சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

ஜடாயு


மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது. ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன் வழிபாடு பற்றிய அவதூறான பொய்களைக் கிளப்பி விட்டு, இந்த ஆலயத்தின் பக்தர்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை,எளிய மக்களின் சமய நம்பிக்கைகளைக் கேலிக்குரியதாக்கி, மதமாற்றம் செய்வதற்கான சூழலை உருவாக்குவது. மதமாற்ற வெறிபிடித்த கேரள மிஷநரிகள் தீட்டியுள்ள பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

கேரளாவில் நன்கறியப்பட்ட மதமாற்றி (evangelist என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் இதுதான்) நிறுவனமான Gospel For Asia (GFA) திருவல்லாவுக்கு அருகிலுள்ள மஞ்சாடியைத் தலைமையகமாகக் கொண்டது. சமீபத்தில் ஹாரிசன் மலையாளம் லிமிடெட் என்கிற தோட்டக் கம்பெனியிடமிருந்து 3500 ஏக்கர் பரப்பளவுள்ள “எரிமேலி எஸ்டேட்” என்னும் எஸ்டேட்டை 65 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

சபரிமலை புனிதப் பயணத்தின் நுழைவாயில் எரிமேலி என்பது எல்லாருக்கும் தெரியும். வேடன் உருவில் கிராத வேஷ மூர்த்தியாக ஐயப்பன் குடிகொண்ட திருத்தலம் இது. மகர விளக்கு சமயம் இங்கு நடக்கும் பேட்டை துள்ளல்கள் மிகப் பிரபலமானது, சபரிப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கம்.

எரிமேலியில் இவ்வளவு பெரிய நிலத்தை வாங்கியிருக்கும் மிஷநரிகள் தீட்டியுள்ள திட்டம் மிகத் தந்திரமானது. இதில் 500 ஏக்கர் நிலத்தை அரசின் கிராம முன்னேற்றத் திட்டங்களுக்காக வழங்குவது. இப்படிச் செய்வதன் மூலமாக, சபரிமலையில் உனக்கு என்ன வேலை என்று கேட்பவர்கள் வாயை அடைக்கலாம். அரசுத் திட்டம் என்பதால் அரசே சில கட்டமைப்பு சமாசாரங்கள் (சுகாதார மையம், பள்ளி, சுயதொழில்) உருவாக்கும் – அதை வைத்தும் ஜோராக மதமாற்ற வேலைகள் நடத்தலாம். இந்த 500 ஏக்கர் தவிர அக்கம்பக்கத்து ஏரியாவையும் அரசுப் பணத்திலேயே கொஞ்சம் டெவலப் செய்து, வெளிநாட்டிலிருந்து வரும் கோடிக்கணக்கான டாலர்களை நேரடியான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் செலவழிக்கலாம். கேரளாவின் இடதுசாரி அரசு, சோனியா ஆட்டுவிக்கும் மத்திய அரசு இந்த இரண்டு சிறுபான்மை சேவக அரசுகளும் இதைக் கண்டு கொள்ளாமலிருப்பது மட்டுமல்ல, ஆதரவும் அளிக்கும்!

இந்த GFA அமைப்பின் தலைவனான கே.பி.யோஹனன் என்ற மதமாற்ற வெறியன் ஏழை மக்களை ஏய்த்து மதமாற்றும் வித்தைகளில் தேர்ந்தவன். சுனாமி நிவாரணத்திற்காக என்று போன இடத்தில் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, அங்கு தங்கள் எல்லா உடைமைகளையும் இழந்தும் தன்மானத்தை இழக்காத இந்துக்களால் செருப்படி வாங்கித் திரும்பின இவனது கூட்டங்கள். இது பற்றி தினமலர் பரபரப்பு செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இது மட்டுமல்ல, சபரிமலைப் பயணத்தின் இன்னொரு முக்கிய மையமான பத்தினம்திட்டாவுக்கு அருகில் லாஹா எஸ்டேட் என்ற இன்னொரு மிகப்பெரிய எஸ்டேட்டையும் இதே மதமாற்றி நிறுவனம் வாங்குவதற்காக பேரம் பேசிக் கொண்டிருக்கிறது.

மகர விளக்கு சமயம் பக்தர்கள் இரண்டு முக்கியப் பாதைகள் வழியாக மலை மேல் செல்ல வேண்டும். ஒன்று எருமேலி வழியாகச் செல்லும் பெருவழி. இன்னொன்று பத்தினம்திட்டா, பம்பை வழியாகப் போகும் பாதை. இந்த இரண்டு பாதைகளும் மேற்குறிப்பிட்ட எஸ்டேட்டுகளுக்கு உள்ளாகத் தான் போகவேண்டும். ஐயப்ப சுவாமியின் பூங்காவனத்தை சுற்றி வளைக்க என்ன செமத்தியான திட்டம்! மிஷநரின்னா மிஷநரிதான்!

இந்த சதித்திட்டத்திற்கெல்லாம் பணம்? 2000-01 ஆம் ஆண்டுக் கணக்குப் படியே GFA-க்கு மட்டும், வெளிநாட்டிலிருந்து மட்டும் வந்த தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ! மொத்தமாகக் கேரளாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வந்த 75 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 90% கிறிஸ்தவ மதமாற்றி நிறுவனங்களுக்குத் தான் போய்ச் சேர்ந்துள்ளது. இன்னும் எத்தனை எஸ்டேட்டுக்களை இப்படி வாங்கப் போகிறார்களோ, அது கடவுளுக்கே வெளிச்சம்!

கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகர் நம்பியார் வரை, பெரிய மனிதர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை அனைவருக்கும் சமய, ஆன்மீக நிம்மதி தரும் சன்னிதியாக ஐயப்பனின் திருக்கோவில் விளங்கி வருகிறது. சைவம் வைணவம், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் பற்றும் நாட்டார் தெய்வங்கள் சார்ந்த தொன்மை வழிபாடு இவை அனைத்தையும் ஆன்மீக நூலிழையில் இணைப்பது ஐயப்ப வழிபாடு. அதன் மையம் சபரி மலை. இந்த அற்புதமான சமய மரபை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ராப்பகலாக வேலை செய்யும் மதமாற்ற வெறியர்கள் கடவுளின் ஊழியக் காரர்கள் அல்ல, அவர்கள் பாஷையிலேயே சொல்லப் போனால் சாத்தானின் சந்ததியினர்.

ஐயப்ப பக்தர்களும், அனைத்து இந்துக்களும் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.

செய்தி உதவி:

http://www.haindavakeralam.org/PageModule.aspx?PageID=2230&SKIN=C

http://jataayu.blogspot.com/

jataayu_b@yahoo.com

Series Navigation