This entry is in the series 20020407_Issue


தேவையான பொருட்கள்

கேரட்

சாதம்

செய்முறை

இரண்டையும் கலந்து பரிமாறவும்.

just kidding..

தேவையான பொருட்கள்

1 கோப்பை துருவிய கேரட்

1 வெங்காயம் பொடியாக அரிந்து கொள்ளவும்

1 பட்டை

1 கிராம்பு

1 தேக்கரண்டி சோம்பு நுணுக்கியது

கறிவேப்பிலை, கொத்துமல்லி பச்சைமிளகாய் நாலைந்து நறுக்கிக்கொள்ளவும்

பிரியாணி மசாலா பொடி ஒரு தேக்கரண்டி

எலுமிச்சைச்சாறு 1/4 தேக்கரண்டி

முந்திரி பருப்பு தேவையானால்

தேங்காய் துருவல் மூன்று தேக்கரண்டி

1 1/2 கோப்பை வெந்த சாதம், ஆறவைத்தது

செய்முறை

வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, பட்டை கிராம்பு, சோம்பு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை முந்திரி வதக்கவும்.

அத்துடன் பிரியாணி மசாலா போட்டு கேரட்டை போட்டு மெதுவான தீயில் தண்ணீர் ஊற்றாமல் மூடிவைக்கவும்.

வெந்தவுடன் தேங்காய் போட்டு பிரட்டவும்.

உப்பு போட்டு பிரட்டி பிறகு சாதத்துடன் கலந்து கொத்தமல்லித் தழை தூவி, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பரிமாறவும்.

Series Navigation