This entry is in the series 20061006_Issue

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பூரண ஓய்வெடுக்க
நேரம் நெருங்கி விட்ட தெனக்கு!
அனுப்பி வைப்பீர் விடையளித்து
எனதருமைச் சகோதரரே!
புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி
அனைவருக்கும்!
ஈதோ! என் வீட்டுச் சாவி,
எடுத்துக் கொள்வீர்!
விட்டுச் செல்கிறேன் என்,
வீட்டுச் சொத்துக்கள் எல்லாம்!
கடைசியாய் வழியனுப்பும் உமது
கனிவு மொழிகளுக்கு
வேண்டி நிற்கிறேன்!
நீண்ட காலமாக
அண்டை வீட்டு அயலவராய்
ஒன்றா யிருந்தோம்!
என் வாழ்வில் பிறர்க்கு நான்
கொடுத்ததை விட,
எனக்குக்
கிடைத்தவை மிகையாம்!
பொழுது புலர்ந்தது இன்று.
வெளிச்சம் தந்த விளக்கு,
அணைந்தது,
வீட்டு மூலை யிருட்டில்!
உத்தரவு
எனக்கு வந்து விட்டது!
தயாராகி விட்டேன்,
இறுதிப்
பயணம் துவங்க!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 1, 2006)]

Series Navigation