கீதாஞ்சலி (90) மரணம் கதவைத் தட்டும் போது!

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஎன்ன வழங்கப் போகிறாய் நீ,
மரண தேவன் வந்து,
உன்னில்லக் கதவைத் தட்டும்
அந்நாள்?
விருந்தாளிக்கு வாழ்க்கை
உருவாக்கிய என் முழுச் சடலத்தைத்
தருவதாக முன் வைப்பேன்!
ஒருபோதும் மரண தேவனை,
வெறுங்கையுடன்
திருப்பி அனுப்ப
விரும்ப வில்லை நான்!
இலையுதிர் காலப் பொழுதிலும்,
வேனிற் கால இரவுகளிலும்,
நானிதாய்ச் சுவைத்த
நாட்களை எல்லாம்,
நானளிப்பேன் அவன் முன்பாக! என்
ஊதியங்கள் அனைத்தையும்,
உடன் அளிப்பேன்!
சுறுசுறுப்பாய் உழைத்தென் வாழ்வில்
பெருக்கிய வற்றையும்,
தருவேன் அவனுக்கு,
என் ஆயுள்
தருணம் முடியும் தறுவாயில்,
மரண தேவன்
வருகை தந்தென்,
வாசற் கதவைத் தட்டும் போது!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 10, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா