க ட வு ளே !

This entry is part [part not set] of 33 in the series 20060714_Issue

ம.ந.ராமசாமி


க ட வு § ள !

<>
கோலாகலமான திருமணம் அது. சத்திரம் என்றில்லாமல் சொந்த வீட்டில் நடந்த திருமணம். வீடா, பங்களாவா என்று கேட்டால் பதில் சொல்ல முடியாது. பங்களாவுக்கென்று தனி லட்சணம் உண்டு. இது வீடுதான். பெரிய வீடு. அந்தக் காலத்து பர்மாத்தேக்கு மரப் பலகைகள், கட்டைகள் கொண்டு கதவுகள், ஜன்னல்கள் என்று பொருத்தப் பட்ட வீடு.

மதிய விருந்தின்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட உணவுவகைகள் மீட்டர் நீள தலைவாழை இலைகளில் பரிமாறப் பட்டன என்றால் பார்த்துக் கொள்ளலாம்!

ராஜகுமாரனாக சிங்காரிப்பட்டான் மணமகன். குதிரைமீது பவனி வந்தான். மார்பில் பட்டுச்சட்டை மீது வைரப் பதக்கம் தெருவை ஒளிமயமாக்கியது.

திருமணம் முடிந்தது. வந்தவரில் அநேகர் சென்றுவிட்டனர். மிக நெருங்கிய உறவினர்கள் மட்டும் மறுநாள் புறப்படலாம் என்று இருந்து விட்டனர்.

மணமக்களுக்கு அந்த இரவு ‘முதல் இரவு!’

தாய் ஆர்வத்துடன் காத்திருந்தபோது, உறக்கம் கலைந்த மகள் வந்தாள்.

”என்னடீ?”

”என்னம்மா?”

”சந்தோஷமா இருந்தியா?”

புரியாமல் தாயைப் பார்த்தாள் மகள்.

”எதாச்சிம் நடந்திச்சா?”

”என்ன கேட்கிறே?” மகள் விழித்தாள்.

”கட்டிப் பிடிச்சாரா மாப்பிள்ளை?”

”இல்லே.”

”இல்லியா?”

”இல்லே. இது என்னம்மா கேள்வி?” எரிச்சல்பட்டாள் மகள்.

”பால் தந்தியா?”

”குடிச்சாரு.”

”பழம், பலகாரம் சாப்பிட்டாரா?”

”இல்லே. பால் சாப்பிட்டதும் படுத்துத் து¡ங்கிட்டார்.”

”து¡ங்கிட்டாரா?”

”ஆமா.”

”நீயும் து¡ங்கிட்டியா?”

”ஆமா. அலுப்பு. கல்யாணத்துலே குனிஞ்சு நிமிர்ந்து, பெரியவங்க கால்ல விழுந்து எழுந்ததுல இடுப்பு ஒரே வலி. நல்லாத் து¡ங்கிட்டேன்.”

”ஆமா இருக்கும். மாப்பிள்ளையும் அதான் து¡ங்கிட்டாப் போலிருக்குது.”

<*> <*>
இந்த விவரத்தைத் தாய் தன் கணவரிடம் சொன்னாள்.

”அப்படியா?”

”என்ன அப்படியாங்கறீங்க? நம்ம முதல் இரவிலே நீங்க அப்படியா இருந்தீங்க?”

”சரி விடு. இன்னி இரவு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்.”

”பார்க்கலாமா? எப்படிப் பார்ப்பீங்க?”

”அட நீ ஒண்ணு. நாளை காலைல மக கிட்ட கேளு!”

மறுநாள் காலையில் அறையில் இருந்து வெளியே வந்தாள் மகள்.

”என்னடீ?”

”என்னம்மா?” கைகளை உயர்த்தி மகள் சோம்பல் முறித்தாள்.

”எதாச்சிம் நடந்திச்சா?”

எரிச்சல் அடைந்தாள் மகள். ”நீ ஒண்ணு! தெனமும் எதாச்சிம் நடந்திச்சா, நடந்திச்சான்னு கேட்டுக்கிட்டு…”

”எதும் நடக்கலியா?”

