்டா! ‘என்றதும்,எல்லோரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

‘நம்ம பொண்ணொட கிளாஸ்மேட் டாலி இந்த தடவ மிஸ் இந்தியா, ஹிரோயின் சான்ஸ் வாங்கிதரேன்னு நா பிராமிஸ் பண்ணிட்டேன் ‘.

வெரிகுட்!வெரிகுட்! சந்தோஷத்துடன் மனைவியை பாராட்டுகிறார்.

பூச்சியை பல்லி பிடித்துவிடுமோ என்று முத்துரத்தினத்திற்கு கவலை ஏற்படுகிறது.

தலைவர், ‘ இப்போ, படத்தேட டைட்டில் சொல்லப்போரேன்,ஜோஸ்யர் என்னோட ஜாதகம்,நியூமராலஜி பார்த்து, ‘ப ‘மூ ணிமுஷமச்னபசூ ப்ஸ்மூசூ ம்லுஷவூ டிபசூஸ்ரீயுசூஸ. மயமீ டிமமீஸ டும்றுநுச்யீரூ ணீஜ்ம டாமஈஸ்ரீ , ‘சபாபதி ‘ ன்னு டும்றுநுமூசூஷவூ டுபீமுறுபீஸ சஜஷன் சொன்னார். என்னடா,பழைய பெயரா இருக்கேன்னு யோச்சிக்கிட்டே மெரீனா பீச்சுக்கு போனேன். டிரைவரை வேர்கடலை வாங்கிவர சொன்னேனா,பொட்டலத்தை பிரிக்கிறேன்! ‘

சஸ்பன்ஸ்ஸுடன் நிறுத்தினார்.

அங்கு மயான அமைதி நிலவுகிறது.

பல்லி மெல்ல நகருகிறது.ஐயோ பாவம் பூச்சி என்று முத்துரத்தினத்தின் மனம் அடித்துக்கொள்கிறது.

அந்த பேப்பரில் ‘பழனி மலை சித்தர் சபாவின் வாழ்க்கை சரித்திரம் ‘ ‘ ன்னு இருந்தது,அடுத்தவரி என்ன தெரியுமா ?நினச்சாலே அப்படியே சிலுக்குது!சபான்னு அழைக்கப்படுகிற சித்தரின் இயற்பெயர் சபாபதின்னு இருந்துச்சு ‘

அப்பவே முடிவு பண்ணிட்டேன், டைட்டில் சபா ‘ ‘ உற்சாகமாய் முழக்கமிட்டார்.

அதே நேரம் பூச்சிமேல் பல்லி பாய்ந்தது.கடைசி வினாடியில் பூச்சி பறந்து விட்டது.

தன்னையறியாமல், ‘ ‘ஆஹா ‘ என்று சந்தோஷமாய் கத்தி விட்டார் டைரக்டர்முத்துரத்தினம்.

முத்து வாயிலிருந்து முத்தான பாராட்டை கேட்டு , தலைவருக்கு கண்ணில் நீரே வந்துவிட்டது. நேராய் போய் அவர் கையை பிடித்து தன் நன்றியை தெரிவிக்கிறார்.சூப்பர் ஹிட் அல்லது சூப்பர் பிளாப் என்ற நினைப்புகளுடன் கூட்டம் கலைகிறது

[இதைப்படித்துவிட்டு யாருக்காவது யாராவது ஞாபகம் வந்தால் நான் பொறுப்பு இல்லை]

***

ramachandranusha@rediffmail.com

Series Navigation