This entry is in the series 20021215_Issue

-சித்தகவி


தாயகம் சென்று வந்ததில் தானாய்
விழுந்த அற்புத நெள்ளிக்கனியாய்
எதிர்பாராது கிடைத்த ‘அழகான அழகுி ‘
சித்திரம் தீட்டிய செம்மண் குடுவை
நான் ஒன்றும் அவ்வையும் இல்லை
அவள் ஒன்றும் அதியனும் இல்லை
கொடுத்தார்க்கு புரியுமோ கலையின் சூட்சுமம்
குரங்கின் கையில் பூமாலையாய்
சிதறியதே பொன்மானின் வாழ்வு
எடுத்துக் கெடுத்தீரே கனிவுடன் பேணுவீரோ
என் காதல் கலைமயிலை
சித்திரம் தீட்டிய செம்பொண் மயில்
எக்காலம் என் கண்ணில் களிநடனம் புரியும்

-சித்தகவி
msksam@hotmail.com

Series Navigation