”கால்தான் நடக்கும்!”

”து¡ங்கிட்டாரா?”

”குறட்டைவிட்டு உள்ளே து¡ங்கிட்டிருக்கார் இப்பக்கூட!”

”அடப்பாவி! என்ன எழவோ! ஆம்பளைதானா?” கண்ணீர் சிந்தத் தொடங்கினாள் தாய்.

கணவரிடம் விவரத்தைச் சொன்னாள்.

”அப்படியா?”

”மாப்பிள்ளை ஆம்பளையான்னு சந்தேகம் வரதுங்க!…”

”அப்படி யெல்லாம் நீ நினைக்கிறா மாதிரி இருக்காது… சரி, நான் ஒரு வேலை செய்யறேன்.”

”என்ன வேலைங்க?”

”பொறுத்திருந்து பார்!”

<*> <*>
மிக நம்பிக்கையான தன் ஆட்களில் ஒருவனை அழைத்தார்.

”எசமான்?”

”நான் சொல்லப்போற விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது.”

”சரிங்க.”

”தாசி எவளையாவது உனக்குத் தெரியுமா?” ரகசியக் குரலில் கேட்டார்.

”என்னங்க!” நாணப்பட்டான் ஆள். ”ஐயா அறியாதவங்களா!…”

”சீ நாயே, என்ன பேச்சு பேசறே!”

”மன்னிச்சிக்கிடுங்க எசமான்!” கூனிக் குறுகிக் கும்பிட்டான்.

”சரி. தாசி எவளையாவது தேடு. விசாரி. வெவரம் தெரிஞ்ச சின்னப் பெண்ணா இருக்கணும். ராத்திரி மணி ஒம்பதுக்குக் கூட்டியா. யாருக்கும் தெரியக் கூடாது. கூட்டியாந்து கொல்லைப்புறத்திலே இருக்க வை. சாப்பிட்டு வந்திடச் சொல்லு.”

”சரீங்க எசமான்.”

<*> <*>
அன்று இரவு மணவறைக்குப் பெண் செல்லவில்லை. தடுத்து விட்டார் தந்தை.

”ஏங்க நீங்க பண்றது சரியா?” தாய் தன் கணவரிடம் கேட்டாள்.

”இதுதான் சரியான வழி…”

”தேவிடியாளைப் பழக்கப் படுத்தறது தப்பு இல்லீங்களா?”

”அவதான் உன் மாப்பிள்ளைக்கு வாத்தியாரா இருந்து பாடம் கத்துக் குடுப்பாள்.”

”அதே பழக்கம் மாப்பிள்ளைக்கு வந்திருச்சின்னா?”

”அது உன் மக சமர்த்தைப் பொருத்தது!”

அடுத்தநாள் காலை மாப்பிள்ளை மிக மகிழ்ச்சியுடன் இருந்தான். அதைக்கண்டு அவனது மாமனாரும் மாமியாரும் மகிழ்ந்தனர்.

”பாத்தியாடி உன் புருஷன் எவ்வளவு சந்தோஷமா இருக்காருன்னு?” என்றாள் தாய் மகளிடம்.

”எதனாலே அம்மா?”

”இன்னிக்கு ராத்திரி தெரிஞ்சுக்கிடுவே போ”

தெரிந்து கொண்டாளோ?

<*> <*>
அடுத்தநாள் காலை அறையில் இருந்து வந்த மகளிடம் ”என்னடீ?” எனத் தாய் விசாரித்தாள்.

”என்னம்மா?” எரிச்சல்.

”மாப்பிள்ளை எப்படி நடந்துக்கிட்டார்?”

”ரொம்பக் கோவிச்சுக்கிட்டார்.”

”ஏன்?”

”எனக்கு எதுவும் தெரியலியாம்…”

”கடவுளே!” என்றாள் தாய்.

———————-
mnrwriter@gmail.com
22 04 2006

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி