காலை நகரம்

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

மத்தளராயன்


நாயர் கடையிலே நாலுலிட்டர் பாலூற்றிச்
சாயா பருப்புவடை சாப்பிட்டுப் – ‘போய்யா.. ‘
நகைத்தேதான் மேல்படர்ந்த நாயர் கரம்விலக்கிப்
புகைத்தபடி போகும் அலி.

சைக்கிளில் பின்னிருக்கை சேர்த்தேதான் கட்டிய
பைக்கு வெளியிலே ஆட்டின்கால் – மொய்த்திட்ட
ஈவிலக்கிச் சொல்லுவான் யாரிடமோ வீட்டிலவள்
ஈன்றாளே ஆண்குழந்தை என்று.

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்